Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்குப் பதிலாக இவர்கள் தலமை வாய்த்திருந்தால் ஈழதம் எப்படியிருந்திருந்திருக்கும்

Featured Replies

ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு என்பது நமக்குத் தெரியும்.ஒரு வைரக்கடையின் சொந்தக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பார் என்பதும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், நாடு முழுவதும் வைரச் சுரங்கங்களை வைத்திருக்கும் ஒரு நாடு உலகின் கோடீஸ்வர நாடாகத்தானே இருக்கவேண்டும்.

ஆனால் அந்த நாடு உலகின் மிக ஏழையான நாடுகளில் ஒன்று என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.அந்த நாடு ஆப்பிரிக்காவின் இருண்ட நாடுகளில் ஒன்று என்றால் சுலபமாக நம்பி விடுவீர்கள்!

‘அயன்’ திரைப்படத்தில் சூர்யா வைரம் கடத்துவதற்காக ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிற்குச் செல்வாரே அதே காங்கோ தான் வைரம் கொட்டிக் கிடக்கும் அந்த நாடு. குவிந்து கிடக்கும் வைரத்திற்காகவும், இன்னபிற கனிமங்களுக்காகவும் உள்நாட்டுத் தீவிரவாதிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் அங்கு நடத்திய போரில் காங்கோவின் உள்நாட்டு மக்களில்54லட்சம் பேர் கடந்த பத்தாண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைப் புரிந்துகொள்ள காங்கோவின் வரலாற்றைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்வது அவசியம்.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு காங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Cango). மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவைச் சுற்றிலும் ருவாண்டோ, தான்சானியா, சாம்பியா நாடுகளும் ஒருபுறம் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது.

இயற்கை அன்னை காங்கோவிற்கு வளத்தை வாரி வழங்கியிருக்கிறாள்.

காங்கோ 75 சதவீதம் காடுகளால் ஆனது. தேக்கு, கருங்காலி போன்ற விலையுயர்ந்த மரங்கள் அங்கு செழித்து வளர்கின்றன.நீர்வளமும் அதிகம்,இருப்பினும் மொத்த நிலப்பரப்பில் ஐந்து சதவிகிதத்தை மட்டுமே விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இயற்கை ஒன்றைக் குறைவாகக் கொடுத்தால் மற்றொன்றை வாரிக்கொடுத்து சமன்படுத்தி விடும் என்பதற்கு காங்கோ ஒரு உதாரணம். வைரம், தங்கம், டாண்டலம், வெள்ளி, யுரேனியம், துத்தநாகம், நிலக்கரி, ஈயம், கோல்டான் என கனிம வளங்கள் காங்கோவின் நிலப்பரப்பெங்கும் கொட்டிக் கிடக்கிறது. காங்கோ ஆறும் அட்லாண்டிக் கடலும் கலக்குமிடத்தில் கச்சா எண்ணெய் கணக்கில்லாமல் கிடைக்கிறது.

அரேபிய நாடுகள் கச்சா எண்ணெயை மட்டும் வைத்துக் கொண்டே ‘கல்லா’ கட்டும்போது, இத்தனை வளங்கள் கொண்ட காங்கோ செல்வத்தில் மிதக்க வேண்டுமே?ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கனிமங்களுக்காக உலக நாடுகள் செய்த சூழ்ச்சியில் இன்று காங்கோவின் சொந்த மக்களே அகதிகளாய்த் திரிகிறார்கள்.

எல்லா மூன்றாம் உலக நாடுகளைப் போலவும் காங்கோவும் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுதான். 1960 ஜூன் மாதம் வரை காங்கோவை பெல்ஜிய அரசு தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது. உலக நாடுகள் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்து விடுபட்டுக் கொண்டிருந்த நேரம் அது. பெல்ஜியமும் நடையைக் கட்ட, உள்ளூர் புரட்சிப்படை ஒன்றின் தலைவராக இருந்த லுமும்பா காங்கோவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தனை வளமுள்ள ஒரு நாடு அமைதியாக இருந்தால் அதைக் கொள்ளையடிப்பது சிக்கலாயிற்றே. ஊர் இரண்டுபட்டால்தானே கூத்தாடி வாழ முடியும்? உள்ளூர் தீவிரவாதப் படைகளை உலக நாடுகள் தூண்டிவிட்டன. தீவிரவாதிகளோடு, பெல்ஜிய கூலிப்படையும் இணைந்து லுமும்பாவை இரண்டே மாதத்தில் கொலை செய்தது.இதற்கு அமெரிக்காவும், ரஷ்யாவும் உதவி செய்தன. இந்த நாடுகளின் நோக்கம் காங்கோ மக்களின் நல்வாழ்வல்ல. காங்கோவின் கனிம வளங்களை யார் கொள்ளையடிப்பது என்ற போட்டிதான்.

அமெரிக்கா தனக்கு வசதியாக மொபிட்டு என்கிற சமையல்காரரை காங்கோவின் அதிபராக்கியது. மொபிட்டுவின் ஆட்சியில் காங்கோவில் ஊழல் தலைவிரித்தாடியது.பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போனது. தீவிரவாத அமைப்புகளும், மொபிட்டின் அரசும் வைரம் கடத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவி செய்தன.சொந்த நாட்டு மக்கள்சுரங்கங்களில் அடிமை வேலை செய்ய கட்டாயப் படுத்தப்பட்டனர். அவர்கள் செய்யும் கடினமான வேலைக்கு மிகமிகக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என வித்தியாச மில்லாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். கேள்வி கேட்பவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அரசியலில் ஒரு மாற்றமாக 1997-ம் ஆண்டு மொபிட்டுவைக் கவிழ்த்து விட்டு லானென்ட் கபிலா என்பவர் காங்கோவின் அதிபரானார். இதற்கு அண்டை நாடுகளான ருவாண்டா, அங்கோலா, எரித்ரியா போன்ற நாடுகள் உதவி செய்தன.காங்கோ மக்களுக்கு வாழ்க்கை இன்னமும் இருட்டானது.சொந்த நாட்டு வளங்களை அன்னிய நாடுகளுக்கு விற்கவும்,பெண்களுடன் பொழுதைக் கழிக்கவும் மட்டுமே செய்தார் லானென்ட் கபிலா.உலக நாடுகள் ஏழை நாடு என்ற கரிசனத்தில் (?) காங்கோவிற்கு வழங்கும் உதவியை மொத்தமாக விழுங்கினார்.

நாடு முழுவதும் புரட்சிப்படைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றின.

1998-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காங்கோ புரட்சிப்படை காங்கோவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தது. இதற்கு அண்டை நாடுகளான ருவாண்டாவும், உகாண்டாவும் உதவி செய்தன.

இந்த நாடுகள்தான் லானென்ட் ஆட்சியைப் பிடிப்பதற்கும் உதவி செய்தன என்பதன் மூலம் இந்த நாடுகளின் நோக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.காங்கோ புரட்சிப் படையை கபிலாவின் அரசு ஜிம்பாப்வே, நமீபியா, அங்கோலா போன்ற நாடுகளின் உதவியுடன் எதிர்கொண்டது.

புரட்சிப் படையும் அதற்கு உதவி செய்த நாடுகளும் காங்கோவின் வளத்தை மட்டுமே நோக்கமாக வைத்திருந்தன. ஏழு நாடுகள் சேர்ந்து வைரத்திற்காக காங்கோ மக்களின் மீது நடத்திய இந்தப்போரில் 54 லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதுதான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் யுத்தம் என கூறப்படுகிறது. காங்கோவின் மொத்த மக்கள் தொகையே ஆறு கோடிதான்.கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் இறந்ததும் இந்தப்போரில் தான். போர் தொடர்ந்து நடைபெறவே 2001 லானென்ட் கபிலா புரட்சிப் படையால் கொலை செய்யப்பட்டார்.

அவரது மகன் ஜோசப் கபிலா ஆட்சியைப் பிடித்தார். போரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அவர் போரை நிறுத்த முயற்சித்தார்.

ஆனால் ருவாண்டா,போரை தொடர்ந்து ஊக்குவித்தது.இந்த ருவாண்டாதான் கோல்டான் என்னும் கனிம வளத்துக்காக மற்றொரு தெற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவின் (இதுவேறு காங்கோ) இருவேறு பழங்குடி மக்களுக்குள் கலகம் விளைவித்து பத்து லட்சம் பேரை கொலை செய்தது. 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ருவாண்டா புரட்சிப் படைக்கும் ஜோசப் கபிலா தலைமையிலான அரசுக்கும் நடைபெற்ற போர் உள்நாட்டுப் போர் என்று பிறநாடுகள் தலையிட மறுத்தன. ஆனால் இது பன்னாட்டுப் போர் என்பதும், இந்தப் போர் வைரத்தை குறிவைத்தே நடத்தப்பட்டது என்பதும் உலக நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிந்தே இருந்தது.

முதல்முறையாக 2006 ஜூலை மாதம் காங்கோ ஜனநாயகக் குடியரசில் தேர்தல் நடைபெற்றது.ஜோசப் கபிலா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவரே அறிவித்தார்.

ஒருவழியாக இந்தப் போர் 2003-ல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

போரில் அனாதையாக்கப்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் தெருவில் திரிகின்றன.போரில் சிதைக்கப்பட்ட 5லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் வாழ வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக சொந்த அரசே மக்களை மிரட்டி வேலைவாங்கும் கொடுமை இன்னமும் தொடர்கிறது. தீவிரவாதத்திற்கு தினமும் நூற்றுக்கணக்காக மக்கள் பலியாகி வருகின்றனர்.

ஊட்டச்சத்துக் குறைவாலும், தீர்க்க முடிகிற தொற்றுநோய் போன்ற பிரச்னைகளால் மட்டும் மாதந்தோறும் ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்து போவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.காங்கோ மக்கள் இப்படி செத்துக் கொண்டிருக்க... காங்கோவின் வளங்களை வைத்து ஐரோப்பிய நாடுகள் கொள்ளை கொள்ளையாய் இலாபம் சம்பாதிக்கின்றன. வலியவர்கள் மட்டுமே வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்ட விதியின்படி அங்கு நடப்பவற்றை உலகம் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.இப்போதைக்கு அந்த மக்களுக்கு விடிவு வரும் என்று தோன்றவில்லை.

அடுத்த முறை தங்கமோ,வைரமோ வாங்குவதற்கு நகைக்கடைக்குப் போவதற்கு முன் ஒருநிமிடம் யோசியுங்கள். நீங்கள் வாங்கப் போகும் நகையின் ஒவ்வொரு மில்லிகிராமிலும் பாவப்பட்ட அந்த ஆப்பிரிக்க மக்களின் இரத்தமும், கண்ணீரும் கலந்திருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

படங்கள் பார்வையிட......

http://www.thedipaar.com/news/news.php?id=19282

Edited by easyjobs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.