Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்கு பிழைப்பில்லை; சிங்களருக்கு சுற்றுலாத் தலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்கு பிழைப்பில்லை; சிங்களருக்கு சுற்றுலாத் தலம்!

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரினால் உள்நாட்டிலேயே அகதிகாளாக்கப்பட்டு, தங்கள் வாழ்வுடங்களையும், வசித்த இல்லங்களையும், தங்கள் காணிகளையும் இழந்து, பிழைப்பின்றி தமிழர்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களுக்காக சுற்றுலாத் தலங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறது சிறிலங்க இராணுவம்!

img1101007043_1_1.jpg

யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் கடலோர பட்டிணமான காங்கேசன்துறை ஒரு நேரத்தில் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தொரு நகராகும். தமிழர்களுக்கு எதிரான போரில் அங்கு வாழ்ந்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டு, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அந்தப் பகுதிதான் இன்று ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

தல்சேவனா (பனை நிழலில்) என்ற சிங்களப் பெயருடன் 9 சொகுசு அறைகளுடனும், 22 அரை-சொகுசு அறைகளுடனும் கட்டப்பட்டுள்ள இந்த விடுமுறைத் தலத்தை சிறிலங்க இராணுவம் கட்டியுள்ளது. இதற்கான நிதி? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு என்று பெயரில் அயல் நாடுகளில் இருந்து பெறப்படும் நிதியைக் கொண்டுதான் இதைக் கட்டியிருப்பார்கள்! சிறிலங்க அரசிற்கு வேறு எங்குள்ளது நிதி?

இந்தியாவின் தர்மத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுதரப்பட்ட 2.6 பில்லியன் நிதியைக் கொண்டு, இதுவரை வாங்கிய அந்நியக் கடன்களைக் கட்டி வருகிறது. மேம்பாட்டிற்கு? அன்னிய நாடுகளிடம் கையேந்தலே. அதற்காகத்தானே ஐ.நா.சபை கூட்டத்திற்குப் போனபோதும் கூக்குரலிட்டார் அதிபர் ராஜபகச்? வாருங்கள் இலங்கைக்கு, செய்யுங்கள் முதலீடு என்று கூவினார். அப்படியும் அவர் வைத்த விருந்திற்குக் கூட எந்த அரசுப் பிரதிநிதியும் வரவில்லை!

ஆக, தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்த மறுக்கும் சிங்கள சிறிலங்க அரசு, அங்கெல்லாம் பல ஆயிரம் சிறிலங்க இராணுவத்தினரை நிறுத்திவைக்கும் உயர் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கி வருகிறது. இப்போது அப்படிப்பட்ட பகுதிகளுக்கு இந்தியாவின் வழியில் நின்று இராணுவப் பகுதி (Cantonment) என்று அழைக்கத் துவங்கியுள்ளது.

மற்றொரு பக்கத்தில், போரில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு ஆயிரம் சதுர அடியில் சொகுசான வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ராஜபக்ச.

img1101007043_1_2.jpg

ஆனால் பல இலட்சக்கணக்கில் அகதிகளாகி தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை என்ன? அவர்கள் வாழ்ந்த வீடுகள் குண்டு வீச்சில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. வீடுகள் இருந்த இடத்தில் நான்கு கம்புகளை நட்டு ஒரு கூரையை எழுப்பி, அதன் மீது இந்திய அரசு மிகுந்த காருண்யத்துடன் அளித்த துத்தநாகத் தகடுகளை கட்டி, சுற்றுச் சுவரமைக்க வழியின்றி, தங்கள் ஆடைகளைக் கொண்டு திரைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். கழிவுகளை அகற்றக்கூட இடமின்றி, இரவு வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை.

இதையெல்லாம் தாண்டி, அன்றாட வாழ்விற்குத் தேவையான உணவு உட்பட அத்யாவசியப் பொருட்களை வாங்க உழைக்கலாம் என்றால், உழைப்பதற்கு காணியில்லை, அது சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உழைக்க வேறு வழியில்லை. என்ன செய்வார்கள்?

கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் தமிழ்ப் பெண்கள்

இதோ பன்னாட்டு செய்தி நிறுவனமான ஏஎஃப்ஐ கூறுகிறது: அவர்கள் போரின்போது புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு மாத ஊதியம் பெற்று வருகிறார்கள். உலகத்தில் எந்த இடத்திலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஆனால் ஈழத் தமிழ்ப் பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்! நிறுவனங்களால் அல்ல, அவர்களாகவே முன்வந்து அந்த ஆபத்தான வேலையை ஏற்றுள்ளார்கள்!

வான்மதி ஜெகதாஸ், வயது 37, இவருடைய கணவரும், தாயும் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். கணவர் விவசாயியாக இருந்தவர், இன்றைக்கு இல்லை. தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள மன்னார் மாவட்டத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் சுவிஸ் ஃபெண்டேஷன் ஃபார் மைன் ஆக்ஷ்ன் (FSD) என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு மாதத்திற்கு 200 அமெரிக்க டாலர் ஊதியம் பெறுகிறார்.

“என்னுடைய கிராமத்தில் அதிகமான சம்பாத்தியத்தைத் தரும் வேலை இதுதான்” என்கிறார் விதவை ஜெகதாஸ். இதுவரை 700 கண்ணி வெடிகளை அகற்றியுள்ளாராம்!

img1101007043_2_1.jpg

கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் பெண்களுக்கும் பயிற்சி தந்து வருகிறோம் என்று இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் நிகல் பீக்காக் கூறியுள்ளார்.

இப்படி தங்கள் வாழ்விற்கு உறுதுணையாக இருந்த குடும்பத் தலைவரை இழந்த விதவைகளின் எண்ணிக்கை வடக்கிலும், கிழக்கிலும் 90,000 பேர் என்கிறது அதிகாரப்பூர்வ புள்ளி விவரம்.

“இப்படி விதவைளாகியுள்ள குடும்பங்களின் சுமைகளைத் தாங்கும் பெண்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் 30 வயதிற்குக் கீழானவர்களே” என்கிறார் விசாக தர்மதாசா. இவர் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் இயக்குனர்.

இது ஒரு பெருமைக்கு‌ரிய பணி என்கிறார் முல்லைத் தீவு மாவட்டத்தின் அரசு முகவரான இமால்டா சுகுமார்!

“கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் அதிக ஊதியம் கிடைக்கிறது. கோழி வளர்ப்பது போன்ற வேலைகளையெல்லாம் விட, இது மரியாதைக்குறிய பணியாகவே கருதப்படுகிறது” என்று இமால்டா கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட பணியில் ஈடுபடுவது உங்களுக்கு அச்சமாக இல்லையா என்று அந்தச் செய்தியாளர் கேட்டுள்ளார். அதற்கு, “எனக்கு பயமேதும் இல்லை என்று நான் கூறினால், அது பொய்யாகும்” என்று கூறியுள்ளார் இப்பணியில் ஈடுபடும் புஷ்பராணி தவரத்னம். இவருக்கு வயது 38.

img1101007043_2_2.jpg

“பணியில் ஈடுபடும்போது அச்சம் இருக்கும். எல்லா கண்ணி வெடிகளையும் அகற்றவும் முடியாது. ஆனால், நான் அகற்றும் ஒவ்வொரு கண்ணி வெடியும் பத்து பேரின் உயிரைக் காக்கிறது, குறைந்தது ஒருவரின் உயிரையாவது காக்கும்” என்றும் புஷ்பராணி கூறியுள்ளார்.

இன்னும் 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளதால், தங்கள் குடும்பத் தலைவனை இழந்து வாழும் தமிழ் அபலைப் பெண்களுக்கு வாழ்வாதார உத்தரவாதம் உள்ளது! ஆனால் இதற்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கிறார் நிகல் பீக்காக்.

“தமிழர்களும் எங்கள் மக்களே” என்று கூறினாயே, இப்போது அந்த மக்கள் நிலை இவ்வாறு உள்ளதே, இதற்காக என்ன செய்தாய் என்று அதிபர் ராஜபக்சவிடம் கேள்வி கேட்டுவிடாதீர்கள். பதில் தயாராக இருக்கிறது. அதற்காகத்தான் இணக்கப்பாடு ஆணையம், கட்டுமான வசதிகள் மேம்பாடு என்று அடுக்குவார். அவர் அடுக்காவிட்டாலும் தமிழின அழித்தலில் அவருக்கு முழுமையாகத் துணைபோன இந்திய அரசு உள்ளதே. அது கூறும்: தமிழர்களின் மறுவாழ்வை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்!

காங்கேசன்துறை சுற்றலா தலமாகிறது. முல்லைத் தீவு கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமை சீனத்திற்கு தரப்படுகிறது. தமிழரின் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவர்களுடைய நகரங்களும், கிராமங்களும் இராணுவப் பகுதிகளாகி வருகின்றன. ஆனாலும் தமிழர்களுக்கு மறுவாழ்வுப் பணி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்! இதுபற்றியெல்லாம் கேள்வி யாரிடம் எழுப்புவது?

ஐ.நா.என்றொரு அமைப்பு உள்ளது. அதன் பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனக்கு ஆலோசனை கூற நிபுணர் குழு அமைத்தார். அது இன்னமும் தனது முதல் கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. எங்கிருந்து கிட்டும் தமிழர்களுக்கு நியாயம்?

ஈழத் தமிழர்களுக்கு ஒளிமிகுந்த எதிர்காலம் இருக்கலாம், ஆனால் அவர்களின் நிகழ்காலத்தின் மீது காரிருள் சூழ்ந்துள்ளது உண்மை.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1010/07/1101007043_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.