Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்காக யாரும் மகிந்தவிடம் மண்டியிடக் கூடாது - சரத் பொன்சேகா தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்காக யாரும் மகிந்தவிடம் மண்டியிடக் கூடாது - சரத் பொன்சேகா தெரிவிப்பு

திகதி:09.10.2010

தனக்காக மனைவியோ பிள்ளைகளோ சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரி மண்டியிடக் கூடாது என்று வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறையில் நேற்று அவரது மனைவி அனோமா பொன்சேகா சென்று பார்வையிட்டபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

“நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. எனக்காக மனைவியோ பிள்ளைகளோ மன்னிப்புக் கேட்டகக் கூடாது“ என்று சரத் பொன்சேகா கூறியதாக அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

“ சரத் பொன்சேகா எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே நான் அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரப் போவதில்லை.

அவர் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

சிறையில் வழங்கப்படும் உணவுகளையே உண்கிறார். அவர் மிகவும் பலமான மனிதர்“ என்று அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமோ சரத் பொன்சேகா அல்லது அவரது குடும்பத்தினர் மன்னிப்புக் கோரினாலேயே அவரை விடுவிக்க முடியும் என்று முரண்டு பிடித்து வருகிறது.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் டி.எம் ஜெயரட்ணவும் சரத் பொன்சேகாவின் மனவியை மன்னிப்புக் கோருமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

“ வீதிகளில் இறங்கி அலைந்து திரிந்து போராட்டங்களை நடத்தி எதற்காக நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

பொன்சேகாவின் மனைவியை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். எல்லாமே ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும் என்று பிரதமர் டி.எம்.ஜெயரட்ண கூறியுள்ளார்.

அரசங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவருமே இப்போது சரத் பொன்சேகா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

சரத் பொன்சேகா விவகாரம் அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்தத்தை விடவும் அதிகமான எதிர்ப்புணர்வுகளைத் தோற்றுவித்துள்ளதால் அவரை எப்படியாவது சிறையில் இருந்து வெளியே விடுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

ஆனால் அரசாங்கமே சிறையில் அடைத்து விட்டு விடுவிப்பது அவமானத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் சரத் பொன்சேகாவின் குடும்பத்தினரை மன்னிப்புக் கேட்டுகும் படி அழுதங்களைக் கொடுத்து வருகிறது என்று கொழும்பு அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சங்கதி

Edited by கறுப்பி

பொன்சேகாவுக்கு பின்னால் அமெரிக்காவும் ஐ.தே. க, வும் இருக்கலாம். அவர்களுக்கு இப்பொழுது மகிந்தர் கூட்டத்தையும் சீனாவையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். அதற்கு பொன்னர் தேவை.

இந்த வலையுள் தமிழர் தரப்பும் நுணுக்கமாக விளையாட வேண்டிய தேவை உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.