Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் சிங்களக் குடும்பங்களின் மீள்குடியேற்றம் உடனடி சாத்தியமில்லை

Featured Replies

முப்பது வருடங்களின் பின்னர் மீளக்குடியமரப் போகின்றோம் எனக் கூறிக் கொண்டு அவசர, அவசரமாக யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்களக் குடும்பங்களை உடனடியாக இங்கு குடியேற்றும் சாத்தியங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் திட்ட வட்டமாகத் தெரிவி

குடியேறுவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் கருத்துரைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, பொருளாதார அபிவிருத்தி அமைச் சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப் புக் குழுத் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் மீள்குடி யேற்றுமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங் கள மக்களின் நிலை குறித்து யாழ். அரச அதிபரிடம் நேற்றிரவு தொடர்பு கொண்டு கேட்டபோது இதுதொடர்பில் தான் அமைச்ச ருக்குத் தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பிவைத்திருப்ப தாக அவர் உதயனுக்குத் தெரி வித்தார்.

அரச அதிபர் அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் சாராம்சம் வருமாறு:

எந்தவித முன்னறிவித்தலும் இன்றிச் சிங்கள மக்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி யாழ். ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள் ளனர். இந்த மக்களில் சிலர் இங்கு முன்னர் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர் களுக்குச் சொந்தக் காணிகளோ, சொந்த வீடுகளோ இங்கிருக்கவில்லை. இந்நிலையில் தம்மை மீள்குடியேற்றுமாறு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இவர் கள் திடீரென யாழ்ப்பாணம் வந் துள்ளனர்.

இதனால் யாழ். மாவட்டத் தின் அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றம் கேட்கின்ற மக் களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரச சட்ட திட்டங்கள் எதுவு மில்லை.

எனவே, இங்கு வந்துள்ள சிங் கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாகச் சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல. அத்துடன் அந்த மக்கள் தொடர்ந்தும் ரயில் நிலையத்தில் தங்கியிருப்பதென் பதும் அவர்களுக்கு ஆரோக்கிய மானது இல்லை.

இதேவேளை, சிங்கள மக்களி ன் மீள்குடி யேற்றம் தொடர்பாக உடனடிச் சாத்தியப்பாடு எதுவுமில்லை என் பது குறித்து அறிக்கையொன்றை அரச அதிபர் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்துக்கும் அனுப்பிவைத்திருந்தார்.

[2010-10-10 08:31:40] http://www.uthayan.com/Welcome/full.php?id=4030&Uthayan1286687500

  • தொடங்கியவர்

திடீரென மூட்டை முடிச்சுகளுடன் சிங்கள மக்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்துள்ளமை எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளதுடன் அதன் பின்னூட்டல் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் எல்லோருடைய மனங்களிலும் ஊடுருவச் செய்துவிட்டது.

முஸ்லிம் மக்கள்

யாழ்ப்பாணத்தில் 1983 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்த இடம்பெயர்ந்தனர். சொந்தக் காணியில், சொந்த வீட்டில் வாழ்ந்த அந்த மக்கள் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆக 55 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர்ந்துள்ளனர். தாம் தற்போது வாழ்கின்ற இடங்களில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்ற அவர்கள் அந்தத் தொழில்களை கைவிட்டு யாழ்ப்பாணத்தில் என்ன செய்து உடனடியாக எந்தத் தொழிலை ஆரம்பிப்பது எப்படி. அதுவரைக்கும் தம்மைக் கட்டியெழுப்புவது எப்படி? அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்த வழி என்றெல்லாம் ஆற அமர சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயர்பாதுகாப்பு வலயம்

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அரசு தம் வசப்படுத்தியுள்ள வலி. வடக்குப் பகுதியில் இன்னமும் தமிழ் மக்களை அதுவும் அவர்களது சொந்தக் காணியில் மீள்குடியேற்றம் செய்யாமல் 20 வருடங்களுக்கு மேல் இழுத்தடித்து வருகின்ற இந்த அரசாங்கம் சொந்தக் காணிகளோ, வீடுகளோ, இல்லாத இவர்களை குடியேற்றம் செய்யும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அந்த மன உறுதியை ஊட்டியவர்கள் யார்? என்ற சந்தேகங்களும் சாதுவாக எழுந்துள்ளது.

சிங்கள மக்கள்

1. " இன்னும் ஓரிரு தினங்களில் பெரிய இடத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கும். அதற்காகத் தான் காத்திருக்கிறோம்''

2. அத்துடன் தமது உடைமைகளையும் ஓட்டோ, மோட்டார் சைக்கிள், ரி.வி. போன்ற கூடவே கொண்டு வந்திருக்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் மீளவும் திரும்ப மாட்டார்கள் போலத்தான் தென்படுகின்றது.

3. இங்கு வந்துள்ள மக்களில் அநேகமானவர்களுக்கு தமிழ் நன்கு தெரியும். சரளமாகக் கதைக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பேசாமல் ஓரிடத்தில் பேசாப் பொருளாய் உள்ளார்கள்.

4. மல்காந்தி, சௌந்தலா மற்றும் இராணுவத்தில் கோப்ரல் தரத்தினையுடைய விக்கிர மசிங்க இந்த மூவரும்தான் அங்கு வருகின்ற ஊடகங் களுக்குக் கருத்துச் சொல்லுகின்றவர்களாக உள்ளனர்.

5. ஏனையவர்களுடன் கதைக்கவே விடமாட்டார்கள்! அப்படி மற்றவர்களுடன் கதைக்க முற்பட்டாலும் ”நீங்கள் அந்த மூன்று பேரிடமும் போய் எல்லா தகவல்களை யும் கேளுங்கள்'' என்று கூறி நழுவி வருகிறார்கள்.

6. வந்திருப்பவர்களில் வயது முதிர்ந்தவர்கள் தாம் முன்னர் யாழ்ப்பாணத்திலே வசித்ததற்கு ஆதாரமாக யாழ்ப்பாண முகவரிகளைக் கொண்ட "புத்தம் புதிய' அடையாள அட்டைகளையும் காண்பிக்கிறார்கள். அந்த அடையாள அட்டைகள் ஒரு மாதகாலத் துக்குள்ளேயே பெறப்பட்டுள்ளன என்பதுவும் கவனத்தை ஈர்த்தன.

இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.

தாம் முன்னர் வாழ்ந்த இடங்களைத் தருமாறு கோரவில்லை என்றும் தமக்கு அரச காணிகளைப் பகிர்ந்து தருமாறே அரச அதிபரிடம் மனுக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் எங்கு அரச காணிகள் உள்ளன என்ற கேள்வியும் அடுத்த கட்டத்தில் எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் அனேகமானவர்களுக்கே சொந்தக் காணிகள், வீடுகள் இல்லாத நிலையில் உள்ளனர். அவர்களில் பலர் ரயில் ஓடிய பாதைகளில் சிறிய கொட்டில்களை அமைத்து தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மீள்குடியேற்ற நாடகத்தின் கருப்பொருள் என்ன? தயாரிப்பாளர்கள் யார்? என்பதெல்லாம் வேஷம் கலைக்கும் போது எல்லோரும் தெட்டத் தெளிவாக உணர்வார்கள். இதுவே உண்மையாகும்.

http://www.uthayan.com/Welcome/afull.php?id=538&L=T&1286706114

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.