Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கை: 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும்,கனேடியன் இன்ரர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130 ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள்,13 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும், கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள், தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலிஸார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும், தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது.

அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும், கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும், கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.

அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்திலிருந்து ராம்http://www.tharavu.com/2010/10/130.html

கனேடிய தேசிய பத்திகையான குளோப் அண்ட் மெயிலில் வந்த கட்டுரை

http://www.theglobeandmail.com/news/national/canada-aids-in-thai-arrest-of-tamil-migrants/article1752548/

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழர்கள்

ABC Lateline children in detention in

Edited by akootha

ஓட்டாவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து இன்று எங்களைத் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாக சில தகவல்களைத் தந்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டவர்களில் 126 வரையிலானவர்கள் அகதியாக புகலிடம் கோரி உள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் நான்கு வயதுக்கு உட்பட்ட பதினெட்டுக் குழந்தைகளில் இரு மாதம் நிரம்பிய குழந்தையும் அடங்குகின்றது. 21 பெண்களும் 15 ஆண்களும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர். 4 கற்பிணித் தாயமார்களும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வருகின்றனர். எந்த ஒரு அகதிக் கோரிக்கையாளரும் கம்பிகளுக்குப் பின் வைக்கப்பட்டிருத்தல் கூடாது என்றும் தேவையானதை விட அதிகமான நேரம் வைக்கப்படக் கூடாது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகளுக்கான ஆணையம் நம்புகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலதிகத் தகவல்கள் கிடைப்பின் தொடர்ந்து அறியத் தருகின்றோம்.

கனேடிய தமிழர் பேரவை

CTC receives update from UNHCR on Tamils arrested in Thailand:

United Nations High Commissioner for Human Rights (UNHCR) from Ottawa got back to us this morning and informed about the latest situation in Thailand. According to the info they received from the detainees; 126 people are asylum seekers . There are 18 children under the age of 4 the youngest one is 2 months old,21 girls and 15 boys are under the age 18, 4 Women are pregnant. UNCHR officials have gained access to visit them and are currently providing assistance to the detainees. The UNCHR's official stance is that no asylum seeker should be kept behind bars for an indefinite period of time or longer period than is necessary. We will keep you posted with further info when it is available.

Canadian Tamil Congress

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.