Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாயத்தை மனிதவுரிமை விழுமியங்களிலிருந்து விலக்கி வழிநடத்திச் செல்லும் இந்திய செயலாளர் நாயகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாயத்தை மனிதவுரிமை விழுமியங்களிலிருந்து விலக்கி வழிநடத்திச் செல்லும் இந்திய செயலாளர் நாயகம்

சர்வதேச அமைப்புக்களிலிருக்கும் முக்கிய புள்ளிகள் சர்வதேச மனிதவுரிமை விழுமியங்களுக்கு எதிராகச் செயற்படும் மற்றுமொரு கைங்கரியத்தை கடந்த வெள்ளியன்று வெளிவந்த கார்டியன் பத்திரிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இம்முறை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இந்தியாவைச் சேர்ந்த அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அவர்கள் , "54 அங்கத்துவ நாடுகளினதும் மனிதவுரிமை பற்றிக் கவலைப்படுவதோ அல்லது நடவடிக்கை எடுப்பதோ தமது வேலையல்ல" என்று கூறியிருப்பதன் மூலம் முக்கிய சர்வதேச அமைப்பொன்றினை மனிதவுரிமை விழுமியங்களுக்கெதிராக வழிநடத்திச் செல்ல முற்பட்டிருக்கிறார். பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளில் நடைபெற்று வருகின்ற மனிதவுரிமை மீறள்களுக்கெதிராக, குறிப்பாக இலங்கையில் அண்மையில் நடந்தேறிய இனப்படுகொலைக்கெதிராக ஒரு கண்டணத்தையேனும் தெரிவிக்கும்படி அதன் செயலாளர் நாயகத்திடம் அவ்வமைப்பின் உயர் அதிகாரிகள் பலர் விடுத்த கோரிக்கைகளையும் அவர் உதாசீனம் செய்திருப்பதாக கார்டியன் குறிப்பிட்டிருக்கிறது.

செயலாலர் நாயகத்தின் இந்த தவறான வழிநடத்தல் பற்றிக் குறிப்பிட்ட அவ்வமைப்பின் உயரதிகாரி ஒருவர், "எதற்காக நாம் பொதுநலவாயத்தை அமைத்து மனிதவுரிமை விழுமியங்களைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டிருந்தோமோ, அவை எல்லாவற்றிலும் இப்போது தோல்வியடைந்திருக்கிறோம்" என்று கூறுகிறார்.

"மிகவும் தீவிரமான உள்முரண்பாடு ஒன்று பொதுநலவாய செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் ஏற்பட்டிருந்தது, அது அண்மைக்காலத்தில் அதன் உறுப்புரிமை நாடு ஒன்றில் நடந்தேறிய பாரிய மனிதவுரிமை மீறல் பற்றி செயலாளர் நாயகத்தின் அசாத்திய மவுனம்பற்றி அதன் உயர் அதிகாரிகள் விமர்சித்தபோது ஏற்பட்டது" என்று கார்டியன் மேலும் கூறுகிறது.

இந்த அதிகாரிகளின் கண்டனங்களுக்குப் பதிலளித்த செயலாளர் நாயகத்தின் அலுவலகம், மனிதவுரிமைகள் பற்றிக் கவலைப்பட வேண்டிய கடமை பொதுநலவாய அமைப்பிற்கு இல்லை என்று பதிலளித்திருக்கிறது. "மனிதவுரிமை மீறள்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய எந்ததேவையும் செயலாளர் நாயகத்திற்கு இல்லை " என்று அவரது செயலகத்தின் அறிக்கை மேலும் பதிலளித்திருக்கிறது.

இவ்வாறான கருத்துக்கள், முன்னர் இருந்த "மனிதவுரிமை மீறல்களுக்கெதிராக உரத்துக் குரல் குடுத்துவந்த பொதுநலவாய அமைப்பின்" பாரம்பரியத்திற்கெதிராக தற்போதைய செயலாளர் நாயகம் செயற்பட்டு வருவதைக் காட்டுவதாக மனிதவுரிமை செயற்பாட்டாளகளை மேற்கோள் காட்டியிருக்கிறது கார்டியன்.

பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடைபெறும் ஜனநாயக மறுப்பு மற்றும் கூட்டு மனிதவுரிமை மீறல்களுக்கெதிராக ஒருமித்த கண்டணம் தெரிவிப்பது மற்றும் அந்நாடுகளுக்கெதிராகச் செயற்படுவது போன்ற 1995 ஆம் ஆண்டின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி மேற்கொண்ட தீர்மானங்களுக்கெதிராக தற்போதைய செயலாளர் நாயகம் செயற்படுவதாகவும் அந்த மனிதவுரிமைச் செயற்பாட்டளர்களை மேற்கோள்காட்டியிருக்கிறது கார்டியன்.

பொதுநலவாய போட்டிகளில் நடந்தேறிய ஒருங்கமைப்புக் குறைபாடுகள் பற்றிய தீவிர விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் பிறகு, அதன் செயலாளர் நாயகத்தின் இந்த மனிதவுரிமை மீறள்களுக்கெதிரான அசாத்திய மவுனமும், திட்டமிட்ட அசமந்தப் போக்கும் தொடர்பான செய்திகள் வெளிவருவது, பொதுநலவாயத்தின் தேவை பற்றிக் கடும் கேள்விகளை எழுப்பி வருவதாக கார்டியன் கூறியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிகவும் கொடிய போர்க்குற்றங்களைப் புரிந்த நாடு என்று பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டதும், இன்றுவரை தமிழர்களுக்கெதிரான தொடர் இனவழிப்பை நடாத்திவரும் இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதியை தில்லியில் நடந்துமுடிந்த பொதுநலவாய நாடுகளின் போட்டியின் இறுதி நிகழ்வின் மதிப்பிற்குரிய அதிதியாக பொதுநலவாய அமைப்பு வரவேற்றிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னி இனவழிப்புப் போர் முடிந்த கைய்யுடன் ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலினால் கொண்டுவரப்படவிருந்த இலங்கை அரசுக்கெதிரான தீர்மானங்களை முறியடிப்பதில் இந்தியா மிகவும் தீவிரமாக முன்னின்று செயற்பட்டது.

1987 ஆம் ஆண்டின் இந்தியப்படைகளின் ஈழத்தமிழர் மேலான போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்பட்டும் இந்தியத் தளபதி ஒருவருக்கும், தற்போதைய ஐ. நா செயலாளர் நாயகத்துக்குமிடையிலான குடும்ப உறவை அண்மையில் தனது செய்தி ஆய்வொன்றில் குறிப்பிட்டிருக்கும் இன்னர் சிற்றி பிரஸ் எனும் செய்தியமைப்பு 1987 ஆம் ஆண்டில் இந்தியப் படைகளால் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் இன்னமும் விசாரிக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஐ. நா செயலாளர் நாயகர் அலுவலகத்தின் உயரதிகாரியான விஜய் நம்பியாருக்கும் , இலங்கையின் ராணுவ கட்டமைற்குமிடையிலான உறவையும் இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டிருப்பதோடு, வன்னி இனவழிப்புப் போரின் இறுதி நாட்களில் அதுபற்றி முடிவுகளை எடுக்கும் அதிகாரியாக விஜய் நம்பியார் செயலாளர் நாயகத்தினால் தெரிவுசெய்யப்பட்டதையும் இந்தச் செய்தியமைப்புச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று வாய்மொழிச் சாட்சியங்களாலும், தமது பத்திரிக்கைச் செவ்விகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட இந்திய கட்டமைப்பின் தலைவர்களான, பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, சிதம்பரம் ஆகியவர்களை இப்போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கவோ அல்லது அணுகவோ இவ்விசாரணைகளுக்கான சாட்சியங்களை தேடிவரும் இந்த சர்வதேச அமைப்புகள் இதுவரை முயற்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது முகம் வெளிப்பட்டு விடும் என்கிற அச்சத்தில் இலங்கையில் நடந்து முடிந்த போர்க்குற்றங்களுக்கெதிரான விசாரணைகளைத் தடுக்கும் முக்கிய தடைக்கல்லாக இந்தியாவே இருந்து வருகிறது என்கிற கருத்து சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளிடையே மிகவும் வலுப்பட்டு வருகிறது.

பொதுவாகவே விமர்சனங்களுக்கும், பேச்சுச் சுதந்திரத்துக்கும் இடம்கொடுக்காது அவற்றை தீவிரமாக அடக்கி வரும் இந்தியக் கட்டமைப்பு, பின்வரும் காரணத்தை முன்வைத்து விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை நீட்டித்துள்ளது : "புலம்பெயர் ஈழத் தமிழர்கள், இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை தமது இணையங்களில் பரப்பி வருவதோடு, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கும் , தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டதற்கும் இந்திய அரச பீடமும், உயர் அதிகாரிகளுமே காரணம் என்கிற கருத்தைப் பரப்பி வருவதாலும் , இந்த முக்கிய புள்ளிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுகிறது " என்பதாகும்.

அதேவேளை, "தமது தோல்விகளை முதலில் ஒப்புக்கொள்பவர்களே தமது பதிவிகளை முதலில் துறந்து ராஜினாமா செய்யவேண்டும்" என்ற மேற்கத்திய பாரம்பரியத்துக்கு அமைய அவ்வாறு வெளியேறியவர்களே முதன் முதலில் குற்றங்களில் ஈடுபட்டவர்களான ராஜபக்ஷ சகோதர்களுடன் சமரசமும் செய்துகொண்டதையும் நாம் பார்க்கிறோம், இதில் விசித்திரம் என்னவென்றால் அவ்வாறான சமரசங்களுக்கு அவர் சார்ந்திருந்த அமைப்புகளோ அல்லது நாடுகளோ அனுமதியும் அளித்ததுதான்.

வன்னி இனவழிப்புப் போரின் உச்ச கட்டத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்குமான அமெரிக்க தூதுவராகச் செயற்பட்டவரும், இந்திய - அமெரிக்க தோழமை உடன்படிக்கையைச் செய்ய முன்னின்றவருமான ரொபேட் பிளேக் அவர்கள் அதே காலப்பகுதியில் அமெரிக்க ராஜாங்க பிரதிச் செயலாலராகப் பதவியேற்றதும், அவரது அலுவலகமே முதன் முதலாக "இனப்படுகொலையை மறந்து" போர்க்குற்றவாளியான இலங்கை அர்சுடன் சமரசம் செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் எடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய சமாதான முயற்சிகளின் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டிய எரிக் சொல்கெயிம் அவர்கள், பேச்சுவார்த்தைக்கான தோல்வி முழுவதையும் புலிகள் மேல் போட்டுவிட்டு, மேற்கு நாடுகளிலிருந்து முதன் முதலாக போர்க்குற்றவாளியான மகிந்த அரசாங்கத்துடன் சமரச ஒப்பந்தத்தையும் செய்த நாடு என்கிற பெருமையையும் பெற்றுக்கொள்கிறார்.

இவ்வாறான சர்வதேச செயற்பாடுகளின் தோல்விகளின் முன்னால் இலங்கைத் தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கெதிரான நீதியான விசாரணைகளோ அல்லது நடவடிக்கைகளோ இனிவரும் காலங்களில் நடைபெறுவதை எண்ணிப்பார்க்க முடியவில்லை என்று பல சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. போர்க்குற்றங்களுக்கெதிரான விசாரணைகள் என்கிற பெயரில் கண்துடைப்பு விசாரணைகள் வருடக்கணக்கில் இழுபடப்போகும் அதேவேளை, சிங்களப் பயங்கரவாத அரசானது தமிழர் தாயகத்தில் தனது தொடர் இனவழிப்பை எந்தவிதத் தடையோ அல்லது தடங்கலோ இன்றி நடத்திக்கொண்டிருக்கப்போகிரது என்பதே உன்மையாகும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உறுதியான சிந்தனையுடன் தாயகத்தில் வாழும் ஈழத் தமிழர்களாகட்டும், அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகட்டும், வாஷிங்டனினதும், புது தில்லியினதும் கோடிப்புறங்களில் "தோல்வியடைந்தவர்களுக்கென்று " பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் திட்டங்களிலோ அல்லது உடன்படிக்கைகளிலோ சிறிதளவேனும் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை என்பதே உண்மையாகும்.

மூலம் தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.