Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்தித் தலைக்கு சோடனையை மாற்றி என்ன பயன்? (கருத்துக்களம்)

Featured Replies

A9 பாதை திறக்கப்பட்டு, சீரான விநியோகம் நடைபெறுகின்றது. இன்று இரவு பயணம் நாளைய கொழும்பின் விடிவு என்றவாறு யாழ் மக்கள் மாத்திரமல்ல அனைத்து மக்களும் ஏ 9 வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தமிழர்களின் மனம் வேதனைப்படும் சம்பவங்களை சிங்கள மக்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து வருவது இன ஒற்றுமையைச் சீர்குலைத்து மேலும் அபாயகரமான பிரச்சினையைத் தூண்டுகின்றது.

தமிழர்களின் தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என சிங்கள அரசு அறிவித்த அன்றே சிங்கள மக்களில் பெரும்பாலோனோர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வெடிகளைக் கொழுத்தியும் ஆர்ப்பரித்தும் பெரும் கொண்டாட்டங்களை நிகழ்த்தினர். இதைவிட ஒரு சிலர் ஒரு படி மேலே போய் தமிழர்களின் கடைகளை தட்டி பணம் பறித்து கொண்டாட்டங்களை நிகழ்த்தினர். தமிழர்களின் மனம் ஊமையாய் உள்ளுர அழுததை எந்த பெரும்பான்மை இனத்தவரும் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இதன் தொடர்ச்சியை ஏ9 வீதியில் தமிழர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வருகிறார்கள். ஆம் ஆனையிறவில் மிகப் பெரிய யுத்த வெற்றிச் சின்னம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இலங்கையை கைகள் தாங்கிப் பிடிப்பது போன்ற அந்த இலட்சனையைப் பார்ப்பதற்கு சிங்கள மக்கள் முண்டியடிக்கின்றனர். அத்துடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கின்றனர். மாறாக ஆனையிறவில் பயண அனுமதி பெற காத்திருக்கும் தமிழர்களோ அந்தச் சில நிமிடங்களை தீயை விழுங்கியவனைப் போல கழிக்கிறார்கள். இதைவிட இயக்கச்சியில் வேதனையானதும் நகைப்புக்கிடமானதுமான ஒரு விடயம். அதைப்பற்றியும் நோக்க வேண்டும்.

அதாவது விடுதலைப் புலிகளிடமிருந்து தாம் கைப்பற்றியதாக ”மண் அள்ளும் வேலைகளுக்குப் பயன்படுத்தும் கவச வாகனம்” ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் அதனைப் பார்க்கையில் வாய்விட்டுச் சிரிப்பதா அல்லது அழுவதா என்று தோன்றவில்லை. விமானங்களை வைத்திருந்து அவற்றை இலக்கு தவறாமல் துல்லியமாக அரசின் உயர் இலக்குகளை தாக்கி மீண்டு வந்த விடுதலைப் புலிகளிடமிருந்து தாம் கைப்பற்றியதாக ஒரு மண் அள்ளும் இயந்திரம் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கும் இராணுவத்தினரை நினைத்து அழுவதா அல்லது அந்த இயந்திரத்துடன் நின்று புகைப்படம் எடுப்பதும் அந்த இயந்திரத்துக்கு மாலை போடுவதுமாக இருக்கும் சிங்கள மக்களை நினைத்துச் சிரிப்பதா என்று தோன்றவில்லை.

அத்துடன் தென்னிலங்கையில் இருந்துவரும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுலா மையமாகப் பார்க்க வருகிறார்களே தவிர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்ப்பதற்கோ யுத்தத்தினால் அநாதரவான சிறுவர்கள் மற்றும் விதவைகளைச் சந்திப்பதற்கோ ஆர்வம் காட்டவில்லை. மாறாக ஏதோ தாம் புதிதாக கைப்பற்றிய நாட்டுக்கு வந்து அதனை பார்வையிட வரும் மக்களைப் போல நடந்துகொள்கின்றனர். ஏற்கனவே சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களே சிங்கள மக்களின் முதல் எதிரிகள் என்ற நிலையை மக்களின் மனதில் உருவாக்கிவிட்டார்கள். இது இவ்வாறு இருக்கையில் தமிழ்மக்களுடனான புரிந்துணர்வற்ற சிங்கள தேசத்தின் நல்லிணக்க நடவடிக்கைகள் எப்படித்தான் பயன்தரப்போகின்றனவோ?...

http://pooraayam.com/special-news/1202-2010-10-20-13-24-19

-காரை.வசந்தன்

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.