Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத்தமிழர்களும் ஒன்ராரியோ மாநகரசபைத் தேர்தலும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடியத்தமிழர்களும் ஒன்ராரியோ மாநகரசபைத் தேர்தலும் தமிழ் மக்கள் செய்யவேண்டியது என்ன?

ஒன்ராரியோ மாநகரத்தேர்தலில் தமிழர்கள் நான் முந்தி நீ முந்தி என்று தெர்தல் களத்தில் குதித்து போட்டி போடுகின்றார்கள். இவர்கள் மாநகரசபை அங்கத்தவர்களாக வந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு புறம் இருக்கஇ ஏன் இவர்கள் தேர்தலில் அமோகமாக குதித்து இருக்கின்றார்கள் என்பதும் ஒரு கேள்வி. ஒரு தமிழர் போட்டியிடும் இடத்தில் இன்னோரு தமிழரும் போட்டியிடுகின்றார். இது இவர்களின் ஒற்றுமையின்மையைப் படம் பிடித்து காட்டுகின்றது. தமிழர்கள் மீண்டும் தமிழர்களால் ஓமாற்றப்படாது இருக்க தமிழர் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டுவது மட்டுமல்லாமல் செயல்படவும் வேண்டும் அப்போது தான் கனடாவில் தமிழ் சமூகம் தரமாக வாழமுடியும்.

இன்று இங்குள்ள தேர்தல் களத்தில் ஏன் தமிழர்கள் குதித்துள்ளார்கள்?

1.) தமிழர் சமூகம் சார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்

2.) புலிகள் சார்பல்லாத ஏதிர்பியக்கங்களின் பிரதிநிதிகள்

3இ) இலங்கை அரசாங்கத்தால் நியமித்து பணம் வழங்கி களத்தில் இறக்கப்பட்ட தமிழர்கள்

என்று பல வகையான பிரிதிநிதிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள். இதில் யாருக்கு வாக்களிப்பது என்பது தமிழர்களின் பிரச்சனையாக இருந்தாலும்இ மிகவும் தெளிவாக ஆராய்ந்து வாக்களிப்பதும் தமிழர்களின் மிக முக்கயமான கடமை. பிழையான தமிழ்ப்பிரதிநிதிகளுக்கு வாக்களித்து கனடாவில் அசௌகரியத்தை சந்திக்கவேண்டாம்.

தமிழன் என்ற ரீதியில் யாருக்கும் வாக்களிக்கவேண்டாம். அவரது பின்னணிகளை வெகுவாக ஆராய்ந்து வாக்களியுங்கள் அல்லது தெளிவின்மை இருப்பின் தமிழர் அல்லாத பிரதிநிதிகளுக்கு வாக்களியுங்கள். குளிக்கப்போய் சேறுப+சும் வேலையைச் செய்யாதீர்கள். கோயில்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை வாரி இறைத்து பூசகர்களைப் பணக்காரர் ஆக்கிய தப்பைப்போல் இதிலும் தப்பைச் செய்யாதீர்கள். தமிழராகிய நாம் ஒவ்வொரும் விடும் தப்பும் பின்னர் ப+தாகராமான தமிழருக்கு எதிர் மறையான விளைவுகளைப் பின்னிற்கு கொண்டுவரும். அப்போது அது காலம் கடந்த ஞானம். இப்போதே எங்கள் வருங்கால சந்ததியினரின் இருப்பை வணமாக்க சிந்தித்துச் செயல்படுங்கள்.

ஒவ்வொரு தமிழனின் சிந்தைத் தெளிவு வருங்காலத்தமிழனின் ஆரோக்கிய வாழ்விற்கு இடமளிக்கும். கண்மூடித்தானமாகச் செயல்படாதீர்கள். தமிழ் மக்கள் நலன் விரும்கிகள் என்று கூறிக்கொண்டு கொள்ளை இல்லாமல் கட்சிக்குக்கட்சி தாவி பதவி மோகத்தில் திரிபவர்களையும் கட்டாயம் ஒதுக்கவேண்டும். இவர்கள் எண்ணம் பதவி மட்டும் தான்.

உதாரணமாகக் கண்ணை மூடிக்கொண்டு இந்தியாவை நம்பிச் செயல்ப்ட்டதால்தான் இன்று ஈழத்தமிழினம் சிதைந்தது. மீண்டும் விழுந்து கிடக்கமால் நல்லதொரு அத்திவாரம் இடுவோம். தமிழ் சமூகம் நினைத்தால் தான் தமிழ் சமூகத்தை முன் கொண்டுவரமுடியும். தகுதியல்லாத வேட்பாளர்களைப் புறம் தள்ளுங்கள். யாராக இருந்தாலும் சரி.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.