Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய 1000 கோடி கடன் கேட்கும் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய 1000 கோடி கடன் கேட்கும் மஹிந்த

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010

நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்திநிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.

வடக்கில் குடிதண்ணீர் விநியோகம் மற்றும் கழிவகற்றலுக்கான உட்கட்டு மான வசதிகளை மேற்கொள்வதற்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகம் மற்றும் கழிவ கற்றல் உட்கட்டுமானங்களை விருத்தி செய்வதற்காகவே இந்தக் கடன் உதவி கோரப்படுகிறது என்று அரசு கூறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், வட மாகாணத்தில் நீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல் உட்கட்டுமான வசதிகள் புனரமைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படும். நீர் வளங்களை முகாமை செய்யும் வசதிகள் பலப்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் போது வடக்கின் கிராமப்புறங்களில் மக்களின் சுகாதார மற்றும் மனிதாபிமான நிலைமைகள் மேம்படும் என்று அரசு கூறுகிறது. போரால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாம்.

அரசு கேட்ட கடன் தொகையை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த மாதம் கொள்கை அளவில் இணங்கி இருந்தது. உத்தியோகபூர்வ மான அனுமதி இந்த மாத இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 21 ஆயிரத்து 521 கோடி ரூபா பாதுகாப்புச் செலவினத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 20 சதவீதமாகும்.

வடக்கில் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ள படையினரைப் பராமரிப்பதற்கும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்த போரை நடத்தி முடிப்பதற் காகப் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்குமாகவே இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகளுக்காகச் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ள அரசு, வடக்கின் அபிவிருத்திக்கென 1,000 கோடி ரூபாவைப் பெற பிற நாடுகளை நாடுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

ஈழநாடு

தமிழரும் இந்த நாட்டின் இறையாண்மையுள்ள, உரிமையுள்ள மக்கள் என மதித்து

இந்த நூற்றாண்டின் மனித பண்புகளுக்கு ஏற்ற மாதிரி

ஒரு அரசியல் தீர்வை முதல் வைக்கவேண்டும்.

ஒரு அரசியல் அலசல் கேட்க

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5472

Edited by akootha

சிங்களத்தின் வரவு செலவு திட்டப்படி, பத்து மில்லயன் அமெரிக்கன் டாலர்கள் ( அல்லது 1214 மில்லயன் ரூபாய்கள் ) முழு தீவின் அபிவிருத்தி கட்டுமாண துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஏழு தமிழ் பேசும் மாவட்டங்களில் 1% (( அல்லது 12 மில்லயன் ரூபாய்கள் ) மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Less than 1% of rural infrastructure spending in Tamil areas

President Mahinda Rajapakse’s home district of Hambantota received the largest allocation (Rs 408 million), while the second highest went to Kurunegala (Rs157 million) ,with Matara the third largest beneficiary (Rs128 million).

Of the 1% allocated to the seven war-shattered Tamil districts, Jaffna received Rs 7 million, Vavuniya Rs 3 million, Mannar Rs 1 million and Trincomalee Rs 1 million.

Nothing was spent on rural infrastructure in the districts of Mullaitivu, Killinochi and Batticaloa.

For all the hype about ‘Eastern Awakening’ and ‘Northern Spring’, the Sinhala-dominated government constructed a magnificent total of 7.32 km of rural roads in the Tamil speaking areas - out of a total for the island of 533.73km.

http://www.tamilguardian.com/article.asp?articleid=2842

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.