Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைஇந்திய கூட்டு ஆணைக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இடம்பெறுமா?

Featured Replies

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை ஆரம்பிக்கவுள்ள அதேசமயம் இந்தப் பயணத்தின் போது யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு விடயம் குறித்து கொழும்புடன் கலந்தாராயவிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அத்துடன் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களை கிருஷ்ணா திறந்துவைக்கவுள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் கடந்த வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமென இந்தியா கூறிவருகிறது. தனது விஜயத்தின் போது இரு தரப்பு விவகாரங்களுடன் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கிருஷ்ணா கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவியேற்பு வைபவத்தில் இந்திய அரசின் பிரதிநிதியாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பிரணித் கௌர் வருகை தந்திருந்தார். தாழ்ந்த மட்டத்திலான இந்தியப் பிரதிநிதித்துவம் தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களில் பேசப்படும் விடயமாகக் காணப்பட்டதாக "சண்டே ரைம்ஸ்" பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

பகிரங்கமாக இல்லாவிடினும் கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சடுதியான இறுக்கநிலை கவலைக்குரியதாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பூர் அனல் மின்உலை உட்பட இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கொழும்பு தாமதமாகவே பதிலளிக்கின்றது அல்லது சில விடயங்கள் தொடர்பாக பதிலளிப்பதில்லை என புதுடில்லி கருதுவதாக வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாக "சண்டே ரைம்ஸ்" பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மறுபுறத்தில் சில விடயங்கள் தொடர்பாக கவனமாக ஆராயவேண்டிய தேவை இருப்பதாகவும் அவை காலத்தை எடுக்கும் விடயங்கள் என்றும் கொழும்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வருகை தரவுள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்டதன் பிரகாரம் இந்தியஇலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் இடம்பெறுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைக்கான அடித்தள வேலைகள் இன்னமும் பூர்த்தியடையாமல் இருப்பது இச்சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டு ஆணைக்குழு மாநாடு முடிவடைந்த பின் அறிக்கையை வெளியிடுவது மாநாட்டை நடத்திய நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் ஆனால், புதுடில்லியே அந்த முன்முயற்சியை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறுவதாக உயர்மட்ட வட்டாரங்கள் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியிடமிருந்து முன்வைக்கப்பட்டிருக்கும் பலதரப்பட்ட பரிந்துரைகளில் பல குறுக்கீடுகள் உள்ளன என்ற அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. கொழும்புக்கு வருகைதரும் கிருஷ்ணா முதலில் அம்பாந்தோட்டைக்குச் சென்று அங்கு இந்திய இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை திறந்து வைப்பார். பின்னர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று இதேமாதிரியான இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை அங்குரார்ப்பணம் செய்வார். இந்தியா அமைதியான முறையில் நாடும் சில விடயங்களைத் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் அசட்டையீனமாக இருந்து வருகின்றன. உதாரணமாக பெருந்தோட்டப் பகுதியில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான இணக்கப்பாடு தொடர்பாக இதுவரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, இந்த விஜயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளையும் கிருஷ்ணா சந்திக்கும் விதத்தில் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனியாக சந்திப்பு இடம்பெறுமா என்பது குறித்து அறியவரவில்லை. சந்திப்புக்குத் தாங்கள் முயற்சிப்பதாக யாழ்.மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் சனிக்கிழமை கூறியிருந்தார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=1734:2010-11-22-01-04-32&catid=34:hotn-news&Itemid=99

கூட்டமைப்பினரை சந்தித்தால் கிடைக்க வேண்டிய கவனிப்புக்கள் கிடைக்காமல் போகலாம் என்ற கிருஷ்ணாவின் பயம் காரணமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.