Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீர் திருத்தங்களை நிறைவேற்றும்வரை முதலீட்டாளர்கள் காத்திருப்பார்கள்

Featured Replies

இலங்கை அரசு அறிவித்த சீர் திருத்தங்களை நிறைவேற்றும்வரை முதலீட்டாளர்கள் காத்திருப்பார்களென வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஏடு தெரிவிக்கிறது

இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சீர் திருத்தங்களும் நடவடிக்கைகளும், நிறைவேற்றப்படும்வரை முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளப்போவதில்லையென வோல் ஸ்ரீட் ஜேர்னல் (Wall Street Journal) ஏடு தெரிவிக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள் ஓரளவு நம்பிக்கை தருவதாக அந்த ஏடு தெரிவிக்கிறது.

ஆனால், அண்மைக்காலத்தில் இலங்கை அரசு செயற்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இலங்கை அரசு அறிவித்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்வரை முதலீட்டாளர்கள் காத்திருப்பார்களென்று வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஏடு கருத்து வெளியிட்டுள்ளது.

தனியார்துறை முதலீட்டின் அவசியத்தை அரசில் உள்ள அமைச்சர்கள் சிலர் உணர்ந்துள்ளதை வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட விடயங்கள் காட்டுவதாகவும், ஆனால், அந்தக் கருத்தை இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ளாரா என்பது சந்தேகத்துக்குரியதெனவும், ஸ்ரீலங்கன் விமானசேவை, ஷெல் காஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இலங்கை அரசு பெற்றமை ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு உதாரணமாக உள்ளதாகவும் வோல் ஸ்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகிறது.

இலங்கையில் ஊழல் பரவலாக உள்ளதாகவும், அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தனியார் துறைக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த ஏடு மேலும் தெரிவிக்கிறது.

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5490

===================================================

Budgeting Sri Lanka's Peace Dividend

A year and a half after Colombo finally won its battle against Tamil insurgents, Sri Lankans are starting to ask when the promised "peace dividend" will materialize. Yesterday's budget offers hope—modest hope—that President Mahinda Rajapaksa and his administration are headed in the right direction.

The government announced a rationalization of the country's tax code, which currently features 62 different taxes and can leave businesses paying an effective rate as high as 60%. Reforms include cuts in personal income-tax rates to between 4% and 24%, from the current range of 5% to 35%, as well as cuts in taxes on banking services and the banks themselves.

Colombo also bucked the Asian trend by tearing down capital controls instead of putting them up. The central bank promises to allow foreign individuals and businesses to open bank accounts in Sri Lanka, and also will allow Sri Lankans to invest more of their money abroad. Tax reform and capital opening, not to mention various other business-friendly red-tape cutting, is all to the good.

Yet the real test will be in the implementation, and given its recent track record Colombo should expect investors to sit on the sidelines until the government shows it's serious about reform. While the budget is evidence that some members of the cabinet do understand the importance of the private sector for Sri Lanka's economic future, it's not so clear that President Rajapaksa is one of them.

In a speech last week to mark the opening of the Hambantota port in the south—a marquee project intended to attract foreign investment—Mr. Rajapaksa bragged about his government's renationalization earlier this year of the country's main airline. He also boasted that Colombo had outbid other private investors to buy back a 100% stake in a Shell liquefied petroleum gas subsidiary when Shell opted to pull out of the country. Those examples will make foreign and domestic investors wonder how welcome their ventures will be, notwithstanding Mr. Rajapaksa's rhetoric about supporting businesses.

That might be one reason why an uptick in portfolio investment from abroad has not been matched by a surge in direct investment in factories, stores and the like. A $500 million sovereign bond issue last year was 13-times oversubscribed, and the all-share index of the stock market has doubled in the past year. Yet longer-term direct investment was lower in the first six months of this year than in the same period last year, when the war was still going on.

Attracting that capital will be key to meeting Mr. Rajapaksa's promise to double per-capita income to $4,000 during the new six-year term he started Friday. So will creating a more hospitable climate for homegrown entrepreneurs. Local businesses report an increasing trend toward crony capitalism. Corruption is endemic, and hostility to the private sector rife in the bureaucracy and among elected politicians. In this context, it's notable that the new budget makes no move to cut a civil service (including military personnel) that ballooned dramatically at the end of the war. Instead, Mr. Rajapaksa is giving government employees a 5% raise.

Yesterday's budget announcement showed that the government can talk the talk of attracting foreign investment and getting the economy back on track. Investors will be watching carefully to see how quickly Mr. Rajapaksa moves to turn talk into reality.

http://online.wsj.com/article/SB10001424052748704243904575629983146035678.html?KEYWORDS=sri+lanka

இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது என்றும் புலம் பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் வந்து முதலிடலாம் என்றும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறது. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு முன்னரேயே அங்கு முதலிடச் சென்ற ஒருவரின் கதை இது.

அவருடைய முதலீடு மட்டுமல்ல அவரே இன்று எங்கே இருக்கிறார் எனத் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்.

அவருடைய பெயர் சுப்பிரமணியம் ஞானேஸ்வரன். பிரிட்டிஷ் பிரஜை. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. இலங்கையில் காணாமல் போயிருக்கிறார். அவர் காணாமல் போனமை குறித்து அவரது உறவினர்களும் நண்பர்களும் பெரும் அச்சத்திலாழ்ந்துள்ளனர். இலண்டனில் கோஸ் கட்டர் என்கிற தனக்குச் சொந்தமான சில்லறை விற்பனைக் கடையை விற்றுவிட்டு அந்தப் பணத்தோடு கொழும்பில் ஒரு வீடு வாங்குவதற்காக இலங்கை சென்றார்.

கொழும்பில் அவர் ஆரம்பித்த கார் விற்பனை நிலையம் மூலம் அறிமுகமான பிரதீப் என்பவரை தான் வாடகைக்கு எடுத்த வீட்டில் குடியிருத்தினார் ஞாஸே;வரன். எனினும் பிரதீப்புடனான வர்த்தக ரீதியான நட்பு முறைவடைந்ததால் தனது வீட்டிலிருந்து பிரதீப்பை வெளியேற்றியதோடு அவருடனான வர்த்தக ரீதியான கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் நிறுத்தியிருந்தார்.

ஞானேஸ்வரன் பின்னர் பிரதீப்பின் நண்பரான பிரேம்நாத் என்பவருடன் இணைந்து தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார். பிரேம்நாத்திடம் இந்த வர்த்தகத்தை நம்பி ஒப்படைத்து விட்டு செப்.12 2008இல் இலண்டன் திரும்பிய ஞானேஸ்வரன் மிகவிரைவிலேயே 20 ஒக்ரோபர் 2008இல் கொழும்பு திரும்பினார்.

கொழும்பு திரும்பிய ஞானேஸ்வரன் கார்விற்பனை நிலையத்தில்தான் முதலிட்ட 2.5 மில்லியன் ரூபாய்களையும் திருப்பித் தருமாறு பிரேம்நாத்திடம் கேட்டிருக்கிறார். பிரேம்நாத் பணத்தை திருப்புவதற்கு கால அவகாசம் கேட்டார்.

இதேNவைள ஞானேஸ்வரன் ஜஹ்கர் ரக வாகனம் ஒன்றை வைத்திருந்தார். அதன் பதிவிலக்கம் துஓ9977. 2008 நவ.03ஆம் திகதி பம்பலப்பிட்டியிலுள்ள இந்துக் கோவிலுக்கு தனது மைத்துணியை ஏற்றிவரப் போயிருக்கிறார். வாகனத்தை அவர் செலுத்திக் கொண்டிருக்கும் போது, பிரேம்நாத் இடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அவர் ஞானேஸ்வரனை வெள்ளவத்தை நெல்சன் பிளேஸில் இருக்கும் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவருடைய வீட்டிற்கருகில் சென்றதும் ஞானேஸ்வரனின் காருக்குள் ஏறினார் பிரேம்நாத். ஏறிய பின்னர் தான் காருக்குள் இன்னொருவரும் இருப்பதைக் கண்டு கொண்டார். உடனடியாகக் காருக்குள் இருந்து இறங்கிய பிரேம்நாத் காருக்குள் இருந்த ஞானேஸ்வரனின் மைத்துனியை வீட்டில் இறக்கிவிட்டு வந்து அவருக்குத் தரவேண்டிய பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.

மைத்துணியை வீட்டில் இறக்கிவிட்டு மாலை ஆறு மணியளவில் நெல்சன் பிளேஸ்க்குப் பானவர் தான் பின்னர் மீளத் திரும்பி வரவேயில்லை. அதன் பிறகு அவர் காணாமல் போனார்.

ஏழரை மணியளவில் ஞானேஸ்வரனின் வீட்டிற்கு அவர் தொலைபேசி எடுத்திருக்கிறார். அதன் போது தான் ஒரு வாரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவதாகத் தெரிவித்திருக்கிறார். அத்தோடு பிரேம்நாத் அவருக்குத் தரவேண்டிய 2.5மில்லியன் பணத்தை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தருக்கிறார்.

எனினும் பதட்டமடைந்த ஞானேஸ்வரனின் சகோதரி யோகேஸ்வரி உடனடியாகவே பிரேம்நாத்தின் கைத் தொலைபேசிக்கு தொலைபேசி எடுத்து தனது சகோதரர் பற்றி விசாரித்தார். அன்றிரவு ஒன்பதரை மணியளவில் யோகேஸ்வரியின் வீட்டிற்கு ஜஹ்வர் காரில் வந்த பிரேம்நாத் வீட்டின் கேற் சாவியைக் கொடுத்திருக்கிறார். காரில்லாமல் ஞானேஸ்வரன் எப்படிப் போயிருப்பார் என்று யோகேஸ்வரி கேட்டதற்கு அவர் வானில் போயிருக்கிறார் என்று பிரேம்நாத் பதிலளித்திருக்கிறார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர் மீளவும் யோகேஸ்வரியின் வீட்டிற்கு வந்த பிரேம்நாத் ஜஹ்வர் வாகனத்தினதும் ஜீப்பினதும் ஆவணங்களை எடுத்துச் சென்றார்.

மீளவும் 2008 நவம்பர் 11ஆம் திகதி பிரேம்நாத் யோகேஸ்வரியின் வீட்டிற்கு வந்த போது ஞானேஸ்வரன் எங்கேயென்று கேட்ட போது பிரேம்நாத் அவர் பற்றி வாயே திறக்கவில்லை.

நவம்பர் 12ஆம் திகதி ஞானேஸ்வரனின் தொலைபேசியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. தொலைபேசியை எடுத்தவர் பொலிஸில் முறைப்பாடு செய்யக் கூடாது என்று மிரட்டினார். அவ்வாறு பொலிஸிற்குப் போவதால் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு எக்காரணம் கொண்டும் பிரேம்நாத்தின் பெயர் பொலிஸாருக்குப் போகக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். தவிரவும் ஜஹ்வர் வாகனத்தின் உரிமையாளர் ஆவணம் பிரேம்நாத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குரல் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஞானேஸ்வரனின் உறவினர்கள் பொலிஸிற்குப் போகத் தயாரானார்கள். பிரேம்நாத் பிரதீப் ஆகியோரோடு இன்னும் இருவர் வந்து பொலிஸிற்குப் போக வேண்டாம் என்று எச்சரித்துவிட்டப் போனார்கள். எவ்வாறோ ஞானேஸ்வரனின் உறவினர்கள் கொழும்புக்கு வெளியே இருக்கும் தெஹிவளைப் பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்தார்கள். முதலில் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பொலிஸார் பின்னர் வெள்ளைவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நீங்கள் வசி;ப்பதால் அங்கு முறைப்பாட்டைச் செய்யுமாறு சொல்லி இருக்கிறார்கள்.

முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட வெள்ளவத்தைப் பொலிஸார் மறுநாள் ஞானேஸ்வரனின் சகோதரியான மைதிலியின் முழுமையான வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். சில நாட்களுக்குப் பின்னர் ஞானேஸ்வரனின் ஜங்வர் வாகனம் வெள்ளவத்தைப் பொலிஸில் நிற்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

அதற்கு மேல் பொலிஸார் இது குறித்து எவ்வித நடவடிக்கையையும் எடுத்ததாக இல்லை. இனம் தெரியாத நபர்களினால் ஞானேஸ்வரனின் உறவினர்கள் அச்றுத்தப்பட்டு வருகின்றமை இன்றுவரை தொடர்வது குறித்துக் கூட பொலிஸார் எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மேற்படி சம்பவங்கள் அனைத்தும் கொண்ட கடிதமொன்று 22 டிசம்பர் 2008ஆம் திகதி பிரித்தானிய துதுவராலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இந்தக்கடத்தலுக்குப் பின்னால் அரசாங்கத்துடன் இணைந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ரெலோ இருப்பது தெரியவந்துள்ளது. லண்டனிலிருந்தும் ஜேர்மனியிலிருந்தும் சென்றுள்ள இரண்டு உறுப்பினர்களே இதன் பின்னணியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விருவரும் இலங்கையில் போர் முடிவடைந்ததும் இலங்கை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஜிரிஎன்.

  • தொடங்கியவர்

இந்த செய்தியின் ஆங்கில மூலம் உள்ளதா?

மேலுள்ள செய்தி, அண்மையில் சிங்களம் சென்ற ஊடவியலாளர், இப்படி பல வெளிநாட்டு தமிழர்களுக்கே இந்த பரிதாப நிலை என்றால் அங்கு உள்ள மக்களை கொடிய சிங்களம் என்ன பாடு படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.