Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை கண்டித்தும், பசிலை பாராட்டியும் சாட்சியம் கூடிய அரச அதிபர் அருமைநாயகம்

Featured Replies

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று மாலை கொழும்பில் வைத்து சாட்சியம் வழங்கினார்.

அவர் சாட்சியம் வழங்கிக் கொண்டு சென்றபோது சில விடயங்களை இரகசியமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார். இதை அடுத்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரகசிய சாட்சியம் வழங்குகின்றமைக்கு முன்பாக அரச அதிபர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த விடயங்கள் வருமாறு:-

நான் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையை பொறுப்பு ஏற்றபோது பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. கிழக்கு மாகாணத்தில் பிந்திய நாட்களில் இடம்பெற்ற யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாகரையை நோக்கி வந்தார்கள். இதன் பின் வாகரை பிரதேச மக்களும் இடம்பெயர்ந்தனர். இம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசின் உதவியுடன் செய்தோம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நாங்கள் மேற்கொண்ட பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களும், தூதுவராலயங்களும் கவனித்துக் கொண்டிருந்தன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் விசேட ஆலோசகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த பசில் ராஜபக்ஸ, ஒவ்வொரு நாளும் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இடம்பெயர்ந்த மக்கள் பற்றி விசாரித்து வந்தார். இன்று அவர் அமைச்சர். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிடுகின்றமைக்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் வெளிநாட்டு தூதுவர்கள் அடங்கிய குழு ஒன்று மட்டக்களப்பு வந்தது. இத்தூதுக்குழுவினர் ஹெலிகப்டர் மூலம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வந்து இறங்கியபோது விடுதலை புலிகளால் செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட வந்த தூதுக்குழுவினர் செல் தாக்குதல் காரணமாக மக்களை பார்வையிடாமலேயே உடனடியாக கொழும்பு திரும்பிவிட்டனர்.

இது ஒரு மோசமான நிலையாகும். கிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததமையை அடுத்து வந்த மூன்று மாதத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணி வெடிகளை அகற்றி மக்களை சொந்த இடங்களில் துரிதமாக மீள்குடியேற்றினோம். கிழக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவருமே மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் என்று கூறலாம். எனினும் சிலர் நகரப் புறங்களில் காணிகளை கொள்வனவு செய்து அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

63,000 ஹெக்டேயரில் விவசாயம் மேற்கொள்ளப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக 25,000 ஹெக்டேயரிலேயே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று 58,000 ஹெக்டேயர் வரை விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு 2% இலிருந்து 5% ஆக உயர்வு அடைந்துள்ளது.

யுத்த காலத்தில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் பெரும் பிரச்சினையாக காணப்பட்டது. ஆனால் இன்று அப்பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும் சென்று விற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தின்போது மக்கள் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்."

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=14606:2010-11-25-16-50-01&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

Edited by KILI TIGER

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.