Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை: இலங்கையைச் சேர்ந்தவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 26, நவம்பர் 2010 (17:4 IST)

சென்னை: இலங்கையைச் சேர்ந்தவர் கைது

இலங்கையைச் சேர்ந்தவர் ஜோசப்கிருஷ்டி (வயது 55). இவர் கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை. விசா காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. வளசரவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் ஜோசப் கிருஷ்டி, இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அதிகாரிகள் அவரது விசாவை பரிசோதித்தபோது, சுற்றுலா விசாவுக்கான காலம் முடிந்து இருந்தது தெரிந்தது.

இதையடுத்து ஜோசப்கிருஷ்டி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை போலீசார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப் கிருஷ்டியை கைது செய்தனர்.

nakkheeran

Edited by கறுப்பி

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதத்தில் சென்னையில் தங்கியுள்ள வெளிநாட்டு நபர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மாநில அரசுகளை மத்திய அரசு உஷார்படுத்தி வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான, ரயில் நிலையங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

எல்லை பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது. கடல் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த பலர் படிப்பு, மருத்துவம், சுற்றுலா போன்ற சில காரணங்களுக்காக தமிழகத்துக்கு வருகின்றனர். அந்த போர்வையில் தீவிரவாதிகள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்காக, தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டுகாரர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பெயர், எந்த நாட்டை சேர்ந்தவர், எதற்காக வந்தார், எங்கே, எத்தனை நாட்கள் தங்கியுள்ளனர் என்ற விவரங்களை மத்திய, மாநில உளவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து 6 மாதத்துக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டு நபர்களின் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.

போலீசாரின் அதிரடி வேட்டையை அறிந்த இலங்கையை சேர்ந்த ஜோசப் கிறிஸ்டின் (40) என்பவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவனுக்கு நேற்று வந்தார். கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாகவும், கெடு முடிந்துவிட்டதால் விசாவை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரினார்.

அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த அதிகாரிகள், ஏப்ரல் மாதமே விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப் கிறிஸ்டினை கைது செய்தனர். அவர் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்ததால், வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

http://www.dinakaran.com/highdetail.aspx?id=21372&id1=13

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.