Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலொன்றையும் கையினையும் இழந்த முன்னாள் பெண்போராளி வறுமையின் பிடியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கால் ஒன்றையும் கையொன்றையும் போராட்டக் களத்தில் இழந்து இன்று தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள் இந்தப் பெண் போராளி. வீட்டின் வறுமை நிலைமை இவர்களை வாட்டுகிறது. அங்கவீனமடைந்த பின்னர் நவம் அறிவுக்கூடத்தில் கணணியைக் கற்று கணணியில் தேர்ச்சி பெற்றவள். ஆயினும் கடைசிவரை களத்திலேயே நின்றவள். இன்று திருமண வயதைத் தாண்டி நிற்கும் அக்காக்கள் அவர்களும் காயமடைந்து பாதிப்படைந்து இருக்கிறார்கள் தம்பி 27வயது அவனும் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ளான். 62வயது அம்மா உழைக்கும் வலுவை இழந்த நிலமையில் இவர்கள் 6பேருக்கும் உயிர்வாழ்வதற்காக தற்போது கிடைக்கும் சிறியளவிலான நிவாரணம் மட்டுமே கைகொடுக்கிறது. பசியும் உடல் அங்க இழப்புகளும் இக்குடும்பத்தை மிகவும் தளர்வித்துள்ளது. தான் கற்ற கணணிக்கல்வியை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற விரும்பும் இந்த முன்னாள் போராளி தனக்கு ஒரு கணணியை வேண்டுகிறாள். அல்லது தனது குடும்பத்துக்கு ஒரு சுயதொழிலுக்கான உதவியை வேண்டுகிறாள். இதோ இவளது குரலிலிருந்து….

ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை வந்த முதல் மின்னஞ்சலில் இவளது படமும் கடிதமும் வந்திருந்தது. தோழ்பட்டைக்கு சற்று கீழ் கையொன்று இல்லை ஒற்றைக்கால் செயற்கைக்கால் மற்றைய காலும் காயங்களின் அடையாளங்களுடன் வந்திருந்தது. அவளது கடிதத்தை வாசிக்க வாசிக்க கண்ணீர் வழிகிறது. வறுமையின் கொடுமை அடுத்த நேர உணவுக்கான தேடல் அக்காக்களின் தம்பியின் அம்மாவின் வாழ்வு பற்றிய அவளது ஏக்கங்கள் என அவளது அழகான கையெழுத்துக்களுக்குள் சோகமாய் பதிந்து கிடக்கிறது.

அவளது முகத்தைப் பார்த்ததிலிருந்து எதுவுமே செய்ய முடியாது அவளது முகமும் தோற்றமும் கண்ணுக்குள் சுற்றுகிறது. இரண்டு வாரம் முதல் தொடர்பு கொண்டிருந்த இவளது குரலை வானொலியில் 2தரம் ஒலிபரப்பினேன். ஆயினும் எந்தவித உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்தக் கருத்துக்களத்திலும் சிலரே தொடர்ந்து உதவிகளைச் செய்வதால் இங்கு அவளது குரலைப் போடவும் விருப்பமின்றி வைத்திருந்தேன். தனிப்பட பலருடன் சில பெரும் கைகளிடமும் இவளுக்கு ஒரு கணணி இல்லது ஒரு தொழிலுக்கான உதவியைக் கோரி எவ்வித பதிலும் கிடைக்காத நிலமையில் இங்கு இணைக்கிறேன்.

மன்னிக்கவும் நண்பர்களே தொடர்ந்து உங்களை தொல்லைப்படுத்துவதற்கு. உதவ முடிந்தவர்களை மீண்டும் மீண்டும் இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராளிக்கு கட்டாரிலிருந்து ஒரு உறவு 30000ரூபாவும் மற்றும் பிரித்தானியாவிலிருந்து பூரணி என்ற உறவு 244,55€வும் வழங்கியுள்ளார்கள். இந்தப்போராளிக்கான கணணிக்கான பணம் சேர்ந்துவிட்டது. அடுத்த கட்டம் உரியவருக்கு பணத்தை அனுப்பி வைக்கும் ஏற்பாடுதான். இந்தப்பிள்ளைக்கு உதவ முன்வந்த இருவருக்கும் உரியபிள்ளையின் படம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கணணியை பெற்றுக்கொண்டதன் பின்னர் மீதி விபரங்களை அறியத்தருகிறேன்.

நன்றி நண்பர்களே காலமறிந்து நீங்கள் செய்த உதவி அங்கங்களை இழந்த இந்தப்பிள்ளையின் வாழ்வுக்கு ஒளியேற்றும் என நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.