Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக உறவுகளே போராடுவோம் வாரீர் – எல்லாளன்

Featured Replies

மாவீரர் நாள் முடிந்த ஒரு சில நாட்களில், குலை நடுங்கவைக்கும் போர் குற்ற ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளது. மாவீரர் நாளன்று தமிழகதலைவர்களின் உரையை கேட்ட சில ‘மாற்று கருத்து மாணிக்கங்கள்’ சொன்னார்கள், “இந்த தலைவர்கள் உணர்ச்சி வசப்ப்படும்படி பேசுவார்கள் ஆனால் அறிவார்ந்த செயல்கள் ஏதும் செய்யாதவர்கள்” என்று. அவர்களிடம் நான் அன்று சொன்னேன் “நாங்கள் ஒன்றும் அறிவி ஜீவிகள் அல்ல. எங்களுக்கு உணர்வுகள் இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறோம். ஆனால் அதற்காக செய்யவேண்டிய கடமைகளை மறந்து போவோர் அல்ல” என்று.

நம் தமிழக உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணம் இது. புலத்தில் தமிழரெல்லாம் போர்கோலம் பூண்டு, எராலாமானோர் கூடி போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் நாமும் நம் சொந்தங்களுக்கு தோள் கொடுக்கவேண்டியது நம் முதல் கடமை. அதன் முதல் கட்டமாக இனபடுகொளையாளி மகிந்தா ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றக்கூடிய அந்த போர் குற்ற ஆதாரங்களை அணைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். போர் குற்ற ஆதாரங்களாக கிடைத்துள்ள முக்கிய ஆவணங்கள் இரண்டு

௧ ) லண்டன் இல் ஒளிபரப்பாகும் சேனல் ௪ தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி

௨) விக்கி லீக்ஸ் வெளியிட்ட – ராஜபக்சேவை போற்குற்றவாளி என்று உறுதிபடுத்தும் ஆவணம்

இவற்றை அணைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது மிக அவசியம் .

அடுத்து தற்போது ராஜபக்சே லண்டன் சென்று அங்குள்ள ஓக்ஸ் போர்டு பல்கலைகழகத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால் லண்டன் வாழ் தமிழர்களின் போராட்டத்தின் பலனாக அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி ஒரு போற்குற்றவாளி மற்ற நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை கைது செய்யும் வாய்புகள் இடுப்பதால், அவ்வாறு அந்த இனபடுகொளையாளி மற்றும் போற்குட்டவாளி ராஜபக்சேவை கைது செய்யகோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் அங்குள்ள தமிழர்கள். இந்த நேரத்தில் தமிழகத்திலும் அவ்வாறு போற்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்யகோரி சென்னையிலுள்ள பிரித்தானிய துணைத் தூதரகம் முன்னால் ஒரு ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்வது பிரித்தானிய தமிழரின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும்.

தமிழக மாணவர் அமைப்புக்களும் மற்ற தமிழர் உரிமைக்கு போராடும் அமைப்புக்களும் இதனை முன்னெடுக்கவேண்டும். அரசியல் வேற்றுமைகளை களைந்து அணைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்கவேண்டும். தடைகளை உடைத்தெறிந்து போராடுவோம்.

இனபடுகொளையாளி – போற்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தகுந்த தண்டனை வாங்கி தந்து நம் சொந்தங்களுக்கு நீதியை பெற்று தருவது ஈழத்திற்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் நன்றிகடன். இதை செய்வோமா உறவுகளே…

– மீனகம் எல்லாளன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UK Tamils.,

Pls go to the nearest police station report with a personal charge (my relative killed by Mahinda). They will give you a ref no. Bring it Together4tamils 07877204123.

Pls do it now, Mahinda is returning to SL. We have to get the police arrest and question him in the UK. We need more police complaint reference numbers!

Pls text and email to all your contacts, now.

Pls do not waste a second.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.