Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதைக்கு அஞ்சி பயங்கரவாதி என ஒத்துக்கொண்ட யுவதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதைக்கு அஞ்சி பயங்கரவாதி என ஒத்துக்கொண்ட யுவதி - ஸ்ரீலங்கன் கார்டியன்

ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 11:40

ஊவா பிரதேச பதுளையில் இருந்து வீட்டுபணிகளுக்காக 2008 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தபோது, பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் யுவதி ஒருவர், பூஸா இராணுவ முகாமில் தொங்கவிடப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது

கொழும்பின் புறநகர் நீர்கொழும்பு சீதுவை பிரதேசத்தில் வீட்டுவேலைக்காக சென்ற இந்த யுவதியை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் அவ் யுவதியின் வேலைக்கொள்வோர், அளித்த வாக்குமூலத்தில் குறித்த யுவதி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும் அவரின் கையடக்க தொலைபேசிக்கு தினந்தோறும் அழைப்புகள் வருவதாகவும் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து சதாசிவம் கிருஸ்ணமேனி என்ற இந்த யுவதி கைதுசெய்யப்பட்டார்

எனினும் தமது கைவிலங்கு கழற்றப்பட்ட வேளையில் அவர், பயத்தினால் தப்பியோடியபோது பொலிஸார் மீண்டும் அவரை கைதுசெய்து, காலி பூஸா முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை அங்கு இராணுவத்தினர் கால் பெருவிரல்களால் கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்துள்ளனர்.

சித்திரைவதைகளுக்கு அஞ்சி, வேறு வழியில்லாமல் அவர், நீதிவான் முன்னிலையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என உரிமை கோர நேர்ந்துள்ளதோடு, அவர் கடந்த இரண்டு வருடங்களாக வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிருஸ்ணமேனியின் தந்தை ஒரு தோட்டத்தொழிலாளி தாயார் கொழுந்து பறிக்கும் தொழிலாளி இந்தநிலையில் பொய்யான சட்டத்தின் முன் அவர் இன்று குற்றவாளியாக கருதப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றார் என ஸ்ரீலங்கன் காடியன் தெரிவித்துள்ளது

sangamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.