Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கொரியாவினால் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

Featured Replies

அதிரடி பாதுகாப்பு தகவல்களை கசியவிட்டு வருகின்ற விக்கிலீக்ஸ் இணையத்தளம், தற்போது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

வட கொரியாவினால் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க திறைசேரியின் அதிகாரி ஸ்டுவார்ட் லெவேயினால், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் வழங்கிய இந்த ஆவணம் தொடர்பிலான தகவல்களை, அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின்படி, வடகொரியா இலங்கை அரசாங்கத்;துக்கு அதிக அளவிலான ரொக்கட் லோஞ்சர்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசாங்கம் அவற்றை கொள்வனவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆயுத பரிமாற்றலுக்கான நிதி வழங்கல்களுக்காக, சீனாவின் வங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த ஆயுதங்கள் இலங்கை அரசாங்கத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை, விக்கிலீக்ஸின் உதவியுடன் வெளிவந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=51799

  • தொடங்கியவர்

இராஜதந்திர எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வடகொரியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்தமை விக்கிலீக்ஸினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரகசிய ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.

ரொக்கட் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களே இவ்வாறு வடகொரியாவால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

உலகில் மோதல்கள் நடைபெறும் முக்கிய இடங்களுக்கு ஆயுதங்கள் சென்றடைவதைத் தடுக்கும் முயற்சிகளில் அமெரிக்க இராஜதந்திரிகள் முக்கிய பங்கு வகித்திருக்கும் நிலையில், ஈரான், சிரியா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளுக்கு எதிரான தீவிர மோதல் நடைபெற்றுள்ளமையையும் விக்கிலீக்ஸின் தகவல்கள் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆயுதங்களை வழங்கப்போவதில்லையென உறுதியளித்து ஒருவாரம் கடந்த நிலையிலும் ஷியா போராளிகள் குழுவான ஹிஸ்புல்லாவிற்கு நவீன ரக ஆயுதங்கள் வழங்கியமைக்காக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஷாட் மீண்டும் கண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற எமது சந்திப்புகளால் சிரியா எந்தவொரு புதிய ஏவுகணைகளையும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்குப் பரிமாறப்போவதில்லையெனக் கூறப்பட்டதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி பெப்ரவரியில் கூறியுள்ளமையும் விக்கிலீக்ஸினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் தற்பொழுது ஹிஸ்புல்லா அமைப்புக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை விநியோகிக்க சிரியா முயற்சித்து வருவதை நாம் அறிந்துள்ளோம்.இந்நடவடிக்கை எனது அரசை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன், இவ்வாறான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்காக நாம் கடுமையாக எச்சரிக்கின்றோம் என்றும் ஹிலாரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைக்கு ரொக்கட் ஏவுவதற்குப் பயன்படும் ஆயுதங்களையும் யேமனுக்கு அதிவேக ஏவுகணைகளையும் இராஜதந்திர எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 2009 இல் வடகொரியா அனுப்பியுள்ளமையும் விக்கிலீக்ஸின் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே இலங்கைக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கியுள்ளதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவையில் கூறப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2867:2010-12-08-05-08-14&catid=51:local&Itemid=85

  • தொடங்கியவர்

வடகொரியாவிடம் ஆயுதம் வாங்கவில்லை: இலங்கை மறுப்பு

விடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கவில்லை என்று இலங்கை அரசு மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2009-ம் ஆண்டு தொடக்கத்தில் வடகொரியாவிடம் இருந்து இலங்கை அரசு ஏவுகணைகளை செலுத்தும் லாஞ்சர்களை வாங்கியதாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இத்தகவலை தங்கள் நாட்டுக்கு அனுப்பியிருந்தது.

அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை விக்கீலீக்ஸ் வெளியிட்டிருந்த நிலையில், இலங்கை அரசு இத்தகவலை மறுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆயுதக் கொள்முதலில் தொடர்புடைய இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்துள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=344645&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.