Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகனை உயிரோடு புதைத்த இலங்கை பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 9, டிசம்பர் 2010 (10:35 IST)

மகனை உயிரோடு புதைத்த இலங்கை பெண்

தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் - யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார்.

யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார்.

யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் விஏஓவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து விஏஓ மார்சார்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அழகுதுரை, யோகேஷ்வரியிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின்போது யோகேஷ்வரி கூறுகையில், மணிகண்டன் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது. மணிகண்டனுக்கு உடல்நிலை சரியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இதனால் முகாம் அருகே உள்ள மரத்தடி ஒன்றின் கீழ், குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் நான் முகாமுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு யோகேஷ்வரியை அழைத்துச் சென்று, மணிகண்டனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

33884970.jpg

வறுமைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.பெற்ற மகன் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறானே என்று குழம்பிப்போன தாய், அவனை உயிரோடு புதைத்துக் கொன்ற சம்பவம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ராஜேந்திரன். கூலி வேலைக்குச் செல்லும் இவருக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவி யோகீஸ்வரிக்கு இரண்டு மகன்களும், நான்கு மாத பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றனர். நான்கு வயதான மூத்த மகன் மணிகண்டன் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறான். மூளை வளர்ச்சிக் குறைபாடும் அவனுக்கு இருந்திருக்கிறது.

கணவன்,மனைவி இருவருமே கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்கிற நிலையில் மணிகண்டனைப் பராமரிப்பது மிகச் சிரமமாக இருந்துள்ளது யோகீஸ்வரிக்கு.எனவே, மனம் குழம்பிய யோகீஸ்வரி மகன் என்றும் பார்க்காமல் மணிகண்டனை உயிரோடு புதைத்துக் கொன்றுள்ளார்.

சம்பவம் அறிந்து அகதிகள் முகாமிற்குச் சென்றோம்.சம்பவம் குறித்து பேசியவர்கள்,

‘‘8-ம் தேதி திடீர்னு மணிகண்டனை காணோம்னு சொன்னாங்க. நடக்கவே முடியாத அந்தப் பையனால எங்கயும் போக முடியாது.அதனால அவனை பெத்தவங்களே ஏதாவது செஞ்சிருப்பாங்களோன்னு சந்தேகம் இருந்தது.

போலியோ நோயால பாதிக்கப்பட்டதால அரசு அவனுக்கு மாசம் 150 ரூபாய் கொடுக்குது.அதுபத்தி விசாரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் வரும்போதுதான் மணிகண்டன் காணாமப் போன விஷயம் போலீஸுக்குத் தெரிஞ்சது.

போலீஸார் விசாரணையில,பக்கத்தில இருக்கற காட்டுப் பகுதியில யோகீஸ்வரி குழந்தையை உயிரோடு புதைச்சுக் கொன்னது தெரிய வந்தது’’ என்றார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு போஸ்ட் மார்ட்டம் நடந்தது.

அந்தக் காட்சியைப் பார்த்த கிராம மக்கள் யோகீஸ்வரியை கடுமையாக திட்டிக் கொண்டிருக்க, சிலை போல எந்தவித சலனமும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார் யோகீஸ்வரி.

மெல்ல யோகேஸ்வரியி டம் பேசியபோது “யாராவது பெத்த மகனை உயிரோடு புதைத்துக் கொல்லுவாங்களா? நான் படற வேதனை எனக்குத் தான் தெரியும். காய்ச்சல், தலைவலின்னா சரி செய்யலாம். போலியோவை என்ன செய்ய?

நான் மணிகண்டனையே வீட்டுல இருந்து பார்த்துக் கிட்டு இருந்தா, மத்த இரண்டும் பட்டினி கிடந்தது.வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு. ஒண்ணு, நான் சாகணும், நான் செத்துப்போனா என் பிள்ளைங்களை யார் பார்த்துக்கறது?அதனாலதான் என் கையாலேயே என் புள்ளைய புதைச்சுட்டு காணலைன்னு பொய் சொன்னேன்.

இந்த பிள்ளைங்களுக்காகத் தானே இப்படி ஒரு காரியம் பண்ணேன். இப்ப நான் ஜெயிலுக்குப் போயிட்டா இந்தப் பிள்ளைங்களை யாரு பார்ப்பா?’’ என தன் நான்கு மாதப் பெண் குழந்தையைப் பார்த்துக் கதறுகிறார் யோகீஸ்வரி.

இவருக்கு என்ன ஆறுதல் சொல்வது? யோகீஸ்வரியின் குழந்தைகளை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்?

- எஸ்.ஏ.துரை

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.