Jump to content

தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்


Recommended Posts

சரியான உச்சரிப்புகள் இல்லாமல் தமிழ் வானொலிகளின் உரையாடல்கள் தமிங்கிலிஸ் மயமாகுவதை தடுப்பதற்கு நாமெல்லோரும் நல்ல தமிழில் உரையாடுவதோடு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பழக வேண்டும் என உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சியாக பறக்கவேண்டிய சிறுவயதில் அழையாத விருந்தாளியாக இலங்கை வானொலி கலையகத்தில் கால்பதித்த பீ.எச்.அப்துல் ஹமீத், இன்று உலகம் போற்றும் சிறந்த அறிவிப்பாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பல பரிமாணங்களில் எம் முன் பரிணமித்துக்கொண்டிருப்பது கண்கூடு.

இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது.

வானலையில் தனது குரலும் ஒலிக்காதா என்று ஏங்கிய சின்னஞ் சிறு வயதில் இலங்கை வானொலி கலையகத்திற்கு செல்லும் வாய்ப்பு அப்துல் ஹமீத்துக்கு எதிர்பாராதவிதமாக கிட்டியது.

இலங்கை வானொலியில் அக்காலத்தில் ஒலிபரப்பப்பட்ட சிறுவர் மலர் நிகழ்வை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இவரது சிநேகிதன் ஜோசேப் எட்வர்ட்டுக்குக் கிட்டவே, அவருடன் இவரும் இணைந்து அந்நிகழ்வை பார்க்கச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் பச்சைமலைத்தீவு நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிக்கவிருந்தவர் சமூகமளிக்கவில்லை. நாடகத்தையும் இடைநிறுத்த முடியாத இக்கட்டானதொரு சூழ்நிலை. இந்நிலையில், நாடகத்தை பார்வையிட வந்த பார்வையாளர்களிடம் குரல் தேர்வு நடத்தப்பட்டது. அங்கேதான் இவருக்கான அதிர்ஷ்டமும் கிட்டியது.

குரல் தேர்வின் இறுதியில் அந்நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியது. இதுவே அவர் உலக அறிவிப்பாளராக மிளிருவதற்கு ஆரம்பப்படியாக அமைந்தது அப்போது அவருக்கு 10 வயது.

இவரது சிறந்த குரல்வளமே அவர் கடல் கடந்து செல்வதற்கு காரணமானது. வெறுமனே அறிவிப்புத்துறையில் மிளிராமல் ஒளிபரப்பு, வெள்ளித்திரை, மேடை, நாடகம், வசன அமைப்பாளர், பாடலாசிரியர் என பல துறைகளிலும் இவரது திறமைகள் இன்றுவரையிலும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றன.

வானலையில் இவரது குரல் ஒலிக்கத் தொடங்கி 50 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், சிறந்த இளம் அறிவிப்பாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் அப்துல் ஹமீத்தையே சாரும்.

இவரது மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் சென்று அங்கு தமது அறிவிப்புத்துறையினூடாக மொழித்திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அறிவிப்புத்துறையின் முன்னோடியாக விளங்கும் இவர், தொகுத்தளித்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது பாட்டுக்குப் பாட்டு வாரங்களையும் கடந்துவிட்ட இந்நிகழ்ச்சி பல பாடகர்களை உலகறியச் செய்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

அறிவிப்பு பணியில் ஈடுபடுபவர்களால்தான் தாய்மொழியும் வளர்க்கப்படவேண்டும். அன்று இலங்கை வானொலியில் அறிவிப்புத்துறையில் ஓர் உச்சரிப்பு பிழைவிட்டாலும், அதற்கான தண்டனை மிக வலுவனாதாக இருந்தது. அப்படித்தான் நாங்கள் அன்று எங்கள் தாய்மொழியை எல்லோருக்கும் கொண்டு சென்றோம். இன்று அறிவிப்புத்துறையில் உள்ளவர்கள் அதனை சரியாக செய்கின்றார்களா என்பதே கேள்விக்குறிதான்? இன்றைய அறிவிப்பாளர்கள் தமிழ்மொழியை மட்டுமன்றி வேற்றுமொழிகளையும் கலந்து சம்பாஷனை வடிவில் அறிவிப்புசெய்வதால் எதிர்காலத்தில் கொச்சைத் தமிழ் மட்டுமே நிலைக்கப்போகிறது.. என்பது இவரது அறிவிப்புத்துறை சார்ந்த ஆதங்கம் ஆகும்.

http://www.tamil.dailymirror.lk/index.php/component/content/article/105--main/12697-2010-12-08-10-53-05.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் "சின்ன திரையில் முத்திரை பதிப்பது உங்கள் ராஜ் டிவி" என்ற விளம்பரககுரலுக்கு உரியவரா? நண்பர் லோசன் மற்றும் அனைத்து ஈழ வானோலி மற்றும் செய்தி வாசிப்பாளர்கள்.. தமிழர் நாடுக்கு வந்து தூய தமிழில் சேவையாற்றவேண்டும்.. இங்கு வந்து செட்டில் ஆனதுக்கப்புறம் ... இங்குள்ள மாதிரி ஆகி போய்விட கூடாது....

http://tamil.comedy.videos.oruwebsite.com/vivek-comedy/kanden-seethaiyai-movie-comedy-video_59e1ab702.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.