Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்களை தற்போதே நான் காண்கிறேன்: போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்களை தற்போதே நான் காண்கிறேன்: போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன்

இரண்டாம் பாகம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான, அபூர்வமான ஆதாரங்கள். இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனை தான் பார்க்கிறேன். என அனைத்துலகத்தின் பிரசிதித்திபெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் நோவல்ஸ் சனல் போஃர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் (நேற்றைய தொடர்ச்சி) வருமாறு:

சனல் போஃர்: இசைப்பிரியாவும், அவருக்கு அருகில் இறந்து கிடப்பவரும் எவ்வாறு இறந்தனர் என்பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவிக்கின்றது. ஆனால் அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளது. துணி ஒன்றால் சடலம் மூடப்பட்டுள்ளது. அவரின் முகத்தில் காயங்களும் உள்ளன. அவருக்கு அருகில் பல சடலங்கள் காணப்படுகின்றன. அந்த சடலங்கள் படுகொலை செய்யப்பட்டவையாகவே காட்சியளிக்கின்றன. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார் என எமக்கு தெரியாது.

ஜுலியன் நோவல்ஸ்: அதில் காணப்படும் ஆண்களின் சடலங்களுடன் ஒப்பிடும்போது இசைப்பிரியாவின் தலையில் காயத்தை தெளிவாக காணமுடியவில்லை. ஆண்கள் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. எனக்கு இரு கருத்துக்கள் தெரிகின்றன. ஒன்று அவர் போரில் கொல்லப்பட்டிருந்தால் கைகள் எவ்வாறு பின்புறமாக கட்டப்பட்டிருக்கும்? இரண்டாவது, அவருக்கு அருகில் ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை.

மேலும் போரில் கொல்லப்படுபவர்கள் வீழ்ந்துகிடப்பது போலல்லாது, சடலங்கள் அடுக்கப்பட்டுள்ளன. போரில் இறப்பவர்கள் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே இது ஒரு படுகொலை என்பதை தவிர வேறு எதனையும் அனுமானிக்க முடியவில்லை.

புகைப்படங்களில் உள்ள சடலங்களில் முன்புறமாக சுடப்பட்ட அடையாளங்கள் காணப்படவில்லை. எனவே அவர்கள் பின்புறம் இருந்தே சுடப்பட்டுள்ளனர்.

சனல் போஃர்: இசைப்பிரியா போரில் காயமடைந்திருக்கலாம் அல்லவா?

ஜுலியன் நோவல்ஸ்: போரில் காயமடைந்தவர்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் மரணமடைய விடுவதும் போர்க்குற்றமே. போர்க்குற்றம் என்பது பொதுமக்களை படுகொலை செய்வது மட்டுமல்ல, அவர்களை தவறாக நடத்துவதுமாகும்.

காயமடைந்தவர்களை சரியாக பராமரிக்காது விடுவதும், அவர்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் மரணமடைய விடுவதும் தவறான நடவடிக்கைகள் என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது பொதுமக்களுக்கும், ஆயுதங்கள் அற்ற போராளிகளுக்கும் பொருந்தும்.

சனல் போஃர்: நாம் அவரின் கைகள் கட்டப்பட்ட வயர்களை காணாதபோதும் இது சாத்தியமா?

ஜுலியன் நோவல்ஸ்: அதனை காண்பது கடினமானது. ஆனால் புகைப்படத்தில் காணப்படும் இரு சடலங்களின் கைகள் ஒரே நிலையில் பின்புறம் நோக்கி காணப்படுவது, அவர்களின் கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ளதையே காட்டுகின்றது. இது ஒரு முக்கிய ஆதாரம். நாம் கட்டப்பட்ட கயிற்றை காணாதுவிட்டாலும், கைகள் கட்டப்பட்டுள்ளது இதன்மூலம் தெளிவானது.

மற்றுமொரு முக்கிய காரணம் என்னவெனில் அங்கு போர் நடைபெற்றதற்கான தடையங்களை காணவில்லை. அண்மையில் கூட சமர் நடைபெற்றதற்கான சத்தங்களோ அல்லது தடையங்களோ காணப்படவில்லை.

அதாவது இறுதிநேரத்தில் படையினர் மேற்கொண்ட துப்பரவாக்கும் நடவடிக்கைகள் என்பது, சரணடைய முற்பட்ட போராளிகளை அல்லது பொதுமக்களை பெருமளவில் படுகொலை செய்ததாகவே உள்ளது. அதனை தான் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

அங்கு போர் டாங்கிகள் காணப்படவில்லை, எறிகணைகள் வெடித்த அடையாளங்களும் இல்லை, மொத்தத்தில் போர் நடைபெற்றதற்கான தடையங்கள் இல்லை. இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது மறுக்கமுடியாத உண்மை. தடையவியல் ஆய்வின் (கழசநளெiஉ) மூலம் இந்தப் பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், போரில் கொல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இந்தக் காணொளி பொய்யானது என சிறலங்கா அரசு தெரிவிக்கலாம் அல்லது அதற்கு வேறு காரணங்களை அது கொண்டுவரலாம். ஆனால் அங்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை கண்டறிய வேண்டுமெனில் சுயாதீன விசாரணைகள் அவசியம். விசாரணைகள் தான் இங்கு முக்கியமானது. சிறீலங்கா அரசு மீண்டும் விசாரணைகளுக்கு மறுப்பு தெரிவிக்குமனால், இந்த மிக முக்கிய ஆதாரத்தை கண்டு அது அச்சமடைகின்றது என்பதே பொருள். உண்மைகள் வெளிவருவதை அது விரும்பவில்லை.

சனல் போஃர்: ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் காலஎல்லை எதிர்வரும் 16 ஆம் நாளுடன் முடிவடைகின்றது. நாம் இந்த காணொளிகளை அங்கு அனுப்பியுள்ளோம். தற்போது இசைப்பிரியா தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் அனுப்பவுள்ளோம்.

ஜுலியன் நோவல்ஸ்: விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான அபூர்வமான ஆதாரம் இது. இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனைத் தான் பார்க்கிறேன்.

இந்த ஆதாரம் மிக முக்கியமானது. இது கிடைத்தபின்னரும் விசாரணைகள் நடத்துவதா என்று ஆலோசிப்பது வேண்டத்தகாதது. இந்த ஆதாரம் எமக்கு பிரதானமாக ஒன்றை தெரிவிக்கின்றது. அதாவது முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதில் தொடர்புள்ளவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதே அதுவாகும்.

சனல் போஃர்: மே 18 ஆம் நாள் துப்பரவாக்கும் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவரை தேடி அது நடத்தப்பட்டது. மே 19 ஆம் நாள் வரை அவரை கண்டறிய முடியவில்லை.

ஜுலியன் நோவல்ஸ்: உண்மையாக அது துப்பரவாக்கும் நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையான படை நடவடிக்கைக்கும், சரணடைபவர்களை படுகொலை செய்வதற்கும் ஒரு நூலிழை வேறுபாடுதான் உள்ளது.

என்னைப்பொறுத்தவரையில் ஒன்றை தெளிவாக கூறமுடியும் அதாவது, அந்த துப்பரவாக்கும் நடவடிக்கை என்பது, சரணடைந்தவர்களை கூட்டமாக படுகொலை செய்யும் நிகழ்வாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முற்றும்.

தமிழாக்கம்: www.eelamenews.com

இவ்வளவு ஆதாரங்களும் போதும். போர்க்குற்ற விசாரணைகள் முடுக்கிவிடுவதற்கு, உலகத் தமிழர் ஆகிய நாம் ஆவன செய்வோம்.

இன்னும் பல ஆதாரங்கள் வெளிவரும்.

போர்க் குற்றம் உறுதியானது

இலங்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்தது என்பதை, சனல்4 வெளியிட்ட வீடியோ ஆதாரம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது என்கிறார் போர்க் குற்றவியல்சட்டவாளரான மற்றிக் சேம்பர் என்ற அமைப்பைச் சேர்ந்த யூலியன் நோவல்ஸ் (Julian Knowles).

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது: ஆயுதம் தரிக்காத கிளர்ச்சியாளர்கள் அல்லது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரம் இது. கொல்லப்பட்டவர்கள் ஆயுததாரிகளா பொதுமக்களா என்பது இங்கு பிரச்சினையல்ல, ஜெனீவா சாதனத்தின்படி ஆயுதம் தரிக்காத படையினரையோ அன்றி பொதுமக்களையோ படுகொலை செய்ய முடியாது. அனைத்துலகசட்டங்கள் மற்றும் ஜெனிவா சாதனத்தினை அப்பட்டமாக மீறும் செயல் இது.

இங்கு இவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன, கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன, ஆயுதங்களை இவர்கள் வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த நிலையில் அனைத்துலகசட்டங்களின் பிரகாரம் இது ஒரு மோதமான குற்றமாகும்.

இந்த வீடியோவினைக் கண்டுபிடித்து வெளியிட்டிருப்பது மற்றும் இந்த வீடியோ உள்ளடக்கியிருக்கின்ற அம்தங்கள் என்பன முறையான போர்க்குற்ற விசாரணைக்கு அவசியமானது. போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இந்தப் படையினர் எந்தப் படைப்பிரிவினைச் சேர்ந்தவர்கள், அவர்களது அணித்தலைவர் மற்றும் உயர் மட்டத் தளபதி யார் போன்றவற்றை இனங்காணுவதற்கு இந்த வீடியோவின் உள்ளடக்கம் வழிசெய்யும்.

எந்தப் பகுதியில் இந்தச்சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியுமெனில், தனது படையணிகள் எந்தப் பகுதிகளில் நிலைப்படுத்தப்பட்டது என்ற விவரத்தினை இலங்கை அரசு நன்கறியும். இவ்வாறு சுட்டுக்கொல்லுமாறு அவர்களுக்கு ஆணையிட்டவர் யார் என்பதை கண்டறியும் இதயசுத்தியுடன் கூடிய எண்ணம் இலங்கை அரசிற்கு இருக்குமெனில் இது ஒன்றும் முடியாத காரியமன்று.

http://www.uthayan.innovay.net/pages/article_full_view.php?nid=29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.