Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சி:-இதன் ஒருகட்டமாக அடுத்த மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிலங்கா வருகின்றனர்.

[Wednesday, 2010-12-15 11:40:11]

இஸ்ரேலும் சிறிலங்காவும் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காவுக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்கிய இஸ்ரேல் தற்போது விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவ முன்வந்துள்ளது.

இதன் ஒருகட்டமாக அடுத்த மாதம் 10ம் திகதி இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் சலோம் சிமோன் தலைமையிலான குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது.

உலர் வலய விவசாய முயற்சிகள் தொடர்பாக இஸ்ரேலின் அனுபவங்களை சிறிலங்காவுக்கு வழங்குதல் உள்ளிட்ட விவசாய உதவித் திட்டங்கள் குறித்து இந்தப் பயணத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.

அதேவேளை சிறிலங்காவுடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு இஸ்ரேல் ஆர்வத்துடன் இருப்பதாக புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் விவசாயம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இஸ்ரேலில் இருந்த சிறிலங்கா வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2000ம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது புலிகள் பாரிய படையெடுப்பு ஒன்றை மேற்கொண்ட போது சிறிலங்கா அரசாங்கம் இஸ்ரேலுடன் முழு அளவிலான இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதனிடம் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை வாங்கியிருந்தது.

அதற்கு முன்னரும் இஸ்ரேலிடம் இருந்து சிறிலங்கா ஆளில்லா வேவு விமானங்கள், அதிவேகத் தாக்குதல் படகுகள், போர் விமானங்கள் போன்ற போராயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் வாங்கியிருந்தது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்ரேலுக்கான தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் டொனால்ட் பெரேராவை நியமித்து இருதரப்பு உறவுக்களை மேலும் வலுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.