Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ்க்கட்சிகள் கோருகின்றன - அமைச்சர் முரளிதரன் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ்க்கட்சிகள் கோருகின்றன - அமைச்சர் முரளிதரன் சாட்சியம்

[ செவ்வாய்க்கிழமை, 14 டிசெம்பர் 2010, 08:43 GMT ] [ கார்வண்ணன் ]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரம் போன்ற தேவையற்ற அதிகாரங்களை தமிழ்க்கட்சிகள் கோருகின்றன. இது பெரும்பான்மையின மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் முரளிதரன் சாட்சியளித்துள்ளார்.

நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தனது சாட்சியத்தில் மேலும் கூறியிருப்பதாவது,

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத அரசியல் தீர்வே காணப்பட வேண்டும்.

தற்போது மாகாணசபைகள் ஊடாகவே தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்தந்த மாகாண மக்களே சுயமாக ஆட்சி செய்யக் கூடிய வகையில் அதிகாரங்களை வழங்கினால் அது திருப்திகரமான தீர்வாக அமையும்.

மாகாணசபைகளுக்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கோரி வருகின்றன.

இத்தகைய கோரிக்கைகள் தேவையற்றவை.

இத்தகைய அதிகாரங்களை வழங்குமாறு கோருவதானது பெரும்பான்மை சமூகத்தினருக்கு மீண்டும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக அமைந்து விடும்.

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, சிறந்த கல்வி வசதிகளை அளித்து, சமநிலைப் பதவிகளை வழங்குவதன் மூலம் தமிழர்களைத் திருப்திப்படுத்த முடியும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் உயர் பதவிகளில் இருந்தனர்.

ஆனால், 30 வருடங்களாகத் தொடர்ந்த போர்ச்சூழலால் தமிழர்களுக்கான உயர் பதவி வாய்ப்புக்கள் குறைந்துள்ளன.

தமிழர்களுக்கு மீண்டும் சமநிலைப் பதவிகள் வழங்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்க்கட்சிகள் பிரிந்து போய் நிற்கின்றன. முதலில் அவர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் தனித்து நின்று கோஷங்களை எழுப்பாமல் சிறிலங்கா அதிபரை நேரடியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

சிறிலங்கா அதிபர் அதற்குத் தயாராகவே உள்ளார்.

தமிழர்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதை ஐதேகவோ ஏனைய கட்சிகளோ விளங்கிக் கொள்ளாமல் கூச்சலிடுகின்றன.

2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களிலும் சரி, அதற்கு முன்னர் நடந்த பேச்சுக்களிலும் சரி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அர்ப்பணிப்புடன் பங்கேற்க வில்லை.

எப்போது புலிகள் பலவீனம் அடைகிறார்களோ- அப்போதே சமாதானப் பேச்சுக்குச் செல்வார்கள்.

அதன் மூலம் தம்மைப் பலப்படுத்திய பின்னர் மீண்டும் போராடுவார்கள்.

பலவீனமான நிலையில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் அதிபர் பிறேமதாச ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்தார்.

இதனால் புலிகள் இயக்கம் பலம் பெற்றது. இது அவர் செய்த மிகப்பெரிய தவறு.

நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்காக பணம் கொடுத்தார்.

அமைதிப் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நோர்வே புலிகளுக்கு நிதி உதவி வழங்கியது.

அந்த நிதி புலிகளால் ஆயுதக்கொள்வனவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

2002ம் ஆண்டு நடந்த ஆறு சுற்று சமாதானப் பேச்சுக்களில் நானும் கலந்து கொண்டேன்.

பேச்சுக்களின் மூலம் ஏதாவது ஒரு தீர்வுக்குச் செல்ல வேண்டும் என்று எமது குழுவுக்குத் தலைமை தாங்கிய அன்ரன் பாலசிங்கத்திடம் நான் வலியுறுத்தியிருந்தேன்.

ஏதேனும் ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேயே சமாதானப் பேச்சுக்களைத் தொடர முடியும் என்பதால்- சமஷ்டித் தீர்வைக் கவனத்தில் கொள்வது என்ற உடன்பாட்டில் கைச்சாத்திடுமாறு நான் வலியுறுத்தினேன்.

எனினும் பாலசிங்கமும் ஏனையவர்களும் அஞ்சினார்கள்.

நான் பிரபாகரனுடன் பேசுகிறேன். நீங்கள் உடன்பாட்டில் கைச்சாத்திடுங்கள் என்று கூறியே அது கையெழுத்திடப்பட்டது.

நாடு திரும்பிய பின்னர் அந்த உடன்பாட்டை நான் பிரபாகரனிடம் கையளித்தேன்.

ஆத்திரமடைந்த அவர் உடன்பாட்டைத் தூக்கியெறிந்ததுடன், தமிழ் மக்களை நான் காட்டிக் கொடுத்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதன் பின்னரே நான் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி சிறிலங்கா அதிபருடன் இணைந்து சமாதானத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தேன்.

மோதல்கள் மூலம் வெற்றி கொள்ள முடியாது. வன்முறைகளைக் கைவிட்டு ஏதாவது ஒரு தீர்வை நோக்கிச் செல்வோம் என்று பல தடவைகள் நான் பிரபாகரனுக்குத் கூறியிருந்தேன்.

அவர் எதையும் செவிமடுக்கவில்லை. தான் நினைத்ததை மட்டுமே நிறைவேற்றினார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தது புலிகள் செய்த மிகப்பெரிய தவறு.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களைச் சரியாகப் புரிந்து செயற்படவில்லை.

பிழையாக விளங்கிக் கொண்டதாலேயே மோதல்கள் உக்கிரமடைந்தன.

தமிழ்த் தலைவர்களும் இனவாதத்தையே தூண்டிவிட்டனர்.

ஆனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்தை நன்கு புரிந்து கொண்டு செயற்பட்டார்.

புலிகள் இயக்கத்துக்குப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய போதும், அவர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு அவர் அவகாசம் வழங்கவில்லை.

அவர்களை அழிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகச் செயற்பட்டதால் புலிகளை முற்றாக ஒழிக்க முடிந்தது.

இப்போது வடபகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன,

அப்படி எதுவும் நடைபெறவில்லை.

முப்பது வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் வசித்த மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று வாழ விரும்புகின்றனர்.

அவர்களை நாம் மீள்குடியமர்த்த வேண்டும்.

தமது சொந்தக் காணிகள் பற்றிய ஆவணங்களைக் கொண்டவர்கள் அவர்களின் இடங்களில் குடியமர்த்தப்படுகின்றனர்.

அரசாங்கக் காணிகளில் அவர்களைக் குடியமர்த்துங்கள் என சிறிலங்கா அதிபரோ வேறு எவருமோ எமக்குக் கூறவில்லை.

வடக்கில் அமைக்கப்படும் இராணுவ முகாம்களின் மூலம் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறும் என்று கூறப்படுவது தவறானது.

போர் நடந்த காலங்களிலும் அங்கு இராணுவ முகாம்கள் இருந்தன.

சிறிலங்காவில் மற்றொரு போருக்கு நிச்சயம் வாய்ப்புகள் இல்லை.

போரினால் தமிழ் மக்கள் தேவையற்ற அழிவுகளைச் சந்தித்துள்ளனர்.

எனவே இன்னொரு போருக்குச் செல்வதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

குறிப்பாக வன்னிமக்கள் ஒருபோதும் அந்த நிலைக்குச் செல்லமாட்டார்கள்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.