Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமனோ நரியைப் பரியாய்க் காட்டினான் பிரிட்டனோ நரியை நரியாய்க் காட்டியது

Featured Replies

சைவ சமயத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர். அவர்களில் மன்னர்களும் உண்டு, மந்திரிகளும் உண்டு, வேடர்களும் உண்டு. இன்னார்தான் நாயன்மாரில் இடம்பெற வேண்டும் என்று அங்கெல்லாம் ‘காடர்’ (CARDER) கிடையாது. அன்பர் பணிசெய்து தில்லைக்கூத்தன் தரிசனப் பேறுபெற்ற திருவுடையார் நாயன்மார் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இதில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் மந்திரியாக இருந்தவர். என்ன மந்திரியோ யாமறியோம். ஆனால் இப்போது இலங்கையில் இருக்கக்கூடிய மந்திரிகள் போல் அவர் யாரையும் கட்டவில்லை. மாறாக ஆணவம், கன்மம், மாயை எனும் மும் மலத்தால் தாம் கட்டுண்டிருப்பதை அறிந்து அதை அறுத்து பேரானந்தப் பெரும்பேற்றை அடைய முற்பட்டார்.

அவர் தந்ததே திருவெம்பாவை. பாவைகள் நோன்பு நோற்கும் காலம் இதுவென்பதாலும் அவரின் பெருமை பேசுவது இவ்விடத்தில் பொருந்தும்.ஒருமுறை பாண்டிய மன்னன் குதிரை வாங்குவதற்காக அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்புகிறான். மாணிக்கவாசகரோ பணம் முழுவதையும் சிவதானத்திற்கு செலவிடுகின்றார்.

அட! அந்தக் காலத்திலும் ஊழல் நடந்துள்ளது என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். மாணிக்கவாசகர் செலவிட்டது அரசபணமாயினும் நடந்தது புண்ணியகாரியம். குதிரை வாங்குவதற்காக கொண்டுசென்ற பணத்தைச் செலவிட்டதால் குதிரைகள் வரவில்லை. வெறுங் கையோடு அரண்மனை திரும்புகிறார் மாணிக்க வாசகர்.

மாணிக்கவாசகரின் நிலைமையை உணர்ந்த பரமசிவன் காட்டு நரிகளை (பரிகளாக) குதிரைகளாக ஆக்கி பாண்டிய மன்னனிடம் அனுப்பிவைக்கின்றார். இவை அமைச்சர் மாணிக்கவாசகருக்காக சிவன் செய்த புதுமை. கூடவே மன்னன் பாண்டியனைத் திருத்துவதற்காகவும் நடத்திய நாடகம் தான் இவை. அதுசரி, இதெல்லாம் எதற்கென்று நீங்கள் கேட்பதும் தெரிகிறது.எல்லாம் காரணத்தோடுதான்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்ட னுக்குச் சென்றபோது பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் (Liam Fox) அவரைச் சந்தித்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இப்போது லியம் பொக்ஸ் இலங்கை வந்து அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவுப் பேருரையை ஆற்றுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில் லியம் பொக்ஸ் இலங்கைக்கு செல்லக்கூடாது என பிரிட்டன் அரசு தடுத்துவிட்டது.

அடக் கடவுளே! தனது நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை இலங்கைக்குச் செல்லக்கூடாது என பிரிட்டன் அரசு தடுத்தமை சாதாரண விடயமா என்ன? என்ன நடந்திருக்கும்? வன்னியுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் லியம் பொக்ஸ் இலங்கைக்கு வந்து போனவர். அட! மாணிக்கவாசகர் சிவத் தொண்டுக்காய் பணத்தைச் செலவிட நரி பரியாகியது. ஆனால் லியம் பொக்ஸ் விடயத்தில் நரி நரிதான் என்பதையே பிரிட்டன் நிரூபித்துள்ளது. நரி, பரி விளையாட்டெல்லாம் கொடுத்ததாலும், எடுத்ததாலும் நடந்தவைதான்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13417

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.