Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் உலகப் போரின் அத்திபாரக்கல்லாக இலங்கை..

Featured Replies

யுத்தம் ஒழிந்து சமாதானம் நிலவுகின்றதென இலங்கை பெருமையடைந்து கொண்டாலும் சர்வதேச ரீதியில் அதன் பெயருக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு சாதாரணமானதன்று. இலங்கை சிறிய நாடு மட்டுமல்ல, மிக வறுமையான நாடும் கூட.நாங்கள் எத்துணை வீராப்பு - பெருமை பேசிக்கொண்டாலும் இந்த நாட்டின் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் நிலைமை இருக்கும் வரை நாம் வீறாப்புப் பேசுவது வேடிக்கையான தாகவே இருக்கும்.

எனினும் இந்த உண்மையை மறந்து அரசியல் வாதிகள் சிலர் இலங்கையர் என்று மார்தட்டி சண்டித்தனக் கதையும் பேசுகின்றனர். தயவுசெய்து இந்தப் பேச்சை எங்கள் நாட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. இப்படியான கதைகள் மத்திய கிழக்கு நாடுகளின் காதுகளில் கேட்காமல் கதைப்பதும் அவசியம். ஏனெனில், இலங்கை அரசியல்வாதிகளின் ஊர்ச்சண்டித்தனக் கதையில் மத்திய கிழக்கு நாட்டார் விசனம் அடைந்தால் மாடியிலிருந்து தங்கள் வீட்டு பணிப் பெண்களை தள்ளி விழுத்தி விடுவர்.

ஆகையால், எங்கள் நிலைமைகளை - உலக நாடுகளில் எங்கள் நாட்டிற்கு இருக்கக்கூடிய மதிப்பு மரியாதைகளை அளவிட்டு அறிந்து கொண்டு எதனையும் கதைப்பது நல்லது. சில நாடுகள் இலங்கை மீது மூன்றாம் உலக யுத்தத்தின் அத்திபாரக் கல்லாக இலங்கையை ஆக்குவதற்கும் முயற்சி செய்கின்றன. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசன நடையில் கூறுவதாயின், இலங்கைக்கு உசுப் பேத்துவதில் சில நாடுகள் கங்கணங்கட்டி உள்ளன. இந்த உசுப்பேத்தலுக்காக துறைமுகங்களைக் கூட அவர்கள் கட்டித் தரலாம். ஆனால் அற்ப சலுகைகளுக்கு ஆசைப்பட்டால் கட்டியதை அனுபவிப்பதற்கு முடியாமல் போய்விடும்.

மாறாக மூன்றாம் உலகப் போரில் முதல் அழிவை சந்தித்த ஏழை நாடு இலங்கை என்ற வரலாற்றுக் குறிப்பு மட்டுமே எஞ்சி நிற்கும். இலங்கையைப் பொறுத்தவரை அது மிகச் சிறிய - வறிய நாடு. இந்த நாட்டிற்கு இன ஒற்றுமையும் அமைதியும் சமாதானமும் அவசியம். இதில் கவனம் செலுத்தாவிடில் உலக நாடுகள் தூக்கி எறியும். இப்போது பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை விமர்சிக்க ஆரம்பித்து விட்டன. இது சாதாரணமான விடயமன்று. இலங்கையின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு ஆபத்தான இந்நிலைமையை இல்லாது போக்க இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன் வைத்து, இப்போது இலங்கை ஒரு சமாதானப் பூங்கா என்ற பெயரை ஏற்படுத்த வேண்டும். இதை விடுத்து அதைச் செய்ய மாட்டோம்.நாம் வீரர். நாம் தான் ஆதிக்குடிகள் என்றால் எல்லாம் தவறணைக் கதையாய்த்தான் போகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13478

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.