Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கை பிரிவினைவாதத்தின் முன்னோக்கிய நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கை பிரிவினைவாதத்தின் முன்னோக்கிய நடவடிக்கை - குணதாச

21 டிசம்பர் 2010

தென் பகுதி ஏழை இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் குடியேற காணிகள் வழங்க வேண்டும்:- குணதாச அமரசேகர:-GTN செய்தியாளர்

நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக உயிரை துச்சமென மதித்து முன்வந்த தென் பகுதி ஏழை இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் குடியேற காணிகள் வழங்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, எதிர்காலத்தில், இனவாத தமிழ் மக்களுக்கு மற்றுமொரு ஈழத்திற்கான இடத்தை வழங்காது, வடக்கு கிழக்கில் பெருமளவில் காணப்படும் காணிகளில் இராணுவ குடும்பங்களை குடியேற்றி, குடியேற்ற திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்காக போராட்டிய இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அவர்கள் வாழ்ந்து வரும் தென்பகுதியிலேயே காணிகளை வழங்க வேணடும் எனவும் அவ்வாறில்லாது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை குடியேற்றுவதன் மூலம், அந்த பிரதேசம் இராணுவமயப்படுத்தப்பட மாட்டாதா என ஊடகவியலாளர் ஒருவர் குணதாச அமரசேகரவிடம் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் ஆத்திமடைந்த குணதாச அமரசேகர, தெற்கில் அவர்களுக்கு வழங்க காணிகள் இல்லை என்பதால், வடக்கு கிழக்கில் காணிகளை வழங்குவது இனவாதமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் காணிகளை கொள்ளையிட்டு வருவதாகவும் இது குறித்து ஜனாதிபதிக்கு விரிவான மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமரசேகர குறிப்பிட்டுள்ளார். கந்தளாய், சேருவில், ஈச்சிலம்பற்று, குச்சவெளி, கோமரங்கடவல, கிண்ணியா, பொத்துவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தீகவாபி மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களிலும் அரசாங்கம் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை புல்டோசர்கள் மூலம் துப்பரவு செய்து, பிரதேசத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளின் அணுசரனையுடன், மீள்குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களில் எந்த சிங்களவரும் இல்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட முஸ்லீம் தனனார்வ அமைப்புகள் மீள்குடியேற்றத்திற்கு உதவி வருவதாகவும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் படிப்படியாக சிங்களவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த மனுவில் தேசப்பற்றுள்ள தேசியக் இயக்கம் கூறியுள்ளது.

இந்த நிலையில், வடக்கு கிழக்கில் காணிக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக கூறும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், தென் பகுதியில் சிங்களவர்கள் வாழ்ந்து வந்த ஆயிரக்காண ஏக்கர் நிலங்களை பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஏன் மௌனம் சாதிக்கிறது என அந்த இயக்கத்தின் செயலாளரான மருத்துவர் வந்த பண்டாரவிடம் கேட்டபோது, தென் பகுதியில் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவது அரசாங்கம் பொருளாதார கொள்கை ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கை எனக் கூறப்படுவது போன்று தெற்கில் காணி தொடர்பான பிரச்சினைகள் அந்த மக்களுக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

தெற்கில் போன்று அல்ல வடக்கு கிழக்கில் காணப்படும் நிலைமை, இந்த நாட்டு மக்களின் காணிகள் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பிரிவினைவாத அமைப்புக்கள் ஊடாக நாட்டில் அமைதியை குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளும் காணிக் கொள்ளை. இதனை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எதிர்கிறது எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அங்கு உரையாற்றிய குணதாச அமரசேகர, வடக்கு கிழக்கில், 4.5 மக்களே வாழ்வதாகவும் இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்க முயற்சிப்பதாகவும் பிரபாகரனும் இதனையே கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிங்கள கிராமங்கள் பூகோள ரீதியாக சுற்றிவளைக்கப்பட்டு, காணிகளை கைப்பற்றும் நடவடிக்கையானது பிரிவினைவாதத்தின் முன்னோக்கிய நடவடிக்கை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் காணி அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போலிப் பிரசாரம், தற்போது கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ், முஸ்லீம் குழுக்கள் ஆயிரக்கணக்கான காணிகளை கைப்பற்றி வருவதுடன், அதில் தெளிவான தந்திரோபாயம் இருப்பதாகவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவ வசந்த பண்டார, கிழக்கு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சஞ்சீவ ஜயவீர ஆகியோரும் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் தமிழ் மற்றும் முஸ்லீம் குழுக்களின் காணி கொள்ளை சம்மந்தமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு விபரமான மனுவொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர், வடக்கு கிழக்கில், இடம்பெறும் சட்டவிரோத காணி கொள்ளைகள், மீள்குடியேற்றும் நடவடிக்கைகயில் இனவாத ரீதியான செயற்பாடுகள் குறித்து, தமது பிரதிநிதிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார்.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.