Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜிசாட்- 5பி செயற்கைக் கோள் வானில் வெடித்துச் சிதறியது

Featured Replies

இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது.

ஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது.

ரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது.

பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலையில் திட எரிபொருள் மூலம் எரிக்கப்படும். இரண்டாவது நிலையில் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும்.

3-வது நிலை மிகவும் சிக்கலான ஒன்று. இதில் திரவ ஹைட்ரஜன் மூலம் சக்தி பெறும் கிரயோஜெனிக் எஞ்ஜின் செயலாற்றும். இந்தக் கட்டம்தான் மிகவும் முக்கியமான கட்டமாகும். தோல்வி ஏற்பட்டால் இதில் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது விஞ்ஞானிகள் அறிந்ததே.

ஆனால் இந்த ஜிசாட்- 5பி முதல் நிலையிலேயே தோல்வி தழுவியதுதான் தற்போது இந்திய விண்வெளிக் கழக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2003ஆம் ஆண்டிலிருந்து 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது இதில் 3 முறை தோல்வி ஏற்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் இது இரண்டாவது தோல்வியாகும். இதற்கு முன்பு ஜிசாட் - 4 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் விழுந்தது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1012/25/1101225022_1.htm

சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஜி எஸ் எல் பி எப் 6 என்ற ராக்கெட் விண்ணில் எழும்பிச் சென்ற ஒரு நிமிடத்துக்குள்ளாகவே வெடித்துச் சிதறி வங்கக் கடலில் விழுந்தது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101225_indiansatellite.shtml

India satellite rocket explodes after take-off

An Indian space rocket carrying a communications satellite has exploded on take-off. Live TV footage showed the rocket disappearing in a plume of smoke moments after its launch in Sriharikota near the city of Chennai (Madras). India's space organisation said it was investigating the cause of the failure.

http://www.bbc.co.uk/news/world-south-asia-12079239

  • தொடங்கியவர்

GSLV - GSAT-5P satellite launch vehicle explodes mid-air! 25th December 2010

India's Launch of GSAT-5P Telecommunication Satellite Fails

http://www.youtube.com/watch?v=KYirFgCd8RU

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அகூதா! இழப்புக்கும் நன்றி ஆண்டவா!!

  • தொடங்கியவர்

1. நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால், ஜிசாட் - 5பி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முயற்சி, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தோல்வியில் முடிந்தது.

2. 125 கோடி ரூபாய் செலவு! : ஜிசாட் - 5பி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இத்திட்டத்தில், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை உருவாக்க இஸ்ரோ 125 கோடி ரூபாய் செலவிட்டிருந்தது. ஜிசாட் - 5 பி செயற்கைக்கோள், 1999ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் - 2இ செயற்கைக்கோள் செய்து வந்த தகவல் தொடர்பு மற்றும் வானிலை ஆய்வுப் பணிகளை தொடர இருந்தது. ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியதையடுத்து, இஸ்ரோ செலவழித்த 125 கோடி ரூபாயும் வீணானது.

3. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டே பயன்படுத்தப்பட இருப்பதால், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தி அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டும் தோல்வியில் முடிந்தது. இதனால், நேற்று ஏவப்பட்ட ராக்கெட்டில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை (2,310 கிலோ) இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவும் முயற்சியையும் இம்முறை இஸ்ரோ மேற்கொண்டிருந்தது.

4. ராக்கெட் தோல்விக்கு காரணம் என்ன? இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் பேட்டி : ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி அடைந்தததற்கான காரணம் என்ன என்பது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்ந்து சென்ற 43 வினாடிகளுக்கு பின், அதன் பாதை மாறியது. அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர விஞ்ஞானிகள் முயன்றனர். அது இயலாததால் 47 வினாடிகளுக்கு பிறகு, அது செயலிழக்கச் செய்யப்பட்டு, 50வது வினாடியில் கடலில் சிதறி விழச் செய்யப்பட்டது. எட்டு கி.மீ., பயணம் செய்த ராக்கெட், இரண்டரை கி.மீ., தூரத்தில் கடலில் விழுந்தது. கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில், தெர்மோஸ்டார்ட் வால்வில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, கடந்த 20ம் தேதி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின், பாதிப்பை சரிசெய்து, எல்லாம் நன்றாக உள்ளது என முடிவு செய்து, விண்ணில் செலுத்தப்பட்டது. இருந்தும், தோல்வி அடைந்து விட்டது.ராக்கெட் தோல்வியின் மூலம் 325 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டின் முதல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செயலிழந்துள்ளதை அறிய முடிகிறது. பிரச்னைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்த பின், வரும் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.வரும் பிப்ரவரி முதல் வாரம் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூன்று செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்படும். சந்திரயான் -2 திட்டம் ரஷ்ய உதவியுடன் 2013 -14 ஆண்டு செயல்படுத்தப்படும்.ரஷ்யா அளித்த கிரையோஜெனிக் இன்ஜின்களில் இன்னும் ஒன்று மீதமுள்ளது. தேவைப்படின் ரஷ்யாவிடமிருந்து பெறப்படும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=153019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.