Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழுதுண்டு பின்செல்வோர் அல்ல தலைவர்கள்….

Featured Replies

முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் தோல்வியில் முடிந்துவிட்டது. இனி வழியில்லை ஆழ்பவன் பின்னாலே செல்வோம்' என்று நினைத்தால் அங்குதான் நாம் பெரும் வரலாற்றுத் தவறை இழைக்கிறோம்.

தொடங்கிய இடத்தைவிடவும் மோசமாய் போராட்டம் பின்தள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் வரலாறு எமக்குப் படிப்பினைகளையும் புதிய பாதைகளையும் தரத் தவறவில்லை.

எல்லாம் முடிந்த கதைகளல்ல. முடிந்த கதைகளிலிருந்து புதிய பிறப்பு ஆரம்பமாகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும். ஒன்றின் முடிவே இன்னொன்றின் தொடக்கமாகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலான போராட்டமும் நியாயமும் களத்தை நன்றாகவே உழுது பண்படுத்தியுள்ளது. அந்த உழுத களத்தில் பயிரிடுங்கள். இப்போது முன்னெப்பொழுதையும் விட தமிழ் மக்களின் பிரச்சினை உலகின் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் அகிம்சைப் போராட்டங்களை இதய சுத்தியுடன் முன்னெடுத்தால் அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

ஆயுதப் போராட்டத்தை 'பயங்கரவாதம்' என்று இலகுவில் முத்திரை குத்தி ஒடுக்கியது போல அகிம்சைப் போரட்டங்களை ஒடுக்க முடியாத அளவிற்கு ஒரு வரலாற்று வளர்ச்சிக்கட்டம் தோன்றியுள்ளது. உரிமைப் போராட்டங்கள் என்பது ஒருபோதும் தேனீர் விருந்தல்ல. ஆதலால் தலைவர்கள் என்று களத்தில் குதித்திருப்பவர்கள் தாம் கூறும் நியாயத்துக்காக போராடியே ஆகவேண்டிய பொறுப்பும் கடமையும் கடப்பாடும் உண்டு.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களே யுத்தத்தால் பாதிப்புற்ற இடங்களில் உங்கள் முகாங்களை அமையுங்கள். மக்களோடு தங்குங்கள். குடாநாட்டை விட்டு வெளியே வந்து பாதிப்புற்ற இடங்களில் ஒவ்வொரு கிராமம் தோறும் காரியாலயங்களைத் திறவுங்கள். மக்களோடு நில்லுங்கள். எங்கு சேவை அவசியமோ அங்கு முகாமிடுங்கள். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றியின் பெயரால் ஒரு பாரிய கடப்பாடு உண்டு. அந்தக் கடப்பாட்டுக்கு இணங்க மக்களின் நாளாந்த வாழ்வின் பிரச்சினைகளில் பங்கெடுத்து முன்னுதாரணமாய் வாழவேண்டிய பொறுப்பு உண்டு.

தேர்தலில் தோல்வி அடைந்தவர்களே தோல்வியை விடவும் நீங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கான கடமை முக்கியம். ஆதலால் உங்கள் காரியாலயங்களை பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களில் திறந்து வைத்து மக்களுக்கான சேவையில் ஈடுபடுங்கள். அதில் அரசு தலையிடும் போது அதுவே போராட்டமாயும் வரலாறாகவும் மாறிவிடுகிறது.

தேர்தலில் வென்றதுடன் வீட்டுக்குப் போவதோ கொழும்பில் வாசம் செய்வதோ அல்ல தலைமைத்துவமும் வழிகாட்டலும். தோல்வி கண்டவுடன் வெளிநாடுகளில் தங்கிவிடுவதல்ல இலட்சிய வாதிகளின் பணி. வென்றோரும் தோற்றோரும் எல்லாவித சுற்றுலாக்களுக்கும் அப்பால் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளில் தரித்திருக்க வேண்டியது முதற்பணி.

'எங்கே தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகின்றதோ அப்போ யான் என்னை அவதரித்துக்; கொள்வேன்' என்பது கீதை வாக்கியம். அவதரிப்பது என்ற சொல்லின் அர்த்தம் மேலிருந்து கீழிறங்குவது என்பதாகும். தர்மம் அழிந்து யுத்த அதர்மம் தலைவிரித்தாடிய தமிழ் மண்ணில் இப்போது உங்களை அவதரித்துக் கொள்ளவேண்டியது உங்கள் கடமையும் பொறுப்புமாகும்.

தென்னையைப் பிடிங்கிய இடத்தில் தன் புன்னையை நடுகின்றான் எதிரி. இரத்தத்தாலும் தியாகத்தாலும் உரமேறியுள்ளது எங்கள் மண். அங்கே எங்கள் பண்பாட்டையும் எமக்கான உரிமைகளையும் ஆழ விதைத்து அறுவடை செய்யுங்கள்.

மக்களும் பண்பாடும் அழிக்கப்பட்ட இடங்களில் சிங்களத்தின் கொடுங்கோன்மையை நிலைநிறுத்தும் ஒரு நடவடிக்கையாக சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை எதிரி அகற்றுகிறான். அவர்கள் தம் தொடர் அழிப்புக்கான சாட்சியாகிவிடக் கூடாது என்பதற்காகவும் தமிழர் தம் வாழ்வு உரிய வகையில் கட்டியெழுப்பி விடப்படக்கூடாது என்பதற்காகவும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை எதிரி இடைவிடாது அகற்றும் முயற்சியில் உள்ளான். அவர்கள் எந்தவொரு 'பயங்கரவாதக் குண்டையும்' கையில் வைத்திருக்கவில்லை. ஆதலால் அவர்களை அகற்றக் கூடாது என்று போராடலாம். அழிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச ஸ்தாபனங்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும் என்று போராடலாம்.

மக்களைத் தனித்து இராணுத்தினது கரங்களில் விட்டு விடாமல் மக்களோடு தலைவர்களே நில்லுங்கள். அப்படி நிற்பதே ஒரு போராட்டந்தான்.

யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. அரசு எத்தகைய உரிமைகளையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. அரசுடன் நின்று உரிமைகளைப் பெற முடியாது. மக்களுடனும் நியாயத்துடனும் உரிமையுடனும் நின்றே உரிமையை அடைய வேண்டும். அரும் பெரும் தியாகங்களைக் கண்ட மண்ணில் உங்கள் பணி இன்னும் மேலோங்க வேண்டியிருக்கிறது. நீதி கோரி தமிழ் மண்ணிலும், தெற்கிலும், உலக அரங்கிலும் அகிம்சை வழியில் போராட வேண்டும்.

இப்போது மக்களின் நாளாந்தத் தேவைகளிலிருந்து உங்களின் சேவைகளை ஆரம்பியுங்கள். தடைவரும் எல்லா இடத்திலும் போராடுங்கள். அப்போது நீங்கள் வரலாற்றின் உயிரோட்டமாயும் வரலாற்று நாயகர்களாயும் மாறுவீர்கள். எறும்பில் இருந்து யானைவரை தன்வாழ்விற்காகப் போராடுகிறது. ஜீவராசிகளின் வளர்ச்சியே போராட்டந்தான். அது மனித ஜீவராசிக்கு ஏன் பொருந்தக்கூடாது? கேள்விக்கிடமற்ற ஜனநாயகத் தளங்கள் ஏராளமுண்டு. போராடும் போதுதான் எது உரிமை எது உரிமையில்லை என்பது தெரிய வரும். எது மறுக்கப்படுகிறது என்பது தெரியவரும். எதிரி மறுக்கும் ஒவ்வொரு நியாயமும் உலகரங்கின் போராட்டத்தின் நியாயமாகிவிடுகிறது.

எங்கிருந்து போராடுவது என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேட்டையாடத் தேவையில்லை. களத்தில் இருந்து பணியை ஆரம்பியுங்கள். பணிக்கு வரும் தடை அனைத்தும் போராட்டமாகி விடும். கைவிடப்பட்ட மக்களுக்காக இரக்கமாய் இருங்கள். இப்போது மக்களுடன் கைகோருங்கள். அவர்களுடன் கூடி அவர்களது கஞ்சியையும் கூளையும் குடிக்கத் தயாராகுங்கள்.

விடுதலைப் புலிகள் களத்தை விட்டு அகற்றப்பட்டதுடன் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பது உண்மைதான். அந்த வெற்றிடத்தை நிரப்பி முன்னுதாரணமிக்க தலைமைத்துவத்தைக் கொடுக்க இப்போது தலைமைத்துவத்துக்கு வந்துள்ளோர்கள் தயாராக வேண்டும். ஒன்றைக் குறைகூறுவதுடன் வரலாறு முடிந்துவிட முடியாது. அதை நிறைவாகச் செய்ய வல்லவர்கள் என்பதை நிருபித்துக் காட்டவேண்டிய பொறுப்பு தலைமைத்துவத்தை ஏற்கத் தலைப்பட்டவர்களுக்கு உண்டு.

- தென்மராட்சியூர் சண்முகசுந்தரம்

http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={ED0D7999-C7BA-49B5-A023-346761C26ED5}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.