Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் தொடரும் கொலை,கொள்ளை சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு

Featured Replies

இராணுவ மற்றும் பொலிஸ் மயமாக்கப்பட்டிருக்கின்ற யாழ்ப்பாணத்தில் துணிகரமாக இடம்பெற்று வருகின்ற தொடர் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலை கொள் ளைச் சம்பவங்களுக்கு கடுமையான கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ள கூட்டமைப்பு, இவ்விடயத்தை எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற தொடர் அசம்பாவிதங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இராணுவ அல்லது பொலிஸ் மயமாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வகையில் கொள்ளைச் சம்பவங்களும் படுகொலைகளும் இடம்பெறுவதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

இங்கு சட்டவிரோதமான குழுக்கள் செயற்படுவதாக இருப்பின் அவ்வாறு நடைபெறுகின்ற படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், ஆயுதமுனை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் இராணுவ உயரதிகாரிகளும் மற்றும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும்.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற இந்த படுகொலைகளுக்கு காரணங்களே இல்லாதிருக்கின்றன. குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரும் இராணுவமும் அறியாது இந்த அசம்பாவிதங்களும் அருவருப்பான செயற்பாடுகளும் நடந்தேறுவதற்கு இடமில்லை. எனவே இத்தகைய சம்பவங்களுக்கு பாதுகாப்பு தரப்பும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும். அண்மையில் சங்கானையில் குருக்கள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்ற காரணத்தைக்கூட பொலிஸார் தமக்கு அறிவிக்கவில்லையென அவரது குடும்பத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவாஜிலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் எமக்கு கவலையையும் அதிர்ச்சியையுமே தருகின்றன. அரசாங்கம் என்னதான் கூறினாலும் எமது மக்கள் மீதான அச்சுறுத்தல்கள், ஆட்கொலைகள், அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் ஜனவரி நான்காம் திகதிய பாராளுமன்ற அமர்வின்போது வடக்கில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

எது எப்படி இருப்பினும் இந்த காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை ஏற்க முடியாது அரசாங்கத்தினாலேயே இதனை தடுத்து நிறுத்த முடியாதிருப்பதுதான் வேடிக்கையானது என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29293

  • தொடங்கியவர்

யாழ்.குடாநாட்டில் மீண்டும் குருதியுறையும் "பயப்பீதி' நோய்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் குருதி உறைந்து போகும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. வன்னி யுத்தத்திற்குப் பின்னர் புறவய அமைதி காணப்பட்ட போதிலும் அப்புறவய அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.

மீண்டும் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த ஆரம்பம் சங்கானையில் அந்தணச் சிவாச்சாரியரை பலியயடுத்தும் அவரின் இரண்டு புதல்வர்களைக் காயப்படுத்தியும் தனது தாண்டவத்தின் ஒத்திகையைக் காட்டி நின்றது.

‘களவு’ என்ற பெயர் சூட்டலோடு அரங்கேறி உள்ள இந்த நாடகம் எங்கு போய் முடியுமென்பது அந்த இறைவனுக்குத்தான் தெரியும். இருந்தும் சங்கானையில் அந்தணச்சிவாச் சாரியர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான போது, யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அவர்கள் அந்த சம்ப வத்திற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார்.சமாதானத்திற்கான விருதைப் பெற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு யாழ்ப்பாணம் கத்தோலிக்கப் பாதுகாவலன் மண்டபத்தில் பாராட்டு விழா நடந்த போதே அவர் இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார்.

யாழ்.கட்டளைத் தளபதியின் மன்னிப்புக் கோரல் யாழ்.குடாநாட்டு மக்களால் மிக உயரிய இடத்தில் வைத்து நோக்கப்பட்டது. அந்தணச்சிவாச்சாரியருக்கு ஏற்பட்ட அவலத் திற்காக யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மன்னிப்புக் கேட்டமை அவரின் பெருந்தன்மையையும், இந்து மதத்திற்கு அவர் வழங்கிய மதிப்பையும் வெளிப்படுத்தியதாகக் கருதி அவரின் மன்னிப்புப் பெறுமதியானதெனவும் மக்கள் பேசிக் கொண்டனர். அது மட்டுமன்றி இதுபோன்ற சம்பவங்களுக்கு யாழ்.குடாநாட்டில் இனிமேல் இடமில்லை என்ற நம்பிக்கையையும் மக்கள் கொண்டிருந்தனர்.

ஆனால், அந்த நம்பிக்கைகளை உடைத்து எறியும் வகையில் நேற்று முன்தினம் இரவு உரும் பிராயில் வைத்து வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஐயா! யாழ்ப்பாண மக்களின் குருதி உறைந்து போகிறது. மீண்டும் பயந்த வாழ்க்கை. என்னே! கொடுமை.களவுக்காக இப்படியான கொலையா? அல்லது கொலைக்காகக் களவு என்ற பெயர் சூட்டலா? யாரறிவார் அச்சோவே.

எது எவ்வாறாயினும் இதுபோன்ற துயரம் நிறைந்த சம்பவங்களை எவரும் எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது. யார் தவறு செய்தாலும் நீதித் துறையை நாடி உரிய தண்டனையைப் பெற்றுக் கொள்ள வைப்ப தானது நீதி மட்டுமல்ல, மற்றவர்கள் நீதியாக நடப்பதற்கும் அதுவே தகுந்த வழியாகும். யாரிடம் அதிகாரம் உள்ளதோ அவர்களே இதனையும் செய்தாக வேண்டும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13897

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.