Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் தூதரகத்தின் முதல்நிலை அதிகாரி மாற்றம்!

Featured Replies

இலண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் அதிகார மட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவின் ஓக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக கடந்த நவம்பர் மாத இறுதியில் இலண்டனுக்கு விஜயம் செய்திருந்தார்.

அப்போது பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடத்திய தீவிர தொடர் போராட்டங்களால் இந் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் அதிகார மட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p>

இதன் முதற்கட்டமாக இத் தூதரகத்தின் ஊடக மற்றும் தொடர்பாடல்களுக்கு பொறுப்பான முதல்நிலைச் செயலாளர் கபில பொன்சேகாவை அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்ப அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இவர் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையினால் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோர் இலண்டனுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த போது கபில பொன்சேகா அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் பின்னணியில் நடைபெற்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இம் முடிவு குறித்து கபில பொன்சேகா அதிர்ச்சி அடைந்ததாக பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இம் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இவ்வதிகாரி, உண்மையான பணியாளர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையினரால் செய்யப்படும் தவறான முறைப்பாடுகளால் பழிவாங்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளர் என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இப் பழிவாங்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அடுத்தது எவர் பழிவாங்கப்படுகின்றாரோ தெரியவில்லை எனவும் இவ்வதிகாரி குறிப்பிட்டதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவராகக் கடமையாற்றிய நிஹால் ஜெயசிங்கவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், இப் பதவிக்கு படைத்தரப்பின் உயரதிகாரி ஒருவரை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் கடும் நிலைப்பாடு காரணமாக இவரது நியமனம் குறித்து இதுவரை முழுமையாகத் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் முன்னைய தொழிற்கட்சி அரசாங்கமும், தற்போதைய கூட்டு அரசாங்கமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={4A8F00ED-1343-45C2-8A8E-0B447543D4C0}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.