Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போரில் இந்தியத் துரோகம். நேர்கண்ட போராளியின் வாக்கு மூலம்.-ஈழ அதிர்வு - 04

Featured Replies

மும்பைத் தாக்குதலுக்கு நீதி தேடிய காந்தி தேசம் எமக்கான நீதியை நாம் தேடும்போது பயங்கரவாதம் என்கிறது. இந்தியத் துரோகத்திற்கு நேர்கண்ட சாட்சிகளாக இலட்சக்கணக்கானவர்கள் உள்ளோம். எப்போதும் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக இருப்போம் என்று கருதிவிடாதீர்கள்.

இந்திய ஆட்சியாளர் முதற்கொண்டு குடிமக்கள் வரை ஒற்றை மனிதனிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை நினைத்து நினைத்து மகிழ்வுற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

பெயர் அப்துல் கசாப்பாம். பாக்கித்தானை சேர்ந்தவனாம். இந்திய முக்கிய நகரமான மும்பை மீது தாக்குதல் தொடுத்த அணியில் உயிருடன் அகப்பட்டவன். 166 பேரை கொன்றுகுவித்த தாக்குதலில் ஈடுபட்டதுதான் அவன் செய்த குற்றமாம். அதற்கு நேர்கண்ட சாட்சிகளும் காணொளி ஆதாரங்களும் இருந்த போதும் ஒன்றரை வருடங்கள் நீதிமன்ற சடங்கு சம்பிரதாயங்கள் என்று இழுத்தடித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கசாப்பிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒற்றைத் தாக்குதல்… 166 பேரின் உயிர் பறிக்கப்பட்டது… அதற்கு காரணமாணவன் என ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி ஒற்றை பாக்கித்தானியனுக்கு மரண தண்டனை வழங்கி காந்தி தேசமே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கின்றது.

இந்தியாவிலே விரைவாக முடிக்கப்பட்ட மிக முக்கிய வழக்கு விசாரணையாகவும் இது அமைந்து விட்டதுடன் சாதனைப் பட்டியலில் வேறு பதியப்பட்டுவிட்டது. இந்த வழக்கு வெறுமனே இந்தியர்கள் வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேரின் கொலைக்கு நீதி வழங்கப்படுவதற்காக முடிக்கப்படவில்லை. மாறாக பரம எதிரியான பாக்கித்தானின் அத்து மீறல் சம்பவங்களிற்கு மகுடம் வைத்தாற்போல் அரங்கேற்றப்பட்ட மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட கசாப்பை வைத்து பாக்கித்தானை பழிவாங்குவதற்காக விரைந்து முடிக்கப்பட்ட வழக்காகவே நோக்கப்படுகிறது.

அதைவிட, விலைவாசி ஏற்றம், ஆயிரக்கணக்கிலான கோடிகளில் ஊழல் செய்துள்ள மந்திரிகளது சாதனைகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளை இன்று இந்தியாவை அளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு எதிர்கொள்ள முடியாது அவற்றில் இருந்து மக்களது கவனத்தை தற்காலிகமாக திசை திருப்புவதற்கான வாய்ப்பாகவே இந்த வழக்கு விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் நிறைவேற்றப்படுமா என்பதுதான் விடைகாண முடியாத வினா.

அது போகட்டும். ஒற்றைத் தாக்குதல்… 166 பேரின் உயிர்கள்… அதிலும் பலர் வெளிநாட்டினர்… இவர்களுக்காக 112 கோடி இந்திய மக்களும் தமது வீட்டில் நடந்த துயரத்திற்கு மருந்திடப்பட்டு விட்டதாகவல்லவா மகிழ்வடைகின்றனர். சரி நியாயம் என்றே வைத்து கொள்வோம். உங்கள் தேச பக்திக்கும் சகோதரத்துவத்திற்கும் மனிதநேயத்திற்கும் மதிப்பளிக்கின்றோம். தலைவணங்குகின்றோம்.

ஆனால் உங்களிற்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதி என்பதனைத்தானே எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களது இழப்புக்களுடன் உங்களது இழப்புக்களை அருகில்வைத்து ஒப்பீடு செய்வதற்கு கூட முடியாதளவிற்கு மலைக்கும் மடுவிற்கும் இடையிலான வித்தியாசமல்லவா.

நாங்கள் எங்களது இழப்புகளுக்கு நீதிவேண்டி புறப்பட்டால்; மட்டும் ஏன் பயங்கரவாதம் என நாமகரணம் சூட்டுகிறீர்கள்? இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட எமது மக்களது உயிர் என்ன சும்மாவா…? அதனை நேர்கண்ட நாங்கள் மாத்திரம் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது எந்த ஊர் நியாயம்?

எத்தனையோ ஆயிரம் மைல் தொலைவில் நடாத்தப்பட்ட தாக்குதல் தொலைக்காட்சி வழி பார்த்தவர்கள் எத்தனை பேர் பார்க்காதவர்கள் எத்தனை பேர் எனத் தெரியவில்லை. ஆனால் ஒட்டு மொத்தமாகவே ஆவேசப்படுகிறீர்கள். குற்றவாளி தணிடிக்கப்பட்டவுடன் மகிழ்சியடைகிறீர்கள்.

அந்த கோபமும் மகிழ்ச்சியும் நீங்கள் மாத்திரம் குத்தகைக்கு எடுத்துவிட்டீர்களா? கண்முன்னே கண்டோம். எமது உறவுகள் கொன்று குவிக்கப்ட்டு உயிரற்ற சடலங்களாக இறுதிச் சடங்கு என்ற சம்பிரதாயத்தைக் கூட செய்யவிடாது விரட்டி விரட்டி அடித்தது உங்கள் இந்தியத் திருநாட்டில் இருந்து வழங்கப்பட்ட ஆயுத தளபாட ஆளணி உதவிகளின் துணைகொண்டுதானே? எல்லாவற்றிற்கும் மேலாக செயற்கை;கோள் மூலமாக படம் பிடித்தல்லவா சிங்களவனுக்கு வழிகாட்டினீர்கள் தப்பி ஓடிய எமது உறவுகளின் வழித்தடத்தை.

இவை அனைத்தும் நாங்கள் நேர்நின்று கண்டுணர்ந்தவர்கள். ஒருவரல்ல இருவரல்ல பல இலட்சம் பேரது கண்கள் வழியே மனத்திரையில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் உங்களை தண்டிக்கப் போகின்றார்கள். நாங்கள் அதைப் பார்த்தும் கேட்டும் மகிழ்வுற.

தனித்திருக்கும் பெண் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டால் தனது கூரிய நகங்களை ஆயதமாக பயன்படுத்துவது குற்றமாகாது என கூறிச் சென்றவர் வேறு யாரும் அல்ல உங்கள் தேச பிதா காந்தியடிகள் தான்.

எத்தனை ஆயிரம் ஆயிரம் எம் இன பெண்கள் மாணபங்கப்பட்டு சிதைக்கப்பட்டார்கள். வரலாறு தெரியுமா உங்களுக்கு? ஏன் உங்கள் நாட்டு இராணுவம் அமைதிப்படை என்று கூறி எமது மண்ணில் கால் பதித்து இதைத்தானே செய்து விட்டுப் போனார்கள். நீங்கள் ஆயதம் வைத்திருந்தால் வீரர்கள். அழிக்கப்படும் எமது உறவுகளை பாதுகாத்து எமது வாழ்வை உறுதி செய்து கொள்ள நாங்கள் ஆயுதம் தரித்தால் நாங்கள் பயங்கரவாதிகளா?

எல்லா உயிர்களும் ஒன்றுதான். அதன் வலிகளும் ஒன்றுதான். உங்களுக்கு அடிபட்டால் எங்களுக்கு வலிக்கிறது. ஆனால் எங்களுக்கு அடிபடும் போது உங்களுக்கு வலிக்க வில்லையே ஏன்? நாங்கள் சிங்களனை திருப்பியடித்தால் மட்டும் உங்களிற்கு வலிக்கிறது. இதில் இருந்து தெரிகிறது அல்லவா எங்களது வலி எமக்கானதே. அதனை போக்கிக் கொள்ள வேண்டியதும் எங்களது கடமையாகும்.

இந்தியா என்ன உலகமே அதே நிலைப்பாட்டில்தானே இயங்கிக் கொண்டு இருக்கின்றது. யாரை நம்பி நாம் இல்லை. எமக்காண விடுதலை நம் கையில். அதற்கு முதலில் ஒன்றாக வேண்டும் நாம். வென்றாக வேண்டும் தமிழீழம்.

தமிழின அழிப்பில் சிங்களத்துடன் சகலவிதத்திலும் உறுதுணையாக இருந்து காந்தி தேசம் செயற்பட்டு வரலாற்றுத் துரோகம் இழைத்திருக்கின்றது. இந்த வரலாற்றுத் துரோகத்திற்கு எத்தனையோ சாட்சிகள் எம்மிடம் உண்டு.

கடந்த ஆண்டு மே மாதம் 18ம் நாள்வரை களத்தில் நின்று இந்தியத் துரோகத்தின் சாட்சியாக விளங்கும் களப்போராளி ஒருவர் இனி உங்களுடன்…

சம்பவம் - 1

2006ம் ஆண்டு சண்டை தொடங்கியதில் இருந்து சிங்களனுக்கு எல்லா நாடுகளும் சேர்ந்து தான் உதவி செய்துவந்தது. குறிப்பாக இந்தியா நேரடியாகவே களமுணைகளில் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து சண்டை பிடித்தது.

மன்னார் பகுதியில் இருந்து பூநகரியை ஆக்கிரமித்து அங்கிருந்து பரந்தன் நோக்கி தனது ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முயற்சித்த நேரம் அது.

பூநகரி பகுதியில் களநடவடிக்கையில் நின்ட வேவுப்புலிகளிடம் ஒருவர் பிடிபட்டு எங்களிடத்திற்கு தான் கொண்டுவந்தார்கள். அப்ப அவனை விசாரிக்கேக்க…

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சார்க் மாநாட்டிற்கு வருகைதந்த மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்கு வந்தவர்களில் நானும் ஒருவன். எங்களோடு வந்தவர்கள் திரும்பிச் செல்லவில்லை. களத்தில் வேவு நடவடிக்கைகளுக்காக பல அணிகளாக பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றோம். (மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அழைத்துவரப்பட்ட படைகளும் ஆயத தளபாடங்கள் வாகன அணிகள் என்பன மீழ கொண்டு செல்லப்படவில்லையென அப்போது செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது)

மன்னார் பகுதியில் வைத்து எங்கள் அணிக்கு (துரோகி) கருணாதான் பயிற்சி வழங்கியதாகவும் வன்னிகள நிலைமைகள் எவ்வாறு இருக்கும் எவ்வாறு ஊடுருவிச் செல்வது பற்றிய தகவல்களை வழங்கியதாகவும் தெரிவித்த அந்த இந்திய இராணுவத்தினனிடம் அந்த பகுதி வரைபடம் ஜி.பி.எஸ். வழிகாட்டும் கருவி உட்பட ஆயதங்களும் இருந்தது.

சம்பவம் - 2

மாத்தளன் பகுதியில் நிலைகளை அமைத்துக் கொண்டு சண்டைபிடித்துக் கொண்டு இருந்தனாங்கள். அப்போது ஒருநாள் வோக்கியில் நிண்ட பிள்ளை அக்கா இஞ்சை வாங்கோ வித்தியாசமான பரிச்சயம் இல்லாத குரலில் வோக்கில் இடைமறித்து கதைக்கிறாங்கள் என்று சக போராளியின் அழைப்பை அடுத்து இடைமறித்த குரலுடன் கதை கொடுத்தேன்.

நாங்கள் எங்கட மெயினை தொடர்பிற்கு அழைத்த போது அந்த பிரிச்சயம் இல்லாத குரல் அதே அலைவரிசையில் வந்து ஓம்.. ஓம்.. நாங்கள் மெயின் தான் சொல்லுங்கோ என பதில் குரல் வந்தது. எனக்கு தமிழ்நாட்டு குரல் ஓரளவு பரிச்சையம் என்றபடியால் உடனடியாக இடைமறித்த குரல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரது குரல் என்பதை தெரிந்து கொண்N;டன்.

மேலும் நாங்கள் கதை கொடுத்த போது பாப்பா நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பக்கத்தில்தான் நிக்கிறம் உங்களை விரைவாக வந்து மீட்டுவிடுவோம். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தயாராக இருங்கள்… என்றது அந்த குரல்.

அடிக்கடி பாப்பா என்ற சொல்லாடல் வந்தவுடன் உறுதியாகியது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய இராணுவத்தினன்தான் என்பது. எங்கட குரல் நாங்கள் கதைத்த விதம் சின்ன பிள்ளைகள் போல் இருந்ததால் பாப்பா என்று அழைத்தார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் சிறு பெண்பிள்ளைகளை பாப்பா என்று அழைக்கும் வழக்கம் இருக்கின்றது.

எங்களால் விளங்கிக் கொள்ள முடியாத பல மொழிகள் எல்லாம் வோக்கி அலைவரிசையில் கேட்டுக் கொண்டிருக்கும். அதைவிட நாங்கள் இந்திய இராணுவத்தினர் உட்பட பல வேற்று நாட்டைச் சேர்ந்தவர்களையும் சிங்கள இராணுவத்துடன் களமுணையில் கண்டனாங்கள்.

எல்லைகள் குறுகிவிட்டபின்னர் ஆமிக்காரங்களோட நடமாட்டம் வடிவா தெரியும். எங்களையும் அவங்களுக்கு தெரியும். எங்களை தங்களிடம் வந்துவிடுமாறு சைகை மூலம் அழைப்பார்கள். நாங்கள் றைபிள் பரளை தூக்கி காட்டிவிட்டு நகர்ந்து விடுவோம்.

சம்பவம் - 3

இரட்டைவாய்கால் சந்தி பகுதியில் இருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி முன்னேறுவதற்கு சிங்கள இராணுவம் பலதடவை தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. நாங்கள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்ததால் அவங்களால் முன்னேற முடியவில்லை.

அந்தப் பகுதியில் மிகப் பெரும் மண் அணைகளை அமைத்து எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்தனாங்கள். அப்போதும் இடைவிடாது தாக்கிக் கொண்டு இருந்தான். பல சந்தர்ப்பங்களில் கரும்புலி வீரர்களை உள்வைத்து மண்ணால் மூடி மண் அணைகளை உருவாக்கி இருந்தோம். ஆமிக்காரங்கள் கிட்ட நெருங்கிவரவிட்டு வெடித்து சிதறி சிங்களத்திற்கு திகைப்பை ஏற்படுத்தியிருந்தனர் அந்த ஒப்பற்ற கரும்புலி மாவீர்கள். குறித்த பகுதியில் தளபதி குமரன் அண்ணாதான் பொறுப்பாக நிண்டவர். அவரது வழிகாட்டுதலில் சிங்களவர்களை முன்னேறவிடாது கடுமையாக சண்டை பிடித்து தக்கவைத்து கொண்டிருந்தனாங்கள்.

அனேகமாக சண்டை முடியிறதுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் எமது அணி ஒன்று எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பேரையும் சரணடைந்து விடுமாறு சிங்களவன் அறைகூவல் விட்டு கொண்டிருந்தான். அப்போது தளபதி குமரன் அண்ணா தலைமையிலான அணி முற்றுகையினை உடைத்து எம்மை மீட்டெடுத்தது. அந்த அணியுடன் இணைந்து எமது அணியை சுற்றிவளைத்த இராணுவத்தை சுற்றிவளைத்து கடும் பதிலடி கொடுத்து அத்தனைபேரையும் கொன்று குவித்து வீர சாதனை படைத்தோம்.

இந்த சண்டையில் பலநூறு இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்திய இராணுவத்தினரது சடலங்கள் காணப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிபிர் வந்து கொல்லப்பட்டு சிதறிக்கிடந்த சிங்கள இநிதிய இராணுவத்தினரது உடலங்கள் இருந்த பகுதி மீது குண்டுவீசிச் சென்றது.

இதுவரை காலமும் தமிழர்களது வாழ்விடங்களின் மீதும் களமுணையில் எமது நிலைகள் மீதும் தாக்குதல் நடாத்திய சிங்கள விமானங்கள் முதல் முறையாக கொல்லப்பட்டு சிதறிக்கிடந்த தமது சகாக்களது சடலங்கள் மீதே குண்டு வீசி அழித்திருந்தது.

தமிழர்களது இன அழிப்புப் போரில் சிங்களவனுடன் இந்திய இராணுவமும் சேர்ந்து சண்டைபிடித்தது அம்பலமாகிவிடுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு விமானத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

சிங்களம் சிங்களமாகவே களமாடியிருந்தால் நான்காம் கட்ட ஈழப்போர் தலைவன் எண்ணப்படி வகுக்கப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றி காணப்பட்டிருக்கும். ஆனால் சிங்களம் இந்தியா, சீனா, பாக்கித்தான், வங்களாதேசம், மியான்மார், ரைசியா, இசுரவேல், சவுதிஅரேபியா, ஈரான், வியட்னம், கியூபா போன்ற நாடுகளுடன் உலக வல்லரசுகளான அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட இருபதிற்கு மேற்பட்ட நாடுகளின் துணை கொண்டல்லவா தமிழீழ மண்ணில் அதர்மப் போர் புரிந்தது.

இந்த அக்கிரம யுத்தத்தில் முழு பாத்திரம் இந்தியாவையே சேரும். இந்தியா விலகி நின்றிருக்குமானால் பெரும்பாலான நாடுகள் சிங்களத்துடனான இந்த அக்கிரமக் கூட்டில் இருந்து விலகியிருக்கும் என்பதே உண்மை நிலையாகும்.

நாம் விடயத்திற்கு வருவோம். தமிழக இந்திய உறவுகளே உங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், துணைவர்கள், தந்தையர்கள் எத்தனைபேர் இவ்வாறு ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட அக்கிரமப் போரில் ஈடுபட்டு அனியாயச் சாவினை தளுவி இந்திய வறட்டுக் கௌரவத்திற்காக ஈழ மண்ணிலேயே கதை முடிக்கப்பட்டு இருப்பார்கள்? விடைதான் கண்டுவிட முடியுமா?

எது எவ்வாறாயினும் எல்லாமே வரலாறாகிப் போய் எம் ஆழ்மனங்களில் அழியா நினைவுகளாக பதிவாகிப் போய்விட்டது. ஒற்றைப் பாக்கித்தானியனுக்கு தூக்குத் தண்டனை அதுவும் வெறும் தீரப்பளவில் வழங்கப்பட்டதற்கே குதூகலித்து கும்மாளம் போட்டீர்கள். எமக்கும் ஒரு காலம் வரும். இந்தியத் துரோகத்திற்கு பதிலடி கொடுக்கும் காலம் வரும். அப்போது நாங்களும் துள்ளிக் குதித்து அகமகிழ்ந்து சந்தோசக் கூத்தாடுவோம்.

எமக்கான காலம் நிச்சயம் வரும். விரைந்து வரும். தலைவர் வருவார். விரைந்து வருவார். எதிரிகள் துரோகிகள் கதை முடித்து தமிழீழம் மீட்டெடுக்க எம் தலைவர் வருவார். அதற்கான புறச்சூழலை ஏற்படுத்த வேண்டியது உலகத் தமிழர்களாகிய எமது வரலாற்றுக்கடமையாகும். மண்ணோடு மண்ணாக புதையுண்டு சிங்களத்தையும் சிங்களத்திற்கு துணையாக வந்த பன்னாட்டுப் படைகளையும் சிதறடித்து தலைவனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து வரலாறாகிப் போய்விட்ட எண்ணற்ற எம் கரும்புலி மாவீரர்களது நெஞ்சுரத்தையும் தியாகத்தையும் நினைத்து பாருங்கள் உறவுகளே.

எமக்குள் இருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் மனக்கசப்புகள் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற வெற்று கூப்பாடுகள் போன்றவை எமது மாவீரர்களது தியாகத்திற்கு முன்னால் வெறும் அற்பமானதே. ஆகவே எமக்குள் இடைவெளியை ஏற்படுத்தும் இவைகளை தூக்கியெறிந்து விட்டு எமது இறுதியும் அறுதியுமான இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை தலைவன் வழிகாட்டுதலில் ஓயாது களமாடுவோம். தமிழீழம் காண்போம்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1486:2010-08-11-08-16-07&catid=34:2009-04-30-10-08-44&Itemid=29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.