Jump to content

இந்து என்றால் என்ன? ஒரு பகுப்பாய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நிதர்சன் நான் சுட்டிக்காட்டுவது வரலாற்றையல்ல யதார்த்தத்தையும் நடைமுறையையும் மட்டும் தான்.

வரலாறுகள் எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றன.ஆனால் உண்மையான வரலாறு என்பது எப்போதும் ஒற்றைப்பரிமாணமுள்ளதாக இருப்பதில்லை.பல்பரிமாணமும் பல்வேறு பக்கங்களும் கொண்டதுதான் உண்மையான வரலாறு.இந்தை அடியாகக் கொண்ட இந்தியா என்பது மகாவம்சம் சொல்லித்தந்ததல்ல

எதற்கெடுத்தாலும் மகாவம்சம் புளுகு தீபவம்சம் பொய்மூட்டை என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள்.சிங்களவர் வருகைக்கு பலநூற்றுக்கணக்கான ஆண்டு முன்னரேயே தமிழராகிய நாம் இலங்கையில் இருந்திருக்கிறோம் என்றால் ஏன் பிந்தி வந்த சிங்களவரால் ஒரு மகாவம்சத்தையோ தீபவம்சத்தையோ எழுத முடிந்ததுபோல எங்களால் எழுத முடியவில்லை.

நாங்கள் செய்ததெல்லாம் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பரணி பாடுவதை விட்டுப் புறணி பாடியதுதான்.அதையே நீங்களும் பாடாமல் கட்டுரையாளர் சொல்ல விழைவதை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

ஒரே கட்டுரையில் எல்லாவற்றையும் கட்டுரையாளரே தோலுரித்து வாயில் தீத்திவிடவேண்டும் என்று நினைக்கிறீர்களா.கட்டுரையாளர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஈழவன் அவர்களோ!

கட்டுரை என்பது என்ன? ஆய்வு என்பது என்ன? சாதாரண கட்டுரைக்கும் ஆய்வுக்கட்டுரைக்கும் இடையே என்ன வித்தியாசம்? இவற்றை ஒரு கட்டுரையாளன் அறிய வேண்டும். கட்டு + உரை என்பதற்க்குள் ஒரு பற்தி தாண்டிய எல்லாம் அடங்கும். ஆனால் ஆய்வுக்கட்டுரை என்பது சாரணகட்டுரைகளில் இருந்து வேறு பட்டது என்பதையே நான் காட்ட முனைந்தேன். நான் ஆய்வாளனும் அல்ல கட்டுரையாளனும் அல்ல. அதனால் கட்டுரை என்பதற்க்கு வரைவிலக்கனம் தெரியாதவனும் அல்ல. நான் எவரையும் புறணி பாடவில்லை. அதே நேரம் சங்க காலத்தமிழர் தோற்கடிக்கப்பட்டு எமது தொன்மைகள் அழிக்கப்பட்டதாக தான் வரலாறு சொல்கின்றது. அதற்க்கு ஆதரமும் இருக்கின்றது. ஏனெனில் கோவில் களை கட்டி அவற்றை நிலை பெற வைத்த தமிழனுக்கு.. அழிய சுவடுகளுடன் அரன்மனை கட்ட தெரிந்த தமிழனுக்கு ஏன் தமது வராலாற்றை எழுத தெரியமல் போனது? ஏன் அவர்கள் அதை எழுத வில்லை என்று நினைக்க வேண்டும். அவர்கள் எழுதியதை ஏன் அன்னியர்கள் அழித்திருக்க கூடாது? இப்படியும் சிந்திக்கலாம் அல்லவா? தமிழர் புறணி பாடுவதில்லை என்று வாதாட நான் வரவில்லை. ஆனால் தமிழன் புறணி பாடியதால் தான் வரலாறு அழிந்தது என்று சொன்னீர்களே அதற்க்கு பதிலளிக்க முனைந்தேன் அவ்வளவு தான். அடுத்து ஒரு ஆய்வு முழமையாக இல்லை எனில் அந்த ஆய்வின் நோக்கம் என்ன? என்னால் ஆராய முடியாது முடிந்தால் நீ முயற்ச்சி என்று மற்றவரிடம் விடுவதா? உதராணமாக ஈராக் மீது ஏன் அமெரிக்கா போர் தொடுத்தது என்று ஆய்வு செய்து கட்டுரை எழுதுபவர் அதன் அடிப்படை பிரச்சினை முதல் இன்றைய நிலை வரை தெரிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் ஆய்வு முழமை பெறும்.. அதை விடுத்து... முன்னர் ஏதாவது நடந்நதிருக்கலாம்...அல்லது தற்போது ஏதொ நடந்து கொண்டிருக்கின்றது. என்று சொல்வதற்க்கு பெயர் ஆய்வல்ல. இதை சாதரணமாக அனைவரும் ஊகித்து கொள்ளலாம். ஒரு ஆய்வாளன் சாதாரண மக்களின் சிந்தனைக்கு எட்டா விடையங்களையும் சாதரண மக்களுக்கு தெரியாத விடையங்களையும் உள்ளடக்க முற்ப்படவேண்டும். அது தான் சிறந்த ஆய்வாக இருக்கும். இல்லை எனில் அது வெறும் பேப்பரும் பென்னும் இருக்கின்றது என்பதற்காக எழுதப்பட்டதாகவே இருக்கும்....

கருத்து திசை மாறி போய் கொண்டிருக்கின்றது. அதற்காய் மன்னிக்ககவும்....

Posted

இந்த விடையம் சம்பந்தமாக ஒரு புத்தகம் பழ நெடுமாறன் எழுதியுள்ளார் போலுள்ளது.

"உருவாகாத இந்திய தேசியம் உருவான இந்து பாசிசம்"

http://www.thenseide.com/cgi-bin/Hindutva-05.asp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கடவுள் இல்லையென்று புத்தர் சொன்னாரா?

புதுக்கதையாக இருக்கிறதே?

யாராவது தெளிவுபடுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல்லவன் புத்தர் குறிப்பாக எந்த மதத்தையாவது குறிப்பிட்டு அந்த மதத்தை விமர்சித்ததாக நான் படிக்கவில்லை.ஆனால் தன்னை தெய்வமாக வணங்குவதை அவர் எதிர்த்திருக்கிறார்.அதே போன்று தனிமனித ஆளுமைகளை வளர்த்தெடுப்பதை கடவுள் பற்றிய கொள்கைக்கெதிரான அவரது கோட்பாடு என்றும் படித்தேன் யாராவது மேலதிகத் தகவல்கள் இருந்தால் குறிப்பிடுங்கள்

Posted

கடவுள் இல்லையென்று புத்தர் சொன்னாரா?

புதுக்கதையாக இருக்கிறதே?

யாராவது தெளிவுபடுத்த முடியுமா?

கடவுள் இருக்கிறார் எண்டு புத்தர் சொன்னாரா நல்லவன்.?? அவர் சொன்னதெல்லாம் மனிதனேயம் பற்றியது. கடவுளை வணங்கு என்று புத்தர் எங்கும் சொல்லவில்லை ஆகவே கடவுள் சம்பந்தமாய் புத்தரின் தெளிவு விளங்கக்கூடியவருக்கு விளங்கும்.

Posted

தமிழன் பிறப்பால் இந்து என்ற உண்மை இந்த பகுப்பு ஆய்வாளர்களுக்கு தெரியாதா?

இந்து சமயம்பற்றி எழுதுபவர்கள் ஏடாகூடமாக சாடுபவர்கள்

இந்து எட்டப்பர்கூட்டமென்று தெரியாதா..

புராண சரித்திரக்கதைகள் எத்தனையோ இருக்கின்றன.. அத்னையிலும் இந்துக்கள்தான் தமிழுடன் இணைந்துள்ளார்கள்..

பரதன் நமது முதல் மன்னன் என்று யாரோ இங்கு எழுதியிருந்தார்கள்.. பாரதபூமிக்கு அடிக்கல் நாட்டிது பரதன் என்பது மற்றுமொரு கதை..

பரதனை பார்ப்பனிய கதாநாயகனாக சித்தரித்து எள்ளிநகையாடும் நமது பகுப்பு ஆய்வாளர்கள் இராமாயணத்தையும் மாபாரதத்தையும் உதாரணத்துக்கு உதவிக்கு கூப்பிடுவதேன்..

நமது சரித்திரம்பற்றி பேசும்போது மாத்திரம் மகாபாரதத்துடன்.. இராமாயணத்துடன் நீச்சலடிக்கும் இவர்கள் இராவணன் மலைகளை தொடுத்து வீணை மீட்டினான் என்று பெருமைபேசும் இவ் ஆய்வாளர்கள் தமது வசதிக்கேற்ப இராமாயணத்தை பார்ப்பனியப்புனைகதை என்று வர்ணிப்பதன் மாயம் என்ன?

இவர்கள் நமது சரித்திரத்தை புரட்டிப்பார்த்தார்களானால்..

இவர்களது பரம்பரையை பின்நகர்ந்து பார்த்தார்களானால்..

எந்தத் தலைமுறையில் இவர்கள் எட்டப்பர்களாக மாறினார்கள்..

எந்த எந்த மன்னர்களையும் மக்களையும் காட்டிக்கொடுத்து தமிழையும் நமது மண்ணையும் விற்றார்கள் என்பது புலப்படும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சுகுமாரன் சும்மா பின்னிப் பெடலெடுத்திட்டீங்க

அப்படியே ஒரு சங்கிலி கிடைத்தால் இரண்டு சில்லைப்பூட்டி சைக்கிளோடிப் பழகுங்க

கட்டப்பொம்மன் மட்டுமல்ல எட்டப்பன் கூட இந்துதான்

Posted

உங்கள் தமிழ் எனக்கு விழங்கவில்லை.. ஆனால் நீங்கள் எழுதியகருத்தின்னிமித்தம் உங்களை சரியாகத்தான் இனம்கண்டுள்ளீர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எட்டப்பன் கூட இந்துதான் என்று சொன்னால் அவனை என்னுடன் அடையாளப்படுத்துகிறீர்களா ஆமாம் அவனும் தமிழனே/இந்துவே அதைச் சொல்ல தயக்கம் ஏன்?

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒரு இந்துக் காப்பியம் காட்டுங்கள் நீங்கள் பாய்ந்து பாய்ந்து எழுதியதையெல்லாம் ஒப்புக்கொள்கிறேன்.

சம்பந்தா சம்பந்தமில்லாமல் ராமாயணம் மகாபாரதம் காவியம் காப்பியம் என்று உளறவேண்டாம்.ராமாயணம் உண்மையென்றால் கூட ராவணன் இந்துவாக இருந்திருக்க மாட்டான் சைவனாகத்தான் இருந்திருப்பான்.

உங்கள் மறுமொழியிலிருந்து நீங்கள் எதை நிரூபிக்க முயல்கிறீர்கள் என்றே புரியவில்லை.அதற்குள் உங்கள் கருத்தை எதிர்ப்பவருக்கு எட்டப்பர் பட்டம் வேறு

Posted

இந்த அண்ண இந்துவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத்தெரியவில்லை.. இவர் இந்துவாக இருப்பாராகின் இந்து என்று நாம் யாரை சொல்லுகின்றோம் என்பது நிச்சயமாக்தெரிந்திருக்கும். ஆதனால்தான் இந்துவாகவிருந்து பாண்டியனை காட்டிக்கொடுத்து தனது இந்துத்துவத்தை அடகுவைத்த எட்டப்பனுக்கு ஒப்பிட்டு கருத்து எழுதியிருந்தேன்..

மேலும் இங்கு இந்தியாவையும் இந்துத்துவத்தைப்பற்றியும்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதற்குமேல் ஏதும் விவாதித்தால் எனக்கே குழம்பிவிடும் வேண்டாம்

உங்கள் எட்டாம் வகுப்புப் பிழைகளை நான் மன்னித்துவிட்டேன்.

எனது ஆறாம் வகுப்புப் பிழைகளை நீங்கள் மன்னியுங்கள்

  • 2 weeks later...
Posted

இந்து மதம்

சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74இ 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

Posted

கடவுள் இல்லையென்று புத்தர் சொன்னாரா?

புதுக்கதையாக இருக்கிறதே?

யாராவது தெளிவுபடுத்த முடியுமா?

அப்படி அவர் கூறவில்லை

புத்த மதம் சிலபேரால் நாத்திகத்துக்கு இணையாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம் புத்த மத கோட்பாட்டின் படி துன்பத்திலிருந்து விடுபடுவது தனிமனிதன் கையில்தானிருக்கிறதே ஒழிய கடவுளால் அவனை விடுவிக்கமுடியாது என்பதே.

  • 13 years later...
Posted
On 12/11/2005 at 1:20 PM, kurukaalapoovan said:

இந்து என்ற சொல்லானது, அச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் உட்படப் பெரும்பான்மையினருக்கு, உண்மையில், பெரும் குழப்பத்தைத்தான்; ஏற்படுத்தி வருகின்றது. இந்தச் சொல்லானது இன்று இந்தியா எனக் கூறப்படும் தரைப் பகுதி மக்களால் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதா, அப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால், அது என்ன பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்து என்ற சொல்லானது ஏதாவது சமயத்தைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதா, பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தச் சமயம் எந்தக் கடவுளை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருந்தது, அதன் சிந்தாந்தம் என்ன, இந்து என்ற சொல்லானது பண்டைக் காலத்தில் ஒரு சமயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்திராவிட்டால், அச் சொல்லானது சமயத்தைக் குறிக்க எப்போது புகுத்தப்பட்டது, யாiரால் புகுத்தப்பட்டது எனப் பல கேள்விகள் எழுகின்றன.

 

துரதிஷ்டவசமாக, இந்து என்ற சொல் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும், விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இன்று வரை எவராலும் செய்யப்படவில்லை.

 

அதுமாத்திரம் அல்ல. இந்து சமயம் (Hinduism) என்பது பற்றிப் பல நூறு நூல்களும், பல நூறு ஆய்வுக் கட்டுரைகளும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு வந்துள்ளன, இன்றும் எழுதப்படுகின்றன. ஆனால், இந்து என்ற சொல் என்ன, அது எப்போது முதல் பாவனையில் வந்திருந்தது, அது சமயத்துடன் எப்படி இணைகிறது என்பவைகள் பற்றி எவரும் விஞ்ஞான ரீதியாக ஆராயாது, நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளதைத்தான் காணமுடிகிறது.

 

இது மாத்திரமல்ல. இன்று போதனையிலும், பிரசங்கங்களிலும் ஈடுபட்டு வருபவர்களும், ஊடகங்களும், இந்து, இந்து சமயம், இந்துக் கலாசாரம், என்ற பதங்களை யெல்லாம் பயன்படுத்தும்போதும், இந்து என்பதற்கான தெளிவான விளக்கம் அவைகளிடமிருந்து பெறமுடியாதுதான் உள்ளது.

 

இன்று இந்து நாகரிகம் என்ற பாடமானது பல்கலைக் கழகம் வரை கற்பிக்கப்பட்டு, பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்து நாகரிகம், இந்து சமயம் என்ற சொற்றொடர்கள் பின்னிப் பிணைக்கப்பட்டு, விடயங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. நூல்கள் பலவும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களால் மாணவர்களுக்கும், பொது மக்களுக்குமென எழுதப்பட்டும் வந்துள்ளன. ஆனால், அவற்றில் தெளிவாக விடயங்கள் கூறப்படவில்லை. உதாரணமாக: யாழ் பல்கலைக் கழக இந்து நாகரிகப் பேராசிரியர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள்

 

"இந்துப் பண்பாட்டு மரபுகள்" என்ற தலைப்பில், 1992ஆம் ஆண்டில; ஒரு நூலை எழுதியிருந்தார். இந்த நூலில் இந்துக்கள், இந்து பண்பாடு, இந்து சமயம், இந்து விக்கிரகங்கள் என்ற பதங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளபோதும், அந்நூலில் இந்து சமயம் என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை!

 

இந்தியா, இந்து, இந்துக்கள், இந்து சமயம், இந்துப் பண்பாடு என்ற கருவூல உருவாக்கத்திலும், அதை மாணவர்களுக்குப் புகுத்துவதிலும் மாத்திரம் ஈடுபடுகின்றன என்ற உண்மையையும், இந்த நூல்களை எழுதியவர்களுக்குத் தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை என்ற உண்மையையும்தான் இந்த நூல்கள் அனைத்தும் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. சுருங்கக் கூறினால், இந்த நூல்களும், ஆசிரியர்களும், அறிவியல் என்பதை நிராகரித்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

 

தமிழில் இப்பிரச்சினை இப்படி இருக்கையில், Hindu, Hinduism என்ற சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இச்சொற்கள் குழப்பத்தைத்தான் உருவாக்கி வருகின்றன.

 

சிலர்: "Hindu was the term used by the Persians for the people of the Indian subcontinent. Hinduism later came to be used by outsiders for the varied religious beliefs of the majority of the people" என்று கூறுவர்.

 

இந்தநிலையில், இன்றைய இந்தியப் பகுதிகளில், எவரும் தம்மைப் பண்டைக் காலத்தில் Hindu எனக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், இந்து சமயம் என ஒன்று பண்டைக் காலத்தில் இருந்திருக்கவும் முடியாது.

....

.....

தமிழ்த் தேசத்தவர்களுள் பெரும் பகுதியினர் தம்மைச் சைவர்கள் என அடையாளப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களை இந்துக்கள் என அடையாளப்படுத்த வைப்பதில, கல்விமான்கள் எனக் கூறப்பட்டுவரும் சிலரும், மேடைப் பிரசங்கிகளும், சில தமிழ் ஊடகங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்கள்தான் இருக்கமுடியும் என்பதை எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

.....

.......

இந்து சமயம் என்பது, சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம்,.. என எல்லாவற்றையும் ஒன்றாகக் கூறும் சமயம் என்பர் சிலர். இது எப்படி? சைவம், வைஷ்ணவம், சாக்தம் எனத் தனித்தனியே பல பத்துச் சமயங்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் ஏன் ஒன்று சேர்த்து, இந்து சமயம் எனக் குறிப்பிடவேண்டும்? இவை இந்திய சமயங்கள் எனக் குறிப்பிடப்படலாம்!

 

ஆனால், இங்கு நாம் ஒரு மிக முக்கிய விடயத்தினை மனதில் கொள்ளவேண்டும்.

 

பண்டைக்காலத்தில், இந்தியா என்றவொரு நாடு இருக்கவேயில்லை.

 

பல நுறு தேசங்களை ஒன்றிணைத்து, அதை இந்தியா எனப் பெயரிட்டு, அந்த இந்தியா என்பதை ஆளும் வர்க்கங்களிடம் கையளித்துச் சென்ற பெருமை பிரித்தானிய காலனித்துவவாதிகளைத்தான் சாரும்!

 

இந்திய ஆளும் வர்க்கங்கள் என்றும் பிரித்தானியக் காலனித்துவவாதிகளுக்கு நன்றிக்கடன் உடையவர்களாகவே இருக்கவேண்டும், அவர்கள் இன்றும் அப்படித்தான் உள்ளனர்!

 

....

......

இங்குதான், அமெரிக்க, இந்திய, சிங்கள, மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கிடையில், இயல்பான ஒற்றுமை, இணைவு உருவாகியிருப்பதைத் தமிழ்த் தேசம் அவதானிக்கவேண்டும். அவைகளிடையில் இருக்கும் கருத்து முரண்பாடு, யார் இப்பூமியையும், அதில் வாழும் மனித இனத்தையும் அதிகமாகச் சுரண்டுவது என்பதில்தான்!

...

......

 

ஆனால், இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும, வட, தென் இலங்கைகளிலும் வணங்கப்பட்டுவரும் சிவன், விஷ்ணு, கிருஷ்ணா, பிரம்மா, விநாயகன், முருகன் என்ற கடவுள்கள்; உண்மையில் என்ன, அவை எப்படி உருவாக்கப்பட்டுள்ளன, இந்தக் கடவுள்களின் வழிபாடுகள் எந்தெந்தக் காலம் முதல் இந்தியாவிலும், இலங்கையிலும் இருந்து வருகின்றது@ இந்தக் கடவுள்கள் ஏன் பௌத்தர்களால் இலங்கையில் வழிபடப்பட்டு வருகின்றன, ஏன் இந்தக் கடவுள்கள் தென்னிங்கையின் பௌத்த கோயில்களில் காணப்படுகின்றன என்பவை பற்றியும்@ தென்னிந்தியாவின் பண்டைய சைவ, மற்றும் கோயில்களில் புத்தபெருமானின் சிலைகள், தம்மச் சக்கரம், இணைபாதம் போன்றவை எப்படிக் காணப்படுகின்றன, இந்தக் கோயிலகளுக்கும் அரச மரத்துக்குமிடையில் என்ன தொடர்புகள் உள்ளன போன்ற கேள்விகளுக்கு விஞ்ஞான ரீதியிலான விடைகள் ஆராய்ந்து அறியப்படவேண்டியுள்ளன.

 

இந்தநிலையில், இந்து என்ற சொல்லானது, கலாநிதி அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டதுபோல் "புத்தர் ஒரு இந்து. அவர் இந்துச் சீர்திருத்தவாதி" எனப் பயன்படுத்தப்பட முடியாது.

 

இன்று இந்து சமயம் என்ற சொற்றொடர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இச்சொற்றொடரானது மிகவும் அண்மைக் காலத்தில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டு, பய்ன்படுத்தப்படுவதாகும்.

 

எதுவிதத்திலும், இந்து சமயம் என்றால் என்ன என்ற கேள்வியைச் சமயப் பெரியோர்களையும், கல்விமான்களையும் கேட்டால், அவர்கள் விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கொடுக்கமுடியாத நிலையில்தான் இருப்பர்!

 

....

......

மறுபுறத்தில், இந்து என்பது great என்பதையும் குறிக்கமுடியும் எனப் பார்த்திருந்தோம்.

 

இந்தநிலையில், புத்தபெருமான் ஒரு பெரியோன் ஆன நிலையிலும், அவர் பெரும் சீர்திருத்தவாதி என்ற நிலையிலும், நாம்: "புத்தர் இந்து ( Buddah Great) இந்துச் சீதுதிருத்தவாதி (புத்தர் பெரும் சீர்திருத்தவாதி)" எனக் குறிப்பிட முடியும்.

 

ஆனால், இந்து என்பது இங்கு இன்றைய விளக்க அடிப்படையிலான இந்து சமயத்தினைக் குறிக்கவில்லை.

...

.....

முன்னைய ஆராய்வாளர்கள் கூறியவற்றை, ஏனைய சகலரும் சரியென ஏற்று வந்தனர். இன்றுபோல் இல்லாது, முன்னயை காலத்தில், உயர் கல்வியில் கணிதத்தைக் கற்றவர்களும், பொறியியலாளர்களும், இயற்கை விஞ்ஞானத்தைக் கற்றவர்களும், இலக்கிய, தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபடுவேயில்லை, இதனால், முன்னைய ஆராய்வாளர்களின் ஆய்வுகளையும், முடிவுகளையும் ஆதாரபுபூர்வமாக நிராகரிக்கக்கூடிய நிலையில் எவரும் இருந்திருக்கவில்லை.

 

இந்தநிலையில், தமிழ், சமஸ்கிருத இலக்கியங்கள், நூல்களின் இயற்றுகை, அவற்றின் காலங்கள் தொடர்பாக இதுவரை எழுதப்பட்டு வந்தவைகள்; பிழையானவையாகும். சமயங்கள், சித்தாந்தங்கள் தொடர்பாகக் கூறப்பட்டு வருபவைகள் முற்றிலும் பிழையானவையாகும்.

 

நன்றி தமிழ்சமூகம் (www.tamilsociety.com)

http://www.mousegroup.net/tamilsociety/09....005/bala-01.htm

இந்து ( ஹந்து அல்ல ) என்பது தமிழ்ச் சொல்

 
இந்து என்பது தமிழ்ச் சொல் (ஹிந்து என்று வார்த்தையே சமஸ்கிருத அகராதியில் காணப்படவில்லை  )

இந்து என்பது தமிழ்ச் சொல்லாகும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர்.  சோழர்கள் சூரிய வம்சத்தினர்.  சேரர்கள் அக்னி வம்சத்தினர்.பாண்டியர் பாரத தேசம் முழுவதையும் ஆண்ட காரணத்தினால் பாரதம் இந்து தேசம் என்று அழைக்கப்பட்டது.


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே (திருமந்திரம் விநாயகர் காப்பு)

இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதி.


“அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே“  (திருவிளையாடற் புராணம்)

பொருள் = அந்த வேலையில், அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி, அம்மண்டபத்தில் ஏறி சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, அழிவில்லாத  இந்து (சந்திர) சேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தியே.

இந்து என்ற தமிழ் சொல்லை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்கான  சதியில் கடவுள் மறுப்பு கொள்கையை உடைய மதமான நாத்திக திராவிடங்கள் , அன்னிய மதங்கள் தமிழர்களை அவலநிலையில் வைத்திருப்பதற்காக கையாளுகின்ற ஒரு குள்ள நரிதந்திரம் இதனை அறிய முடியாத சிவஞான அறிவற்ற சில தமிழர் கூட்டங்கள்   இந்து அன்னிய ஆதிக்கள் என்று ஊழையிடுகின்றாா்கள் இவர்கள் பாடசாலை சென்று தமிழ் படிப்பதுதான் நண்மை பயக்கும்.

அருளகம்
  • 3 weeks later...
Posted
On 6/8/2019 at 11:52 PM, ARUN NATHAAN said:

இந்து ( ஹந்து அல்ல ) என்பது தமிழ்ச் சொல்

 
இந்து என்பது தமிழ்ச் சொல் (ஹிந்து என்று வார்த்தையே சமஸ்கிருத அகராதியில் காணப்படவில்லை  )

இந்து என்பது தமிழ்ச் சொல்லாகும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர்.  சோழர்கள் சூரிய வம்சத்தினர்.  சேரர்கள் அக்னி வம்சத்தினர்.பாண்டியர் பாரத தேசம் முழுவதையும் ஆண்ட காரணத்தினால் பாரதம் இந்து தேசம் என்று அழைக்கப்பட்டது.


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே (திருமந்திரம் விநாயகர் காப்பு)

இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதி.

“அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே“  (திருவிளையாடற் புராணம்)

பொருள் = அந்த வேலையில், அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி, அம்மண்டபத்தில் ஏறி சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, அழிவில்லாத  இந்து (சந்திர) சேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தியே.

இந்து என்ற தமிழ் சொல்லை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்கான  சதியில் கடவுள் மறுப்பு கொள்கையை உடைய மதமான நாத்திக திராவிடங்கள் , அன்னிய மதங்கள் தமிழர்களை அவலநிலையில் வைத்திருப்பதற்காக கையாளுகின்ற ஒரு குள்ள நரிதந்திரம் இதனை அறிய முடியாத சிவஞான அறிவற்ற சில தமிழர் கூட்டங்கள்   இந்து அன்னிய ஆதிக்கள் என்று ஊழையிடுகின்றாா்கள் இவர்கள் பாடசாலை சென்று தமிழ் படிப்பதுதான் நண்மை பயக்கும்.

அருளகம்

மிக அருமையான பதிவு!

இந்துக்களை சீண்டிப்பார்க்கும் சண்டாளர்களுக்கு இந்துக்களை சீண்டிப்பார்க்கும் மதமாற்ற வெறியர்களுக்கு நெருப்படி கொடுக்கப்பட்டுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.