Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய புத்தாண்டிலாவது எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் - கைதிகளின் பெற்றோர் கோத்தபாயவுக்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய புத்தாண்டிலாவது எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் - கைதிகளின் பெற்றோர் கோத்தபாயவுக்கு கடிதம் ...

வியாழக்கிழமை, 06 ஜனவரி 2011 13:54

இலங்கையில் பல்வேறு சிறைச்சாலைகளிலுமுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விடுவிக்கக் கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று (06.01.2011) அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அண்மையில் ஜனாதிபதி அவர்களுக்கும் கைதிகளின் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை விடுவிக்கக்கோரி ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்கள்.

அத்துடன் இதற்கு முன்பு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அவர்களை தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் சந்தித்து தங்கள் பிள்ளைகளின் விடுதலை தொடர்பாக பேசி இருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு.

மேதகு கோத்தபாய ராஜபக்ச

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களே!

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போதும் அதன் பிற்பாடும் பல்வேறு காரணங்களுக்காக பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் எமது பிள்ளைகள் மிக நீண்ட காலமாய் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பிறந்திருக்கும் புதிய புத்தாண்டிலாவது அவர்களைப் பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்து எமது வாழ்வில் வசந்தம் மலர வையுங்கள்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது அனைத்தையும் இழந்துபோய் உள்ள நிலையிலும் கூட எமக்கு நல்ல எதிர்காலம் உதயமாகும் என்று தங்களின் நல்லெண்ண நடவடிக்கை ஊடாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். நாங்கள் உங்களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றோம். யுத்தம் முடிந்துவிட்டது நின்மதியாய் இருப்போம் என்று நினைக்கும்போது எமது பிள்ளைகள் சிறையில் நீண்ட காலமாய் எவ்வித முடிவுமின்றி ஒன்று தொடக்கம் பதினெட்டு வருடங்களாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நினைக்கும்போது நாம் இனி உயிர்வாழ்வது ஏன்? என்ற விரக்தியுடனும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் எண்ணியெண்ணி உயிர் வாழ்கின்றோம். நாளாந்தம் கண்ணீரும் கவலைகளுமே எமக்கு சொந்தமாகி விட்டன. உடமைகளை இழந்த நாம் எமது உறவுகளையும் இழந்து விடுவோமா? என எண்ணத்தோன்றுகின்றது.

பிள்ளைகளைக் காணாது பெற்றோரும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளும் கணவனைக் காணாது மனைவியும் யாருடைய அரவணைப்புமின்றி அனாதைபோல் அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் உழைத்துத்தர யாரும் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையியேயே குடும்பம் நடாத்துகின்றோம். சிறையில் வாடும் தாய் தந்தையரின் அரவணைப்பின்றி அவர்களின் பாசத்துக்காக ஏங்கும் எம் குழந்தைகளின் ஏக்கங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

சிறு வயதில் ஒரு குழந்தைக்கு தாய் தந்தையரின் அன்பும் அரவணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பது தங்களுக்கும் புரியும். வயதான பெற்றோரும் அவர்களின் கடைசிக் காலத்தின் ஆறுதலுக்கும் அவர்களைப் பராமரிக்கக்கூட யாருமில்லாமல் மன அழுத்தங்களுடன் எம்மிடத்தில் வாழ்கின்றனர்.

எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் எமது பிள்ளைகளின் கையில் தங்கியிருக்கையில் எம் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் என்னவாவது? எங்கள் நிலமையை எண்ணிப் பாருங்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் கைதிகளில் குற்றமற்றவர்களை உடன் விடுதலை செய்யவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டியவர்களை பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை (தினகரன்-19.01.2010) சட்டமா அதிபர் தெரிவிப்பு என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது தேர்தல் முடிந்து ஒரு வருடமாகின்றது யுத்தம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் எமது பிள்ளைகளுக்கு விடுதலை எதுவும் வழங்கப்பட வில்லை. அவர்களுக்கு பிணையும் கிடைக்கவில்லை.

எனவே கைதிகளின் பெற்றோர்களாகிய நாம் மிகுந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் விரக்தியான மன நிலையிலேயே இந்த கடிதத்தை தங்களுக்கு அனுப்புகின்றோம.; தாங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் தங்களுக்குள்ள சிறப்பு உரிமையைப் பயன்படுத்தி எங்கள் பிள்ளைகளை விடுதலைசெய்ய ஆவன செய்யுங்கள் அல்லது பிணையிலாவது விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இங்ஙனம் தமிழ் கைதிகளின் பெற்றோர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.