Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வாலை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வாலை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம்

தலை-நோர்டிக் நாடுகளில்; கால்-கனடாவில்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-07 09:14:26| யாழ்ப்பாணம்]

விடுதலைப் புலிகளின் வாலை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம். புலியின் தலை நோர்டிக் நாட்டிலும் முன்கால்கள் கனடாவிலும் பின்கால்கள் தென்னாபிரிக்காவிலும் உள்ளன. பிரிவினைவாதம் நவீன முறையில் உருவாகலாம். இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் அளித்த சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது,

ஈழத் தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமையையோ அல்லது சுயாட்சியையோ கோர முடியாது. ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் கூட்டம். உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு நேற்று முன்தினம் கொழும்பில் கூடியது. இவ்வமர்வில் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா கலந்து கொண்டிருக்கவில்லை. ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த அமர்வில் சாட்சியமளித்த உதய கம்மன்பில,

இலங்கையைப் பொறுத்தமட்டில் சிங்கள மக்களை மட்டுமே ஒரு இனமாகக் கருத முடியும். அந்த வகையிலேயே எமது வரலாறு மற்றும் கலாசாரம் அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய இனமாகச் சிங்களவர்களை மட்டுமே பார்க்கலாம். ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசிய இனமாகப் பார்க்கலாம்.

ஆனால், ஏனைய நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மடகஸ்கார், கென்யா போன்ற நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஒரு சிறு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள். எனவே, அவர்களினால் சுயாட்சியையோ, சுயநிர்ணய உரிமையையோ கோர முடியாது. சிறுமக்கள் பிரிவினருக்கு உரிய உரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும். சிறிய மக்கள் பிரிவினர்களுக்கான உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை விட அதிகளவில் எமது நாட்டில் நாங்கள் செய்துள்ளோம்.

தமிழ் மக்களின் தாயகமான இந்தியாவில் கூடத் தமிழ் அரச கரும மொழியாக இல்லை. ஆனால் இலங்கையில் உள்ளது. அந்த வகையில் நாங்கள் இந்தியாவை விட முன் சென்றுள்ளோம். செல்வநாயகம் உள்ளிட்ட எந்தத் தலைவரும் வடக்கு, கிழக்கு எவ்வாறு தமிழ் மக்களின் தாயகமாக இருக்கும் என்பதனை நிரூபிக்கவில்லை. தமிழ் மக்கள் எவ்வாறு தேசிய இனமாக வருவார்கள் என்பதனையும் நிரூபிக்கவில்லை.

செல்வநாயகம் அகிம்சைவாதி என்று குறிப்பிடப்படுகின்றார். ஆனால் அவரின் உண் மையான விடயத்தைப் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அகிம்சைவாதி அல்ல என்பது புரியும். ஒரு சந்தர்ப்பத்தில் செல்வநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சிதம்பரம் கனகசிங்கம் மற்றும் நேசையா உள்ளிட்ட பலர் கூட்டமொன்றை நடத்தினர். அந்தக் கூட்டத்துக்குக் குண்டர்களை அனுப்பிச் செல்வநாயகம் குழப்பி இருந்தார். செல்வநாயகத்தின் அகிம்சைப் போராட்டங்களில் பங்கெடுக்காதவர்களைக் குண்டர்களைக் கொண்டு தாக்கியிருந்தார்.

இற்றைக்கு 12 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியும் என்று எமது கட்சி கூறியது. அதாவது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் அது முடியாத காரியம் என்றே நம்பியிருந்தனர். நாங்கள் அதனை உடைத்தோம். அதன் விளைவாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

நாங்கள் செல்வநாயகத்தின் அகிம்சை ரீதியான அச்சுறுத்தலுக்கோ, பிரபாகரனின் அச்சுறுத்தலுக்கோ ஒருபோதும் அடிபணிந்ததில்லை. மாறாகத் தர்க்கங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம். நாங்கள் பெளத்தர்கள்.

தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கப்படும் விடயங்களை ஏற்றுக் கொள்வோம். தமிழீழம் சரியான கோரிக்கை என நிரூபித்தால் அதற்காக முன்னிற்கத் தயார் என்று கூறி வந்தோம். ஆனால் எவரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை. மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வெற்றிக் களிப்பில் தொடர்ந்து இருக்க வேண் டாம். அதற்கு அடுத்த பிரிவினைவாதச் சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள். நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினை வாதம் உருவாகலாம். விடுதலைப் புலிகளின் வால் மட்டுமே இலங்கையிலிருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றோம். ஆனால் அந்த விடுதலைப் புலிகளின் வாய் நோர்டிக் நாடுகளில் உள்ளது. முன் கால்கள் கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன. பின் கால்கள் தென்னாபிரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ளன. எனவே தற்போது எமக்கு ஒரு இடைவெளி மட்டுமே கிடைத்துள்ளது.

இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கவில்லை. 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர். எனினும் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துப் பாலஸ்தீனத்துக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர்.

இந்தியாவில் முதலில் ஏற்பட்ட பிரிவு முஸ்லிம் அல்ல. மாறாக 1919ஆம் ஆண்டில் சுயநிர்ணய அரசியலமைப்பு வந்ததும் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய பகுதிகள் ஒரு வலயமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் 1935ஆம் ஆண்டு அரசியலமைப்பின் போது அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் நாம் தமிழர்கள் இயக்கம் உருவானது. ஆனால் 1962ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் இராணுவத்தினால் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது. இதனையடுத்து 1962ஆம் ஆண்டு லண்டனில் உலகத் தமிழ் சங்கத்தினால் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த செல்வநாயகம் சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றிருந்த போது அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த மாநாட்டில் என்ன கூறினார்? இந்தியா பெரிய நாடு. அதனுடன் மோதி நாட்டைப் பெற முடியாது என்றார். அதனையடுத்து இலங்கை தெரிவு செய்யப்பட்டது. செல்வநாயகம் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தவர்.

சர்வதேச நாடுகள் பிரிவினைவாதப் போராட்டத்திற்கு இரகசியமாக ஆதரவு வழங்கின. இன்று வெளிப்படையாக ஆதரவு வழங்குகின்றன. எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்குக் கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்ற ஒரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம். எனவே தற்போதைய நிலைமையில் தமிழ் அலி ஜின்னா ஒருவரை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். இதற்காகச் சட்டம், அறிவு, தொல்பொருள் உள்ளிட்ட விடயங் கள் சார்ந்த அறிவுடைய இராஜதந்திரப் படை ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும் என உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது உதய கம்மன்பில தெரிவித்தார்.

valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.