Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வு முகாம்களுக்குள் என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு முகாம்களுக்குள் என்ன நடக்கிறது? jதமிழில் GTN.

07 ஜனவரி 2011

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆயிரம் வரை உயர்ந்தது.

புனர்வாழ்வு முகாம்களுக்குள் என்ன நடக்கிறது? தமிழில் GTN.

அண்மையில் இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் பலரையும், இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் பலரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

அங்கு தாம் எதிர் கொண்ட ஒடுக்குமுறைகள் பற்றி அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது தமது தடுத்து வைப்பு எவ்வளவு தூரம் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முரணானது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

2009 மேயில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு ஏறத்தாழ 280.000 தமிழ் பொது மக்களை இராணுவம் நலன்புரி முகாம்கள் என அழைக்கப்பட்ட முகாம்களில் அடைத்து வைத்தது. இந்த முகாம்கள் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டதாகவும் எந்நேரமும் இம்முகாம்களைச் சுற்றி ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர் காவல் புரிவதாகவும் பார்ப்பதற்கு ஒரு சிறைக்கூடம் போலவும் இருந்தது. இந்த நலன்புரி முகாம்களில் இருந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்லது அவர்களுடன் தொடர்புள்ளவர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் கண்காணா இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆயிரம் வரை உயர்ந்தது. இவர்களை விசாரணை செய்த இராணுவப் புலனாய்வும் பிரிவினர் மேலும் ஆபத்தானவர்கள் என்று கருதியவர்களை இரகசிய தடுப்பு முகாம்களுக்கு மாற்றினார்கள்.

தடுத்து வைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கவோ மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவோ இடம் கொடுக்க விரும்பாததாலேயே இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

11 696 விடுதலைப் புலிச் சந்தேக நபர்களைத் தாம் தடுத்து வைத்திருந்ததாகவும், அவர்களில் 5586 பேர் தற்பேது விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்களன்று பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்ததாக ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

உலகிலேயே பெரிமளவு மக்களைக் கொண்ட தடுப்பு முகாம்களை வைத்திருந்த நாடாக இலங்கையை குறிப்பிட்டிருந்தது சர்வதேச ஜுரிகள் சபை.

இன்னமும் இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பற்றிய எந்த விதமான சுதந்திரமான மதிப்பீடுகளும் அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை. இம்முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்பதும் ஒரு போதும் வெளித் தெரிய வருவதில்லை. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூட இந்த முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

சித்திரவதை, சட்டத்திற்கு முரணான படுகொலை, ஆட்களைக் காணாமல் போகச் செய்தல் என்பவற்றில் இலங்கை இராணுவத்தினர் நன்கு பிரபல்யம் பெற்றவர்கள் என்பது உலகறியும்.

பொலநறுவைக்கு அருகில் உள்ள வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவருடைய உறவினரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. வெலிக்கந்தைக் காட்டுக்குள் அந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காட்டினுள் தரப்பாள்கள் கொண்டு அம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரென்றும் ஆறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அறையிலும் ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாம் முட்கம்பிகளால் சுற்றிவர வேலியிடப்பட்டிருக்கிறது. தவிரவும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் எந்நேரமும் முகாமைச் சுற்றி காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் ஒரு சிலருக்கே பாயும் தலையணையும் கிடைத்திருக்கிறது. தவிர ஒரு துண்டு சோப், ஒரு பக்கற் சம்பூ, ஒரு பக்கற் பற்பசை என்பவை மாதாந்தம் அவர்களுக்குக் கிடைக்கும். மூன்று நேரமும் சோறு வழங்கப்படுகிறது. ஆனால் அதன் அளவும் தரமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. உடுதுணிகளும் வேறு அவசியமான ஏதாவது பொருட்களும் அவர்களைப் பார்க்கச் செல்லும் குடும்பங்களால் வழங்கப்படுகின்றன. பெற்றார் அல்லது மனைவி மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அங்கிருந்து விடுதலையான ஒருவர் விளக்கினார்: 'கொழும்பு ஆட்சியாளருக்கு எவ்வாறு விசுவாசமாக நடந்து கொள்வது என்பது பற்றியும், சிங்களத் தேசியவாத எண்ணக்கரு குறித்தும் அம்முகாம்களில் திட்டமிட்ட வகையில் போதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாள் காலையும் பிரார்த்தனையின் போது சிங்களத் தேசியக் கொடியை ஏற்றி அவர்கள் வணக்கம் செலுத்த வேண்டும். அத்தோடு நாட்டிற்கு எதிராகச் செயற்பட மாட்டேன் என்றும் அவர்கள் வாய்விட்டு சத்தியப்பிரமாணம் செய்தல் வேண்டும். பின்னர் முகாமைத் துப்புரவாக்குதல் போன்ற பணிகளைத் தொடங்குதல் வேண்டும்.'

வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மரக்கறித் தோட்டங்களிலும், சோளச் செய்கையிலும் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாலையில் வேலை முடிந்து திரும்பியதும் கட்டாயமாக அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அரசாங்கமும் முகாம் நிர்வாகிகளும் தம்மை அடிமைகள் போலவே நடாத்துவதாக அவர்கள் முறையிடுகிறார்கள்.

வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் மனைவி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: 'எனது கணவர் நான் திருமணம் முடிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகளில் உறுப்பினராக இருந்தவர். அதிலிருந்து விலகிய பின்னர் விடுதலைப் புலிகளுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. எங்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்தவளுக்கு எட்டு வயதாகிறது. மெனிக் முகாமில் வைத்து எனது கணவரைக் கைது செய்யும் போது விசாரணையின் பின் விடுதலை செய்து விடுவதாக இராணுவத்தினர் கூறினர். ஆனால், இதுவரை அவர் விடுதலை செய்யப்படவேயில்லை.'

போரின் போது தமது வீட்டையும் உடமைகளையும் இழந்த அந்தப்பெண்மணி தனது நான்கு பெண் குழந்தைகளுடனும் தனது வயதான தாயாருடனும் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார்.

'என்னிடம் பணம் இல்லாததால் எனது கணவரைப் பார்ப்பதற்காக கடந்த இரண்டரை மாதங்களாக என்னால் வெலிக்கந்தைக்குப் போக முடியாமல் இருக்கிறது' என்கிறார் அந்தப் பெண்மணி.

'அங்கு செல்வதென்றால் எனக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாயாவது தேவைப்படும். சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் இரண்டு மாதங்களுக்கொருமுறை இருவர் முகாமுக்குச் சென்று வர 4000 ரூபாய்களை வழங்கி வந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்று அங்கிருந்து வெலிக்கந்தை சென்று வர இந்தப் பணம் போதுமானதல்ல. தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் பெற்றாரும் மனைவியரும் ஒன்று சேர்ந்து வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வெலிக்கந்தை சென்று வருகின்றனர். இவ்வாறு போய் வர மொத்தமாக நான்கு நாட்கள் எடுக்கும்.'

இராணுவத்தாலோ பொலிஸாராலோ தனது கணவன் விசாரணை எதற்கும் உள்ளாக்கப்படவில்லை என்றும் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும் காரணமின்றி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னொரு பெண்மணி கூறுகிறார்.

தமிழ்தேசியக்கூட்டமைப்போ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ அவர்களது விடுதலை குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

பூர்சுவாக்களின் கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு போரின் போது புலிகளின் பேச்சாளராகச் செயற்பட்டது. தற்போது கொழும்பு அரசியலுக்குள் தனக்கு இடம் தேடிக்கொண்டுள்ள அது தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த இளைஞர்களின் விடுதலை கோரி எத்தகைய போராட்டங்களையும் மேற் கொள்ளவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் மீது குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரிவித்தார். ஆனால் இந்தப் பேச்வார்த்தைகளினால் எதுவும் நடைபெறவி;ல்லை. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காத்து வருகிறது.

நடுத்தர வயதுள்ள இன்னொரு பெண்மணி பின்வருமாறு கூறுகிறார்: 'போரின் போது ஒரு புறம் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து தப்பிக்கவும் மறுபுறம் இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவுமாக நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்தோம். இதன்காரணமாக போரின் போது கணவரைப் பிரிய வேண்டி ஏற்பட்டது. பின்னதாக நான் அறிந்தேன். கணவர் போரின் இறுதி நாட்களில் ஷெல்லடிபட்டு கடும் காயங்களுக்குள்ளானார் என்றும் இராணுவம் அவரைக் கைது செய்து கொண்டு சென்றதாகவும்.'

அவர்கள் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பெரும் சிரமப்படுகிறார்கள். அவர் சொல்கிறார்: 'நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையிலேயே வாழ்கிறோம். நாங்கள் தற்போது உறவினர் ஒருவருடைய வீட்டிலேயே தங்கி யுள்ளோம். பல நாட்கள் பட்டினியாகவே வாழ்;க்கையைக் கழிக்க வேண்டி இருக்கிறது. பணம் இல்லாததால் கணவரைப் பார்க்க மாதக்கணக்காக நான் செல்லவில்லை.' தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால் அரசாங்கத்தோடு இணைந்துள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட எல்லாத் தமிழ் கட்சிகளையும் அவர் கண்டனம் செய்யத் தவறவில்லை.

அண்மையில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறாh:; 2006ஆம் ஆண்டு தொழில் தேடிச் சென்ற போது விடுதலைப் புலிகள் தன்னைப் பலவந்தப்படுத்தி படையில் இணைத்துக் கொண்டதாகவும் பயிற்சியின் பின்னர் போருக்குத் தன்னை அனுப்பியதாகவும், போரில் தனது கால் கடும் காயங்களுக்குள்ளாகி தான் முடமாகி விட்டதாகவும் சொல்கிறார். காயமடைந்த காலைக் குணப்படுத்த தான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதன் போது இராணுவத்தினரின் தாக்குதலில் வைத்தியசாலை சேதமடைந்ததாகவும் பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தான் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவர் தெரிவிக்கிறார். 'அவர்கள் என்னை ஏனையவர்கNhடு ஜுன் 14ஆம் திகதி வவுனியா இராமநாதன் முகாமுக்கு அழைத்துச் சென்றனர். உண்மையைச் சொன்னால் இராணுவத்தினர் என்னை விடுதலை செய்து விடுவர் என்றே நான் நம்பினேன். ஆனால் அவர்கள் என்னை வெலிக்கந்தை முகாமுக்குக் கொண்டு சென்று அண்மையில் விடுதலை செய்யும் வரை தடுத்து வைத்திருந்தனர்' என்கிறார் அவர்.

'நாங்கள் நினைத்தோம் புலிகள் மக்களுடைய சுதந்திரத்தற்காகத் தான் போராடுகிறார்கள் என. அதனால் நாங்கள் அதற்கு ஆதரவளித்தோம். அது ஒரு முதலாளித்துவ அமைப்பு என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்ளவில்லை. புலிகள் அமெரிக்கா தமக்கு உதவி செய்யும் என்று அதன் மீது மிகப் பெரும் நம்பிக்கையை வைத்திருந்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்ப்பது என்கிற உங்களது எண்ணம் எமக்குப் புதிதாக இருக்கிறது. போரினால் இந்த ஐக்கியம் தகர்ந்து போயுள்ளது. ஆனால் இது மீளவும் கட்டி எழுப்பப்பட வேண்டும்' என்றார் அவர்.

கடந்த கால் நூற்றாண்டாக நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை இராணுவம் தடுத்து வைத்திருந்தது. அதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகாலச்சட்டமும் உதவின. பயங்கரவாதத் தடைச்சட்டம் விசாரணையின்றி காலவரையின்றி தடுத்து வைக்க உதவுகிறது. போர் முடியும் தறுவாயில் சிறையில் 30 பெண்களுட்பட 700 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். வருடக்கணக்கான அவர்கள் சிறையில் இன்னமும் வாடுகின்றனர்.

1997ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவர் கடந்த மாதம் பிபிஸிக்கு கருத்துத் தெரிவிக்கையில் வற்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலம் ஒன்றின் அடிப்படையிலேயே தான் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் திட்டமிடப்பட்ட முறையில் மீறப்படுவதானது தொழிலாளர் வர்க்கம் முழுமைக்கும் விடுக்கப்படும் ஒரு கடும் எச்சரிக்கையாகும். சர்வதேச நாணய நிதியத்தால் விடுக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதே மாதிரியான வழிமுறையைப் பின்பற்றி தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அவர்களிடமிருந்து வரும் எதிர்ப்பையும் ஒடுக்க பின்நிற்கப் போவதில்லை என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

நன்றி: உ. சோ. வ. தமிழில் ஜிரிஎன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.