Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சூடான்: சுதந்திரத்திற்கான பாதையில் புதிய பெயரொன்றைத் தேர்ந்தெடுப்பது ஓர் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, January 9th, 2011 | Posted by admin

தென் சூடான்: சுதந்திரத்திற்கான பாதையில் புதிய பெயரொன்றைத் தேர்ந்தெடுப்பது ஓர் ஆரம்பம்

இந்தப் புதிய தேசத்திற்கு இன்னமும் பொருத்தமான பெயர் தோந்தெடுக்கப்படவில்லை. தெற்கு, தெற்கு சூடான், புதிய சூடான் அல்லது குஸ் [south, Southern Sudan, New Sudan or even Cush] என இந்தப் புதிய தேசத்திற்குப் பெயர் சூட்டப்படலாம்.

இங்கு இடம்பெறும் மக்கள் கருத்துக்கணிப்பின் பலம்தான் இந்த உலகின் புதிய நாட்டினது முதன்மையான வெற்றியாக அமையும். ஆனால் எண்ணெய் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தொடரும்.

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத்தளத்தில் Mark Tran எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

சுதந்திரப் போராட்டத்தினை நடாத்துவதென்பது ஒரு விடயம். தேசமொன்றைக் கட்டியெழுப்புவது என்பது முற்றிலும் வேறுபட்ட இன்னொரு அம்சம். ஆனால் தென் சூடான் ஏற்கனவே சில முதன்மையான விடயங்களை முன்னெடுத்துவிட்டது. தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் கவர்ச்சிகரமான உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன உருவாக்கப்பட்டுவிட்டன.

தேசியக்கொடி இலகுவானதொன்று. தென் சூடானின் விடுதலைக்காக ஆயுதவழியில் போர் நடாத்திய சூடான் மக்கள் விடுதலை அமைப்பினது [sudan People's Liberation Movement] கொடிதான் தென் சூடானின் கொடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஒக்ரோபரில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக தென்சூடானின் தேசிய கீதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தப் புதிய தேசத்திற்கு பொருத்தமான பெயர் இன்னமும் தோந்தெடுக்கப்படவில்லை. தெற்கு, தெற்கு சூடான், புதிய சூடான் அல்லது குஸ் [south, Southern Sudan, New Sudan or even Cush] என இந்தப் புதிய தேசத்திற்குப் பெயர் சூட்டப்படலாம்.

தென் சூடான் என்ற இந்தப் புதிய தேசத்தினை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கு முன்னர் உலகின் ஏனைய நாடுகளும் இதனை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவேண்டும்.

ஐ.நா வின் அங்கீகாரம் என்பது அதனது பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபையினது முழுமையான அனுமதி இருந்தால் மாத்திரமே ஐ.நாவும் புதிய தேசங்களை அங்கீகரிக்கும்.

முதலில் இந்தப் புதிய தேசத்தின் உருவாக்கத்தினை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்கவேண்டும். இதனைத் தொடர்ந்தும் உலகின் ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கும்.

தென் சூடானின் தனிநாட்டுக்கான மக்கள் வாக்கெடுப்பு சட்ட ரீதியாக கேள்விக்குள்ளாகும்போது அது கொசோவோவில் இடம்பெற்றது போன்ற நிலைமைக்கே இட்டுச்செல்லும்.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன கொசோவோவின் தனி நாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரித்திருக்கின்றபோதும் ஐ.நா அதற்கான அங்கீகாரத்தினை இன்னமும் வழங்கவில்லை.

அனைத்துலக அளவிலான அங்கீகாரத்தினை பெறுவதற்கு ஐ.நாவின் அங்கீகாரம் என்பது ஒன்றும் முதன்மையானதல்ல. ஆனால் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய அனைத்துலக அமைப்புக்களில் இதுபோன்ற புதிய தேசங்கள் அங்கத்துவத்தினைப் பெறுவது மிகவும் அவசியமானது.

உலகின் வறிய தேசங்களில் தென் சூடானும் ஒன்று என்பதனால் இதுபோன்ற அனைத்துலக் கட்டமைப்புக்களிலிருந்து அது அதிக உதவிகளை பெறவேண்டியிருக்கும்.

இங்கு கொசோவோ வழமைக்கு மாறானதொரு நிலையில் உள்ளது. கொசோவோவினை ஐ.நா சுதந்திர தேசமாக இன்னமும் அங்கீகரிக்காதபோதும் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் கொசோவோ தனது அங்கத்துவத்தினைப் பெற்றுவிட்டது.

குறித்த இந்தக் கட்டமைப்புக்களில் அதிக செல்வாக்கினைச் செலுத்தும் அமெரிக்காவிற்குத்தான் இதற்கு நன்றிகூறவேண்டும்.

தென் சூடானைப் பொறுத்தவரையில் சூடானின் நாணயத்தையே தென் சூடானும் பின்பற்றுமா அல்லது தனக்கெனப் புதிய நாணயத்தினை உருவாக்கிக்கொள்ளுமா என்பது மிகவும் முதன்மையான பொருளாதார அம்சமாக இருக்கும்.

தனது நாட்டில் புழக்கத்திலிருந்த எதியோப்பிய நாயணத்தினை மாற்றிவிட்டு 1997ம் ஆண்டு எரித்திரியா தனக்கென புதியதொரு நாணயத்தினை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது எதியோப்பியாவுடனான புதிய மோதல்களுக்கு வழிவகுத்தது.

2007ம் ஆண்டு தென் சூடானிய அரசாங்கமானது புதிய நாயணத்தினை அறிமுகப்படுத்துவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தபோதும் இதுபோன்ற நடவடிக்கையானது 2005ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கைக்கு முரணானது எனக்கூறி சூடானிய மத்திய அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்த அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்று வரும்போது தென் சூடான் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை. சூடான் மக்கள் விடுதலை இராணுவம் என்ற 100,000 இராணுவத்தினரைக் கொண்ட படைக்கட்டமைப்பினை தென் சூடான் ஏலவே கொண்டிருந்தது.

நிதி, சுகாதரம், கல்வி மற்றும் வெளிவிவகாரம் ஆகியவற்றுக்கான அமைச்சர்களையும் அது கொண்டிருக்கிறது.

“குறிப்பிட்ட இந்தக் கட்டமைப்புக்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தாலும் இவற்றினை மேலும் சீர்செய்யும் வகையில் மேலுமதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டியுள்ளது. வெளித் தரப்புகளின் ஆதரவும் உதவிகளும் தென் சூடானுக்கு மிகவும் அவசியமானது” என வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான கதாம் கவுஸ் என்ற வல்லுநர்கள் குழுவினைச் சேர்ந்த றோஜர் மிடில்ரன் கூறுகிறார்.

சூடானில் இடம்பெறும் இந்த மக்கள் கருத்துக்கணிப்புக்காக பெருந்தொகை வலுவும் பலமும் பயன்படுத்தப்படுவதால் தென் சூடானோ அல்லது வடக்கு சூடானோ தமக்கிடையேயான எண்ணெய் சார் பிணக்குகள் மற்றும் எல்லைப் பிணக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்புக்களில் ஈடுபடும் எண்ணத்தில் தற்போது இல்லை என மிடில்ரன் கூறுகிறார்.

“தனிநாட்டுக்கான ஏனைய முனைப்புக்களின் முன்னர் இதுபோன்ற ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினைகளை இரண்டு தரப்பினரும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டியது அவசியமாது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான எல்லை எவ்வாறு அமைக்கப்படும், நாட்டினது எண்ணெய் வளம் எவ்வாறு பிரிக்கப்படப்போகிறது, நாட்டினது சொத்துக்கள் எவ்வாறு பகிரப்படும் போன்ற கேள்விகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படாவிட்டால் தென் சூடானிய வாசிகளின் கால்நடைகள் வடக்கு சூடானுக்குள் சென்றுவிட இரண்டு சமூகங்கள் மத்தியிலும் புதிய பிணக்குகள் முளைவிடும்” என மிடில்ரன் தொடர்ந்து தெரிவித்தார்.

தனிநாட்டுப் பிரகடனத்தினை மேற்கொள்ளுவதற்கு முன்னரே தேவையான பல விடயங்களை முன்னெடுக்காவிட்டால் அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு குறிப்பிட்ட தேசத்தின் சுதந்திரத்தினையும் கேள்விக்குறியாக்கிவிடும் என்பது கோசோவோ தரும் பாடம் என்பதை லண்டனிலுள்ள பொருளாதாரக் கல்லூரியின் பூகோள அரசியல் வரிவுரையாளரான டெனிசா கொஸ்ரோவிகொவா ஏற்றுக்கொள்கிறார். இதன்பின்னர் சுதந்திரம் என்பதும் பிரச்சினைக்குள்ளாகிவிடுகிறது என்கிறார் அவர்.

புதியதொரு தேசம் உருவாக்கப்படும் போது அது அடிப்படையில் எவ்வாறிருக்கவேண்டும் என்பது ஆரம்பத்திலேயே வரையறுக்கப்படவேண்டும்.

தென் சூடானின் இன்றைய அரச கட்டமைப்பானது அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சூடானிய விடுதலை அமைப்பு என்ற ஆயுதக் குழுவினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருப்பதால் தென் சூடானிய அரசாங்கமானது அதிகாரத்தன்மை கொண்டதாகவே இருக்கும் என்ற கரிசனை வெளியிடப்படுகிறது.

“நாட்டினது சட்டம்சார் கட்டமைப்புக்கள் பலமிழந்து கணப்படுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விடயங்களில் தென் சூடானிய அரசாங்கமானது போதிய அக்கறையினைக் காட்டத் தவறுவதும் தென் சூடானில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுகிறார்களா என்ற சந்தேகத்தினை வலுவாக்கியுள்ளது. குறிப்பாக, சுதந்திரத் தனிநாட்டின் மீட்பர்கள் தாங்கள் தான் என தென் சூடானியப் படையினர் கருதுவதால் பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன” என மனித உரிமைக் கண்காணிப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இந்தச் சூழமைவில் தென் சூடானிய இராணுவத்தினரும் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடையவர்களும் பொதுவாக பொதுமக்களுக்கு எதிரான மோசமான குற்றங்களைப் புரியும் நிலை காணப்படுகிறது” என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அந்த அறிக்கை தொடர்கிறது.

இந்தசெய்தியை வாசித்த ஈழத்தமிழ் அரசியல் நோக்கர் ‘புதினப்பலகை’ தளத்துடன் தொடர்புகொண்டு தெரிவித்ததாவது,

தென்சூடானில் நடைபெறும் சர்வசனவாக்கெடுப்பு தொடர்பான உலகின் கவனம் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கருத்துக்கணிப்பினைத்தொடர்ந்து எவ்வாறு தென்சூடான் அரசியல் தலைவர்களும் தற்போதைய சூடான் ஆட்சியாளர்களும் செயற்படப்போகின்றார்கள் என்பது மிகவும் முக்கியமாகவுள்ளது.

எனினும் 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட சமாதான உடன்படிக்கைக்கு பின் இன்றுவரை தென்சூடானிய விடுதலை அமைப்பும் அது சார்ந்த அரசியல் அமைப்பும் எவ்வாறு தொலைநோக்கோடு செயற்பட்டார்கள் என்பது ஈழத்தமிழர் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும்.

1. விடுதலைக்கான கோரிக்கைகளினை விட்டுக்கொடுக்காமலேயே எவ்வாறு தொடர்ந்து சமரசமுயற்சிகளினைத் தொடர்வதும் ஆட்சியல் பங்கேற்பதும்.

2. தங்களது விடுதலைப்போராட்டத்தினை இராணுவம், அரசியல், இராசதந்திர உறவுகள் என்ற மூன்று முனைகளுக்குள் எவ்வாறு வெற்றிகரமாக சமன்செய்து முன்னெடுப்பது.

3. 2005 யூலை மாதத்தில் சூடானிய விடுதலை இயக்கத்தின் தலைவர் கலாநிதி யோண் கராங் [Dr. John Garang de Mabior] விமானவிபத்து சதியில் கொல்லப்பட்டபின்பும் மிகவும் நிதானமாக தலைமைத்துவ தொடர்ச்சியினைக் கட்டியெழுப்பியது.

4. சூடானிய அரசுடன் இணைந்து செயற்பட்டவர்களும் மீண்டும் தென் சூடானிய விடுதலைக்காக இணைந்தபோது அவர்களினை துரோகிகள் என புறந்தள்ளாமல் உள்வாங்கி முக்கிய பொறுப்புக்களினைக்கூட பகிர்ந்தளித்தது.

இவ்வாறு பல படிப்பினைகளினை கற்றுக்கொள்வதற்கு இன்னமும் ஈழத்தமிழர்களின் அரசியலினை வழிநடத்துவோர் கற்றுக்கொள்ள மறுத்துக்கொண்டிருப்பது தமிழினத்தின் சாபக்கேடாகும் என்றார் அவர்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=1610

மலர்ந்தது புதிய நாடு - தென் சூடான்

இன்னும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை ஆனால், பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்

  • Obama congratulates Sudanese, urges restraint

  • "The referendum now moves into another phase, and while official results will not be available for some time, independent observers have been extremely encouraged by the credibility of the process to date," Obama said in a statement.

  • South Sudan's president Salva Kiir urged his people to forgive the north for the war, in which an estimated two million people died.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5ihP_bca4aM9xxIrZcZ95FvKf73xQ?docId=CNG.a0fecf3288ed5701a75b9cd49cf8dca6.9b1

http://www.youtube.com/watch?v=pzDYGVRXgLQ&feature=player_embedded

Edited by akootha

சூடான் பொது வாக்கெடுப்பு முடிவு! - தென் சூடான் பிரியும் வாய்ப்பு!

சூடானில் நேற்று முடிவடைந்துள்ள சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவாக தென் சூடானைச் சேர்ந்த மக்கள் வாக்களித்து இருப்பார்களேயானால், ஜூலை மாதம் 9ஆம் திகதி ஆபிரிக்காவின் 54வது தேசமாக தென் சூடான் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக சூடான் தன் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கினையும், மக்கள் தொகையில் கால்பகுதியினரையும் இழக்க நேரிடுவதுடன் நாட்டிற்கு முக்கிய வருமானம் ஈட்டித் தரும் எண்ணெய் வளத்தையும் இழக்க நேரிடும். அதேவேளை, என்ன நேரிடினும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் கார்டோம் மாநில அரசு மிகவும் உறுதியாக உள்ளது.

கடந்த 21 ஆண்டு கால ஆட்சியின் பெரும்பான்மையான காலங்களில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒன்றுபட்ட சூடான் என்ற வாக்குறுதியை அளித்தே சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் டெக்சாஸ் அளவிற்கு எண்ணெய் வளம் கொண்ட தெற்கு சூடான் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரிந்து செல்வதையே விரும்புகின்றனர் என்ற யதார்த்தத்தை உணர்ந்தவராகவே தற்போது அவர் காணப்படுகின்றார்.

இரண்டு முக்கிய விடயங்களில் அவர் தற்போது அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவின் வெகுமதிகளைப் பாதுகாத்துக் கொண்டு பிரிந்து செல்லவிருக்கும் சூடானிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது. அதேவேளை, மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரத்தை எதிர்க்காமல் இருக்கச் செய்வது ஆகிய இரண்டும் தான் ஜனாதிபதி ஓமர் அல் பஷீரின் தற்போதைய குறிக்கோள்.

சூடானின் மேற்குப் பகுதியான தார்பூரில் நடைபெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களின் பேரில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச கைது ஆணையை மேற்குப் பகுதி மக்கள் மறந்து விடுவதே அவருக்கு மிகப் பெரிய பரிசாக அமையும் என்ற எண்ணமும் ஜனாதிபதி ஓமர் அல் பஷீரிடம் உள்ளது.

அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சன்மானங்களை வெளிப்படையாக வழங்க அமெரிக்கா தயாரில்லை என்ற போதிலும் கூட, தெற்கு சூடானின் விடுதலையை அமைதியான முறையில் சூடான் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மிகுந்த ஆதாயமுள்ள சில சலுகைகளை கார்டோம் மாநிலத்திற்கு வழங்க அமெரிக்கா தயாராகவே உள்ளது.

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை நீக்குவது, புதிய பொருளாதார மேம்பாட்டு சலுகைகளுடன் சூடான் நாட்டுடனான உறவை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வது போன்றவை அமெரிக்கா வழங்கவுள்ள சலுகைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தென் சூடானின் விடுதலையை தொடர்ந்து மறுத்து வந்த அல் பஷீர் எப்படி இதனை ஏற்றுக் கொண்டார் என விவரிப்பதும் தற்போது முக்கியமான ஒன்றாகும். சூடானின் தென்பகுதி பிரிந்து செல்வதால் கிடைக்கக்கூடிய அமெரிக்காவின் வர்த்தக உதவி சரிந்து போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் என்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பிற பகுதிகளையாவது ஒன்றாக தன் ஆட்சியின் கீழ் தக்கவைத்துக் கொள்ளலாம் என அல் பஷீர் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்திக் கொள்வதிலும், மேற்குப் பகுதியை முழுவதுமாக தன் வசப்படுத்திக் கொள்வதிலுமே சூடான் முனைப்பைக் காட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி அல் பஷீரின் கட்சியைச் சேர்ந்த வேறு சிலரின் மற்றும் படைத்தரப்பினரின் கருத்தாக உள்ளது என சூடான் நாட்டு நிபுணரான ரோகர் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மத அடிப்படைக் கொள்கைகளை பலப்படுத்துவதன் மூலம் சூடானை இஸ்லாமிய நாடாக்குவதிலும், ஷரியா உள்ளிட்ட இஸ்லாமிய விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதினாலும் மட்டுமே பிற உதவிகளைப் பெற முடியும் என்பதால் ஜனாதிபதி அல் பஷீர் இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளார்.

அதேவேளை, ஷரியா சட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமானால் நாட்டின் பிரிவினைவாதம் மேலும் மோசமாகும் என வடபகுதியில் இயங்கி வரும் அரசியல் தலைமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தென் பகுதிக்கான பொது வாக்கெடுப்பினால் தார்பூர் சமாதானப் பேச்சுவார்த்தை பல சிக்கல்களை சந்தித்து வருவதுடன், ஆயுதக் குழுக்கள் அரசிடமிருந்து பல சலுகைகளை எதிர்பார்க்கவும் காரணமாகியுள்ளதாக கூறுகின்றனர். தென் பகுதி பிரிந்தவுடனேயே ஜனாதிபதி அல் பஷீரை ஆட்சியிலிருந்து அகற்றி விட்டுத் தற்காலிகமான ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை அல் பஷீர் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வாக்கெடுப்பிற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளும் அல் பஷீர் ஆட்சிக்கு சிறிய அச்சுறுத்தல்களை விடுக்கக் கூடும். இதன் காரணமாக தன்னுடைய பகுதியையே கட்டுப்பாட்டில் வைப்பது ஜனாதிபதி அல் பஷீருக்கு சிரமத்தையும், கவலையையும் ஏற்படுத்தக் கூடும் என நம்பப்படுகிறது.

இந் நிலையில், உலகம் முழுதிலும் உள்ள அனைத்து நாடுகளும் தென் சூடானின் விடுதலையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் ஜனாதிபதி அல் பஷீரின் அரசாங்கம் அனைத்தையும் தாராள மனப்பான்மையுடன் அணுகப் போகிறதா அல்லது எதிர்ப்பு நிலையை கையாளப் போகிறதா என்பது குறித்த தெளிவாகத் தெரியவில்லை.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={1DC8FE2A-2A1E-4C4C-9912-C018322470DF}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.