Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்!-பாகம் 17

Featured Replies

போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்!-பாகம் 17

wcd21.png

மூன்றாவதும் இறுதியுமான நோ பயர் சோன் என்று அரசும் ஊடகங்களும் அழைத்த பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வலயத்தில் நாங்கள் மே 08ம் நாட் தொடக்கம் மே 18 வரையிலான பத்து நாட்கள் மாத்திரம் தங்கினோம் நாட்கள் குறைந்தாலும் உயிரிழப்பும் பசிக் கொடுமையும் மிகக்கூடியதாக இருந்தன .

முள்ளிவாய்க்காலில் நான் வாழ்ந்த பத்து நாட்களையும் நினைக்கும் போது உடல் நடுக்கம் ஏற்படுகிறது போருக்கு பிந்திய மன அழுத்தம் என்ற மன நோயால் நான் பீடிக்கப் பட்டுள்ளேன் இதற்கு மருத்துவ சிகிச்சை பெற எனக்கு விருப்பமில்லை.

கவுன்சலிங் எனப்படும் உளவியல் மருத்துவம் நல்ல பலனளிப்பதாகச் சொல்கிறார்கள் இதில் எனக்கு நம்பிக்கையில்லை நல்ல புத்தகங்களைப் படிக்கும்படி கூறிய ஆலோசனையை எற்றுக் கொண்டேன் ஆனால் புத்தகத்தைத் திறந்து இரண்டு பக்கம் படித்தவுடன் இரவில் வராத தூக்கம் பகலில் வந்து விடுகிறது.

அனுபவித்த, கேள்விப்பட்ட, நேரில் பார்த்த நிகழ்ச்சிகளை எழுத்தில் வடிக்குமாறும் அவற்றைப் பிற மனிதர்கள் படிப்பதற்கு வசதி செய்யும் படியும் சொன்ன ஆலோசனையை நான் பின்பற்றுகின்றேன் எழுதத் தொடங்குவது கடினம் சிறிது காலம் எழுதிய பின் அதைக் கைவிடுவது அதிலும் கடினம் என்பதை அறிந்துள்ளேன்.

ஐனவரி 2009 தொடக்கம் மே 2009 வரை நிலவிய ஐந்து மாதங்களில் ஈழத் தமிழர்களின் கட்டுமானங்கள் அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டன. இது இந்திய மத்திய அரசின் விருப்பம் அதை சிங்களவன் திறமையாக நிறைவேற்றினான்.

இந்த ஐந்து மாதப் போரில் மிகக் கூடுதலான ஆட்டிலறி செல்கள் முள்ளிவாய்க்கால் மீது அந்தப் பத்து நாட்களில் வீசப்பட்டன பேரழிவு ஏற்பட்டது. காந்தி தேசம் அதாவது மோகன்தாஸ் கரம்சந்தின் தேசம் போரை விரைவாக முடிக்கும்படி நெருக்குதல் கொடுத்தது

சர்வதேச அழுத்தம் காரணமாக சிறிலங்கா அரசு காலத்திற்கு காலம் வன்னிப் போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று உறுதிமொழி வழங்கப்பட்ட அதே நாளில் அது மீறப்பட்டது

புதுமாத்தளன், வலைஞர்மடம் உள்ளடங்கலான இரண்டாவது நோ பயர் சோன் மீது சிறிலங்கா முப்படைகளும் இந்திய கடற் படையும் தரைப்படையும் தாக்குதல் நடத்திய போது பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா இராஐபக்ச பீபீசி வானொலிக்கு ஒரு நேர்காணல் வழங்கினார்

இந்த நேர்காணல் கருணாநிதியின் சாகும் வரை உண்ணாவிரத நாளுக்கு முதல் நாள் என்று நிணைக்கிறேன் கொத்தபாயா தனக்கே உரித்தான பெண் குரலில் எங்களுடைய துருப்புக்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை சிறிய துவக்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றார் .

இது பெரிய பொய், இந்தப் போரில் கடல்,வான் தரை மார்க்கமாகக் கனரக ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. பொது மக்கள் உயிரிழப்பு பொறுத்துக்கொள்ள முடியாதளவுக்கு உயர்ந்தன இதை இலன்டன் பத்திரிக்கை ஒன்று சுட்டிக் காட்டியபோது அரசு மீண்டும் பொய்யறிக்கை வெளியிட்டது .

ஏப்பரல் மாதம் முடியுமுன்பு அது ஐனாதிபதியின் செயலகத்தில் இருந்து வெளிவந்தது கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தும்படி எமது துருப்புகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டடுள்ளது பொது மக்களின் உயிரிழப்பைக் குறைப்பதற்காக கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தியுள்ளோம் .

இது உண்மைக்குப் புறம்பான அறிக்கை கனரக ஆயுதங்கள் மாத்திரமல்ல தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளும், எரிகுண்டுகள், இராசாயனக் குண்டுகள், வெள்ளை பொஸ்பரஸ் செல்களும் அரச படைகளால் பொது மக்கள் மீது ஏவப்பட்டன இதை என்னால் உறுதி செய்ய முடியும்.

முள்ளிவாய்க்காலிலும் இது தொடர்ந்தது இங்குள்ள கடல் நீரேரியின் மேற்க்குப் புறத்தில் இருந்தும், வானில் இருந்தும், ஆழ்கடலில் இருந்தும் படைகள் தாக்குதல் நடத்தினர் மக்களை ஓடவிடாமல் தடுத்து நிறத்தும் உத்தியை குண்டு வீச்சு மூலம் நடத்தினார்கள் பின்பு அவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தார்கள்.

நான் மே 18ம் நாள் முள்ளிவாய்க்காலை விட்டு காலை 10 மணியளவில் வெளியேறினேன். இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். வெளியேறிய போது நான் கண்ட காட்சிகளை இப்போது பதிவு செய்கின்றேன்.

ஆயிரக் கணக்கான ஆம் ஆயிரக் கணக்கான உயிரற்ற மற்றும் உயிரிழப்புக்கும் தறுவாயில் படுகாயம் அடைந்த எனது இன மக்களின் உடல்களை நான் கண்ணீர் மல்கப் பார்தேன். பதுங்கு குழிகளுக்குள் எத்தனை பேர் செத்தும் சாவை நெருங்கியும் கிடந்தார்கள் சொல்ல முடியவில்லை.

முள்ளிவாய்க்காலில் இருந்து வெட்டுவாகல் செல்லும் பாதையின் இரு மருங்களிலும் பொது மக்களின் உடற் பாகங்கள் சிதறுண்டு கிடந்தன. சுயநினைவு இல்லாமல் குடும்பம் குடும்பமாக ஓடும் மக்கள் அவற்றை மிதித்துக் கொண்டு ஓடினார்கள் நான் தனிக்கட்டை மெதுவாகச் சென்றேன்.

சிதறுண்டு கிடக்கும் உடற்துண்டுகள் மீது எனது கால் பட்டுவிடக் கூடாது என்று மிகவும் அவதானமாக நடந்தேன் நடையைத் துரிதப் படுத்துவதற்காக. தூரத்தில் இருந்து இராணுவத்தினர் சூடு நடத்திக் கொண்டிருந்தார்கள்.வெட்டுவாகல். முள்ளிவாய்க்காலில் இருந்து 03 கீ.மீ தொலைவில் இருக்கிறது. கிரவல் செம்மண் பாதை தொடர்பை எற்படுத்துகிறது சிறிய ரக வாகனங்கள் இப்பாதையால் செல்ல முடியும் .

இரு மணபரப்புகளுக்குக் குறுக்கே அலை மோதாத கடல் குறக்கறுத்துள்ளது. இப்படிக் கடல் வெட்டிய பகுதிக்கு மேலால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு வெட்டுவாகல் என்று பெயர் வர இது தான் காரணம்.

வெட்டுவாகல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடில் முன்பு இருந்தது. விடுதலைப் புலிகளின் காவல் துறைநிலையமும் கடும் குற்றவாளிகளின் தடுப்பு முகாம்களும் வெட்டுவாகலில் இருந்தன.

வெட்டுவாகலில் கடற்புலிகளின் தொழிலகமும் முன்பு இருந்தது. பெருந் தொகையான ஈழத் தமிழர்கள் அங்கு வாழ்ந்ததற்கான சமீபகாலச் சான்றுகள் இன்னும் அழிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன.சைவக் கோயில்கள் அப்படியே பூசைகள் இல்லாமல் பூட்டியபடி விடப்பட்டுள்ளன.

வெட்டுவாகல் முழுவதும் இராணுவப் பிரசண்ணம் காணப்படுகின்றது. மக்கள் விருப்பம் போல் நடந்துதிரிவதைத் தடுப்பதற்கான ஒடுங்கலான முட்கம்பி பாதைகள் போடப்பட்டிருந்தன. அந்தப் பாதைகள்ஊடாக ஈழத்தமிழர்களை வேகமாக நடந்து செல்லுமாறு இராணுவத்தினர் விரட்டினர்.

அரைத்தூரம் நடந்தபோது திடீர்என்று எல்லோரையும் தரையில் உடகாரும்படி இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் உத்தரவிட்டனர். எல்லோரும் நின்ற இடத்தில் அமர்ந்தோம். கண்ணுக்குத் தெரியாத தூர

த்தில் சூட்டுச்சத்தங்கள் கேட்டன.

பின்பு அமைதி ஏற்பட்டது. மீண்டும் நடைப் பயணம் தொடர்ந்தது. சரியாக இரு கிலோமீற்றர் நடந்தபின் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்ட ஒரு பரந்த வயல் வெளிக்குள் நுளைந்தோம்.

மாலை நேரமாகிவிட்டது. உடற் களைப்பும் பசியும் தாகமும் தோல்வியின் தாக்கமும் எம்மைச் சோர்வடையச் செய்தன. சுற்றி அடைக்கப்பட்ட அந்த வயல் வெளி நிரம்பச் சனக்கூட்டம். மக்கள் இன்னும்வந்து கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் படுத்திருப்போம் என்று நினைத்துக்கொண்டு கையை தலைக்குக் கீழ் வைத்தபடி படுத்தேன்.அவ்வளவுதான் தெரியும் அபபடியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன். கண் வ்pழித்த போது நேரம் அதிகாலை நான்கு மணி. வயல்வெளி முழுக்க ஒரே மனித nஐன்மங்கள். கிட்டத்தட்ட இரண்டுலட்சம் இருக்கலாம். வியப்பு என்னவென்றால் இன்னும் மக்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

வன்னி என்ற சிறு சொல்லால் குறிப்பிடப்படும் நிலப்பரப்பு ஐந்து பெரிய நிர்வாக மாவட்டங்களைக் கொண்டது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் வன்னிக்குள் அடங்குகின்றன.யாழ்பாணம், மன்னார், வவுனியா ஆகியவற்றின் கணிசமான பகுதிகள் வன்னிக்குள் அடங்குகின்றன.

இந்த ஐந்து மாவட்டங்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இப்போது முட்கம்பியால்அடைக்கப்பட்ட வயல் காட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். மயிர் கொட்டிய புளுக்களைப் போல்

பால் வேறுபாடு இல்லாமல் ஒட்டிக்கொண்டு கிடக்கின்றனர்.

நாங்கள் முட்கம்பி அடைப்புக்குள் நுழையும் போது சிங்கள இராணுவச் சீருடை தரித்த இரு தமிழர்கள்தமது கையில் வைத்திருந்த ஒலிபெருக்கியில் பின்வரும் செய்தியைப் பரவ விட்டனர். நாங்கள் புலிகளைப் போல் உங்களைப் பட்டினி போடமாட்டோம்.

உங்களுக்குச் சூடான தேனீரும் சுவையான பிஸ்கட்டும் காத்திருக்கின்றன. மனம் போல் நீங்கள் பசியாற்றலாம். இது அப்பட்டமான பொய் என்பதை அணுபவத்தில் உணர்ந்தாலும் ஏதேணும் கிடைக்கும் என்ற நப்பாசை எமக்கு இருந்தது.

அங்கும் இங்குமாக சுற்றுக் காவல் நடவடிக்கையில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்ட சிங்கள இராணுவத்தினரை அரைகுறைச் சிங்களம் தெரிந்த தமிழர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர். இரந்து உண்டறியா வன்னி தமிழர்கள் இப்பொழுது உணவுக்காக அவர்களிடம் கையேந்தி நின்றனர்.

எல்லாம் நல்ல படியாகப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் எல்லோரும் உயர்ந்த மனிதர்கள் தான்.ஓரு சிதைவு ஏற்படும் போது நிலமை மாறிவிடுகிறது. நெருக்கடி ஏற்படும் போது எமது சுயரூபம் வெளிப்படுகிறது. இது தமிழர்களுக்கு பொருத்தமான கருத்து.

எமது குண இயல்புகளில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன மு. வரதராசனாரின் மொழிப்பற்று என்ற நூலைப் படித்த ஞாபகம் அவர் தமிழர்கள் பற்றிச் சில முக்கிய குறிப்புக்களை அதில் பதிவு செய்துள்ளார்.

தமிழர்கள் மொழிப் பற்றுக் குறைந்தவர்கள். பிறமொழி மோகம் கொண்டவர்கள் எதிரியோடு ஒட்டிக் கொள்ள விரும்புவார்கள். தமது அழிவிக்கு இடம் தரும் வரையில் விட்டுக் கொடுப்பை மேற்கொள்பவர்கள் அவர் மிகவும் துல்லியமாகச் செய்த மதீப்பீடுகளில் இவை ஒரு சில.

இவற்றை மறுதலித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அவர் வளர்த்த மொழிப்பற்று, இனப்பற்று என்பன தமிழினத்தை ஒருவரும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்க்குத் தூக்கி வைத்துள்ளன. தமிழினத்தின் எதிரிகள் அவரை அழிக்க வேண்டும் என்று துணிந்தற்கு தமிழின் மேல் உள்ள காழ்ப்பே காரணம்.

வேக வைக்கும் வன்னி வெய்யில் பரவத் தொடங்கியது. குழந்தைகளும் சிறுவர்களும் வேதனை பொறுக்க முடியாமல் அலறத் தொடங்கினர். வயோதிபர்களும் நோயாளர்களும் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர்

மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் தொடங்கிய ஈழத் தமிழ் மக்களின் இடப்பெயர்வு படிப்படியாக அவர்களை வெட்டுவாகலுக்கு அப்பாலுள்ள வயற்காட்டுக்குள் கொண்டு வந்துள்ளது இந்த அப்பாவிகள் கிளிநொச்சி, தர்மபுரம், கண்டாவளை, விசுவமடு, தேராவில் றெட்பானா, தேராவில், மூங்கிலாறு, சுகந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம், இருட்டுமடு, தேவிபுரம், கைவேலி, கோம்பாவில் வரை முதற் கட்டமாகக் கடந்து சென்றுள்ளனர்

அடுத்ததாக புதுகுடியிருப்பு நகரை அடைந்தனர். புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் வன்னியின் மிகப் பிரபலமான நாற்சந்தி இருக்கிறது. இந்தச் சந்திச் சுற்றாடலில் வர்த்தக நிலையங்களும் சந்தைப் பிரதேமும் காணப்படுகின்றன.

வன்னியின் பொருளாதார மையம் என்று புதுக்குடியிருப்பு நகரம் பிரபலமாகியுள்ளது. அதைக் குறிவைத்து சிறி லங்கா அரசு நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து தடவை என்ற விகிதத்தில் விமானக் குண்டு வீச்சுக்களை நடத்தியது.

வன்னியர்களுடைய ழுழுமுதற் கடவுளாக பரமசிவன் விளங்குகிறார். ஒட்டுசுட்டான் ஆலயம் மிகப் பிரமாண்டமான கட்டிடத்தைக் கொண்டது. அதற்கு விமானம் கிடையாது. கோயில் நந்தி சாதாரண உருவமைப்பும் பருமனும் கொண்டது கோயிலில் தீர்த்தக்கேணி தமிழ் நாட்டுக் கேணிகளோடு ஒப்பிடத் தக்கது. இதை எழுதும் எழியேனின் முன்னோர்களின் குலதெய்வமாக ஒட்டுசுட்டானில் எழுந்தருளிக்கும் சிவன் விளங்குகிறார். வன்னியின் கோயில்களின் எண்ணிக்கையை மாத்திரம் எடுத்துப்பார்த்தால் விநாயகர் ஆலயங்கள் தான் எண்ணிக்கையில் கூடியவை.

வன்னியின் முக்கியத் தொழில் விவசாயம் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். வன்னியில் காட்டு யானைகள் வாழ்கின்றன. வரட்சிக்காலத்தில் அவை மக்கள் குடியிருப்புக்கள் வரை வந்து அழிவை ஏற்படுத்துகின்றன. நெற் பயிர்களையும் வாழைத் தோட்டங்களையும் யானைகள் அழிப்பதானது இன்று வரை நடக்கின்றது.

தொடரும்…

அரசியல் ஆய்வாளர் க. வீமன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.