Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் முக்கிய நகரங்கள் கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளன.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் முக்கிய நகரங்கள் கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளன.?

[Monday, 2011-01-10 16:59:31]

சிறிலங்காவில் வடமாகாணத்தின் முக்கிய நகரங்கள் சில சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நடவடிக்கைகள் குறித்த முன்னேற்ற அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மாங்குளம், வவுனியா, கிளிநொச்சி, சாவகச்சேரி போன்ற நகரங்களே விரைவில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கண்காணிப்பில் கொண்டு வரப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த நகரங்களைப் பொறுப்பேற்கவுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாண மாநகரசபையையும் நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதுடன், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதானாலும், சொத்துக்களை விற்பனை செய்வதானாலும் தமது அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவித்திருந்தது. இதன் அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கவனிப்பின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த நகரங்களை அபிவிருத்தி நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டாலும் அது பொய்யான காரணம் என்று கருதப்படுகிறது. நாட்டின் பிற நகரங்களில் செலுத்தப்படாத கவனத்தை வடக்கிலுள்ள நகரங்கள் மீது மட்டும் நகர அபிவிருத்தி அதிகாரசபை செலுத்தவுள்ளது சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

விரைவில் வடக்கிலும் உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தநிலையில் புதிதாகத் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகளின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், இந்த நகரங்களின் மீது கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் மேற்கொள்ளும் வகையிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே கொழும்பு நகரத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் பொறுப்பேற்ற கோத்தாபய ராஜபக்ச சுமார் 60,000 பேரை தமது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையின தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களே என்பது குறிப்பிடத்தக்கது.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.