Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்:

11 ஜனவரி 2011

இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற குழுவினரை சந்தித்து உரையாடிய போது பாகிஸ்தானிய ஜனாதிபதி ஆசீப் அல் சர்தாரி தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயும் சபாநாயகருடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் இரத்தினக் கல் விற்பனை மற்றும் இரத்தினக்கல் பட்டை தீட்டல் கைத்தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அதிகளவு தேயிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதென அவர் குறிப்பிட்டுள்ளார். உலக பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு ஆதரவளிக்கப்படுமு; என அவர் தெரிவித்துள்ளார்.

GTN

இந்தியாவின் தேசிய நலன்களுக்கு இவ்வாறான கூட்டு முயற்சிகள் நிச்சயம் ஆப்பு வைக்கும்!

இவற்றுக்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என காலம் பதில் சொல்லும்.

எல்லை தாண்டிய இந்திய பயங்கரவாதத்துக்கு இன்னொரு சவால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.