Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அரசின் நிகழ்ச்சி நிரலின் படியே வன்செயல்கள் நடக்கின்றது. - மாணவர் தலைவர் உதுல் பிரேமரட்ன

Featured Replies

வட மாகாணத்தில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் துஸ்பிரயோகம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

நாம் இலங்கையர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட பகுதியில் மக்கள் பீதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் தங்களுது பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு இராணுவத்தினர் துண்டுப்பிரசும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறும் பாதுகாப்பு படையினர் பொது மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். வடக்கு பகுதி மக்களுக்கு பாதுகாப்பில்லாமையின் காரணமாகவே நாம் இலங்கையர் என்ற வகையில் கருத்து வெளியிடவேண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி சிங்கள மொழியி்ல் தேசிய கீதம் இசைக்கப்படக் கூடாதென வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் மார்கண்டு சிவலிங்கம் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக அரசின் ஆதரவுடன் கொலைகாரர்கள் அவரை அவருடைய வீட்டுற்குச் சென்று அவருடைய பிள்ளைகள் முன் சுட்டுக் கொலை செய்தனர்.

மேலும் தவராஜா என்ற தபால் ஊழியர் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் தனது முகப்புத்தகத்தில்(facebook) புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார். 31ம் திகதி அவருடைய வீட்டிற்குச் சென்ற சிலர் அவருடைய முகப்பத்தகத்தில் இருந்த குறித்த புகைப்படங்களை அகற்றுமாறு அச்சுறுத்தினர். அவர் அதனை செய்து கொண்டிருக்கையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் திருடர்களை கண்டுபிடித்துத் தர உதவுமாறு வவுனியாவில் பொலிஸார் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை மரக்கறி விற்பனை செய்யுமாறு கூறி, திருடர்களை கள்ளத்தனமாகப் பிடித்துத் தருமாறு பொது மக்களுக்கு அறிவுத்துள்ளது.

எனவே அரசாங்கத்தால் வட பகுதியில் அரங்கேற்றப்படும் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு நாம் இலங்கையர் என்ற அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என உதுல் பிரேமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.