Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தினால் கிழக்கில் 512 அகதி முகாம்களில் மக்கள் : மழை தொடரும் அபாயம்

Featured Replies

புதன்கிழமை, ஜனவரி 12, 2011

மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பெரிய குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகப் காரணமாக நாட்டில் 11 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

இவர்களுக்கென நாடு முழுவதும் தற்காலிகமாக 502 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம்களில் தற்போது 52 ஆயிரத்து 391 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன. வெள்ளம், இடி மின்னல், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மஹஓயா பிரதேசத்தில் ஒருவரும், மட்டக்களப்பு மன்முனைப்பற்று பிரதேசத்தில் ஒருவரும் வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து 603 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

அதனைவிடவும், 11 ஆயிரத்து 338 வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக பிரதான வீதிகள் பலவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாத்தளை கண்டிக்கு இடையிலான ரயில் போக்குவதைது இன்னும் சீர்செய்யப்படவில்லை. இதேவேளை, கொழும்பு மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் போக்குவரத்துக்கள் கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Add new comment

ஈழ நாதம்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.