Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சகலா நினைவுகளில் கேணல் கிட்டு:ஆளுமை செறிந்த, பல்முனை ஆற்றல்.

Featured Replies

மீளும் நினைவுகள் 1985, 1986 ஆம் ஆண்டுகளை வலம் வருகின்றன. அவை விடுதலைப் போராட்டம் வேகமாக விரிவடைந்த நாட்கள்! வியப்புக்களில் விழிகளை அகலமாக்கும் எங்கள் மக்கள் எங்கட பெடியள் விடாங்கள், என நெஞ்சில் பெருமிதம் ஏந்திய நாட்கள்.

வானத்தில் ஒரு கோடியில் விமானத்தின் உறுமல் கேட்கும். மக்கள் போட்டது போட்டபடி விட்டு பதுங்கு குழிகளுக்குள் பாய்வர். விமான இரைச்சல் வலுவடையும் போது வீதியில் வேகமாக 50 கலிபர் பூட்டிய 'எல்ப்" வாகனம் வரும்.

வாகனத்திலிருந்து நெருப்பு மழை விமானத்தை நோக்கிப் பாயும். விமானமோ வெருண்டெழுந்து எண்ணிவந்த இலங்கைத் தவறவிட்டு எங்கோ குண்டைத்தள்ளிவிட்டு வானில் ஓடி மறையும்.

அந்த 'எல்ப்" வாகனத்தில் அரைக் காற்சட்டையுடனும், வெற்றுடம்புடனும் நின்று 50 கலிபரை இயக்கி வான் நோக்கி குண்டுகளை சுட்டுத்தள்ளுபவர் - கிட்டு!

விடுதலைப்புலிகளிடம் விமானப் படையணி இல்லாத காலத்தில் விமான எதிர்ப்புப் படையாக வீறு கொண்டு எழுந்தவன் அவன் - அது - கோட்டைக்குள் சிங்களப் படையினரை முற்றுகைக்குள் வைத்திருந்த காலம்: அடிக்கடி படையினர் முற்றுகையை வெளி|யேற முயல்வர்.

சில சமயங்களில் காவலரண்களில் குறைந்த போராளிகளே எனினும் மோதல் தொடங்கிவிடும்! கிட்வுக்கு அறிவித்தல் போகும். கிட்டுவிடமிருந்து வோக்கியில் பதில் வரும் 'பக்கத்தில தான் நிக்கிறன் 5 நிமிசத்தில ரீமோட வந்து சேருறன்! ஆக்களை கொஞ்சம் முன்னேற விடு" இவ் அறிவித்தலைப் படையினரும் கேட்கின்றனர். தாங்கள் ஒரு பொறிக்குள் மாட்டுப்படப்போவதாக எண்ணிப் படையினர் பின் வாங்கி விடுகின்றனர்.

அந்தச் சமயத்தின் கிட்டு நின்றது மாவிட்டபுரத்தில்! இது இராணுவத்தை வெருட்டி திரும்ப வைக்க கிட்டு கையாண்ட யுக்தி! ஆம்! கிட்டு வீரனாக மட்டுமன்றி விவேகியாகவும் இருந்தான்! 'ஒபறேசன் லிபறேசன்" பல உயர் மட்டத் தளபதிகள் பல மாதங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை! மிகக்குறைந்த போராளிகளுடனேயே முகம் கொடுக்க வேண்டிய நிலைமை! கிட்டுவின் தலைமையில் தடுத்து நிறுத்திப் போராடினர் புலிகள்! ஓரிரு நாட்களில் வடமராட்சியைக் கைப்பற்றும் கனவுடன் பல நாட்களாகியும், பெரும் இழப்புக்களையும் சந்தித்தும் நெல்லியடிக்கு அப்பால் நகர முடியவில்லை.

ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை திக்கு முக்காட வைத்து இந்தியாவின் கால்களில் விழுந்து உதவி கோர வைத்தது ஒப்பரேசன் லிபறேசன் எதிர் நடவடிக்கை என்பது மறக்கப்பட முடியாதது!

இவ்வாறு கேணல் கிட்டுவின் வீரம், போர்த் தந்திரம், படைத் தலைமைத்துவ ஆற்றலை எடுத்தியம்ப ஆயிரம் ஆயிரம் உதாரணங்கள் உள்ளன. இவை ஒரு சில துளிகளே! கிட்டு ஒரு ஆற்றல் மிக்க தளபதி என்பதுடன், அவனின் பன்முக ஆளுமைக்கு இன்னும் பல பக்கங்கள் உண்டு.

ஊடகத்தின் வலிமையை உணர்ந்தவன் கிட்டு. சுவரெழுத்துக்கள், ஊர் தோறும் கரும்பலகைகள் என மக்களுக்கு செய்தி வழங்கும் ஊடகங்களை ஆரம்பித்து வளர்த்தெடுத்து பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என பல முனைகளிலும் விரிவித்தான். விடுதலைப்புலிகளின் ஊடக பலம் கண்டு சிறீலங்கா அரசே நடுங்குமளவிற்கு அது வலிமை பெறுவதற்கு அத்திவாரம் இட்டவன் கிட்டு.

கிட்டுவின் கையில் எப்போதும் துப்பாக்கி இருக்குமென்றால், எப்போதும் அவன் கழுத்தில் கமெரா இருக்கும். நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு விடும்.

விமான இரைச்சல்களாலும், குண்டு வெடிப்பு ஒலிகளாலும் மரணபயமும், நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்ட வாழ்வுக்குள் சிறுவர்கள் மனம் மகிழ்வாக இருக்க வேண்டுமென அவன் அமைத்த விலங்குகள் சரணாலயம் அவன் எதிர்காலச் சந்ததியின் மேல் வைத்த பற்றுக்கும் நம்பிக்கைக்கும் ஒரு ஒப்பில்லாத சாட்சியமாகும். இன்னொரு புறம் இவன் நல்லதொரு கவிஞனாக இருந்தான் என்பது பலரறியாத விஷயம்! அவன் வெளிநாடுகளில் தலைமறைவாக நாடு விட்டு நாடுமாறி திரிந்த போது அவன் எழுதிய கவிதைகள் அவனது தாயகப்பற்றையும், விடுதலை வேட்கையையும் வெளிச்சம் போடும் இலக்கிய வடிவங்களாகத் திகழ்கின்றன. இவ்வாறே இவன் சிறந்ததொரு ஓவியனாகவும் விளங்கினான்.

எதிரிகளுடனே இடம்பெற்ற எத்தனையோ மோதல்களில் பறிக்க முடியாத அவன் காலை துரோகிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதல் மூலம் பறித்துக் கொண்டனர். அவனோ இரு கால்களால் செய்ய வேண்டிய வேலைகளை எவ்வித குறையுமின்றி ஒரு காலாலேயே செய்து துரோகிகளின் மோகத்தை முறியத்தான்.

ஒரு தளபதியாக, ஒரு அரசியல் வாதியாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு கலைஞனாக, இலக்கியவாதியாக, ஒரு புகைப்படக் கலைஞனாக மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் பேரன்பு கொண்ட மனித நேயனாக எனப் பல முனைகளிலும் ஆற்றல் காட்டிய அவன் சிறந்த ஒரு ராஜதந்திரியாகவும் திகழ்ந்தான்.

இந்திய இராணுவம் எமது மண்ணில் நிலை கொண்டு மனித வேட்டை ஆடிய நாட்களில் இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டு எமது போராட்டத்திற்கு ஆதரவு சக்திகளை உருவாக்குவதிலும், இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அவர்களைக் களமிறக்குவதிலும் அவன் பெரும் பணியாற்றினான். எதிர்க்கட்சி அரசாங்கக் கட்சி அரசியல் வாதிகளிடம் கடிதங்கள் மூலமும், வேறுபல வழிகளிலும் எமது நியாயங்களை எடுத்துரைத்தான். வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தான்.

இதேபோன்று லண்டனில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த போது குர்திஷ் விடுதலை முன்னணி, அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ. பாலஸ்தீன் விடுதலை அமைப்பு போன்ற புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணி எமது விடுதலைப் போராட்டத்தை உலக விடுதலைப் போராட்டங்களுடன் ஒன்றிணைத்தான். லண்டன், ருவெக்ஸ் அமைப்புடன் இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்தி அதைத் தலைவரிடம் கொண்டுவர முயற்சித்த போது தான் இந்திய அரசின் நயவஞ்சகம் அவனை விழுங்கியது!

ஆம்! சமாதானத்திட்டத்துடன் கிட்டு எமது தாயகம் நோக்கி வந்த போது தான் இந்திய அரசு கிட்டுவைக் குறி வைத்தது. வங்கக் கடலின் சர்வதேசக் கடற்பரப்பில் கிட்டுவின் கப்பல் வந்து கொண்டிருந்த போது, அதைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை தனது கடற்பரப்புக்குள் கொண்டுவந்தது. அது கிட்டுவையும் தோழர்களையும் சரணையுமாறு கட்டளையிட்டது. அடிபணிய மறுத்த கிட்டுவும் வீரர்களும் வீரச் சாவடைந்தனர். அவர்களை உயிருடன் கைது செய்யும் இந்திய அரசின் நப்பாசையை தனது சாவின் மூலம் தோற்கடித்தான் கிட்டு. திலீபன், குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 13 வேங்கைகள், கிட்டு உட்பட்ட 10 வேங்கைகளைக் கொல்வதனால் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விட இந்தியா எடுத்த முயற்சி அன்றும் வெற்றியளிக்கவில்லை. இன்றும் வெற்றியளிக்கவில்லை. இனியும் வெற்றியளிக்காது.

கிட்டுவின் அஞ்சலியின் போது, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்ட விடயம் ஒன்றினை நினைவு கொள்கிறோம்.

”சிலர் வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆனால் கிட்டுவோ வரலாறாகிவிட்டான்"

http://pooraayam.com/viluthukal/349-2011-01-15-23-21-53.html

நன்றி

தமிழருவி

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.