Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் கொலை: மத்தியரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயலலிதா

Featured Replies

மலேசிய நிருபர்

திங்கட்கிழமை, ஜனவரி 17, 2011

இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தாத அளவுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், அவர்களுடைய உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் அன்றாட செய்திகளாக ஆகிவிட்டன. இலங்கை கடற்படையின் இது போன்ற அத்துமீறிய செயல்கள் காரணமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை உயிரிழந்து இருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்ய வேண்டிய அவல நிலை தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

12-1-2011 அன்று புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த தமிழக மீனவர் பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் சொல்லொணாத் துயரமும் அடைந்தேன்.

இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் பாண்டியனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1974 ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமையையும், அங்கு வலைகளை உலர வைப்பதற்கான உரிமையையும் தமிழக மீனவர்கள் பெற்று இருக்கிறார்கள். ஆனால், இந்த ஒப்பந்தத்தையும் மீறி, தமிழக மீனவர்களை தான்தோன்றித்தனமாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும், தரை எல்லைகளைப் போன்று கடல் எல்லையில் கோடுகள் இல்லாததால், மீன் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லைக் கோடு தெரியாமல் கடல் எல்லைகளை கடக்கக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்று.

இது போன்ற சந்தர்ப்பங்களில் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்வு காண்பது என்பதே பொருத்தமாக இருக்கும். ஆனால், இலங்கை கடற்படையோ இதற்கு முற்றிலும் நேர்மாறாக, தொடர்ந்து மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயலால், இந்திய பாகிஸ்தான் எல்லையில் கூட இல்லாத அளவுக்கு ஒரு பதற்றமான சூழ்நிலை இலங்கை கடற் பகுதியில் நிலவுகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையை தணிக்க வேண்டிய மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி அவர்கள் வசம் இருந்த இறால் மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவர்களின் வலைகளை கடலில் வீசிவிட்டு சென்று இருக்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இந்திய மீனவர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்களை தடுக்கக்கூடிய வல்லமை மத்திய அரசுக்கு இல்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தாத அளவுக்கு மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.