Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த வாரங்களில் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட தமிழர்கள்

Featured Replies

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஜனவரி 16, 2011

கடந்த வாரங்களில் சிங்கள படைத்தரப்பு மற்றும் சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி உட்பட ஒட்டுக்குழுக்களினால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போன தமிழ் மக்களின் விபரங்கள்.

• கடந்த 11-12-2010 அன்று மாலை 6.00 மணியளவில் யாழ் சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்களின் வீட்டினுள் நுழைந்தஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நித்தியானந்த சர்மா(55) அவர்களும் அவரது பிள்ளைகளான ஜெகானந்த சர்மா(32) சிவானந்தசர்மா(32) ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னர் நித்தியானந்த சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

• கடந்த 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை யாழில் தேசிய பாதுகாப்பு தினத்தை ஸ்ரீலங்கா அரசு கொண்டாடிய அதே தினம் இரவு 10.00 மணியளவில் வலிகாம் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவலிங்கம் அவர்களது வீட்டினுள் நுழைந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுப் படுகெலை செய்தனர்.

• கடந்த 26-12-2010 அன்று மீசாலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்வம் என்பவர் கடத்தப்பட்டிருந்தார். மூன்று நாட்களின் பின்னர் அவரது உடல் கனகம்புளியடிச் சந்திக்கு அண்மையில் புதைக்கப்பட்டிருந்தமை கொடிகாமம் பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

• கடந்த 30-12-2010 அன்று உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரன்(30) என்ற தனியார் கல்வி நிலைய ஆசிரியர் உரும்பிராய் மூன்று கோவிலடியில் சென்று கொண்டிருந்தபோது வௌ;ளை வானில் சென்ற ஆயததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

• கடந்த 30-12-2010 அன்று இரவு ஊர்காவற்துறை தம்பாட்டிப் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடராசா சிந்தாமணி(78) , இவரது மகள் இ.ராஐலக்ஸ்மி(48) ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

• கடந்த 31-12-2010 அன்று அல்வாய் கிழக்கைச் சேர்ந்த யோகநாதன் புஸ்ப்பாதேவி(48) என்ற தாய் ஒருவர் வௌ;ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

• கடந்த 31-12-2010 அன்று இரவு வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் உள்ள தேவராசா கேதீஸ்வரன் என்பவரது வீட்டினுள் புகுந்த இரண்டு முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் கேதீஸ்வரனை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

• கடந்த 01-01-2011 அன்று சிலகுல வீதி, உரும்பிராய் தெற்கு உரும்பராய் என்ற முகவரியைச் சேர்ந்த சோதிநாதன் கோபிநாத் (27) என்ற ஆட்டோ சாரதி கடத்தப்பட்டுள்ளார்.

• கடந்த திங்கட்கிழமை (3-1-2011) அன்று உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஐ;(35) என்ற 5 பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி காணாமல் போயுள்ளார்.

• கடந்த வௌ;ளிக்கிழமை (07-1-2011) பகல் உரும்பிராயைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி காணாமல் போயுள்ளார்.

• 06-1-2011 அன்று மன்னாரில் மாலை 6.45 மணியளவில் வௌ;ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் 4 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

பேசாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான தர்மா, கருசல் பகுதியைச் சேர்ந்த ஜலீஸ், தோட்டவெளி பகுதியைச் சேர்ந்த கமல் மற்றும் எழுத்தூர் பெரியகமம் பகுதியைச் சேர்ந்த தில்லை நாதன் ஆகியோரே தனித்தனியே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

Add new comment

ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.