Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானாவுக்கு இந்திய இராணுவம் வருமா..?

Featured Replies

காஷ்மீர் பிரச்சனையின் தொடக்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திற்குப் பிந்தியது. தெலுங்கானா பிரச்சனை அதற்கு முந்தியது. பிரிட்டிஸ் ஆட்சி நிலவிய காலத்தில் தெலுங்கானா பிரச்சனை தொடங்கிய தோடு இன்று முற்றிப் பழுத்து இறுதி வடிவம் பெற்றுள்ளது.

ஐதரபாத் என்ற பெயரில் பிரிட்டிசார் காலத்தில் நிலவிய ஆட்சிப் புலத்தில் கொடுங்கோலன் நிசாமின் அரசாட்சி காணப்பட்டது. நிசாமின் ஆட்சிப்புலத்தின் தென் மாவட்டங்களில் பொதுவுடமை இலட்சியம் கலந்த விவசாயப் புரட்சி வெடித்தது. இந்த மாவட்ட மக்கள் மிகவும் பின்தங்கிய வாழ்கை நிலையில் இருந்தனர். ஆண்டான் அடிமை நிலவரம் பரவலாக நிலவியது.

இளைய தலைமுறையினர் தலைமையில் வெடித்த விவசாயிகள் புரட்சியை அடக்குவதற்கு நிசாம் மன்னர் அனுப்பிய படைகள் தோல்வி அடைந்தன. 2500 கிராமங்கள் விடுதலை பெற்றன. ஓரு மில்லியனுக்கும் கூடுதலான ஏக்கர் விவசாய நிலம் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நிலச்சுவந்தார்களும் கந்துவட்டிப் பணமுதலைகளும் பதுக்கி வைத்திருந்த நெல் உள்ளிட்ட உணவுத் தானியங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன. ஓரு நடைமுறை அரசு இந்த மாவட்டங்களில் உருவாக்கப்பட்டது. மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காகக் கல்விச் சாலைகள் திறக்கப்பட்டன. மாவட்டங்களின் பாதுகாப்பிற்காக ஆண் பெண் இருபாலரும் இணைந்த இராணுவக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1947ல் இந்தியா விடுதலை பெற்றது. புதுடில்லியின் கோரிக்கைக்கு இணங்க நிசாம் மறுத்துவிட்டதால் இரும்பு மனிதர் சர்;தார் வல்லபாய் பட்டேல் இந்திய இராணுவத்தை ஐதரபாத்திற்கு 1949ம் ஆண்டில் அனுப்பினார். இந்தியக் குடியரசுடன் இணைந்து தன்னாட்சியைக் கைவிடும்படி விடுத்த புதுடில்லியின் கோரிக்கையை நிசாம் ஏற்க மறுத்தார்.

நிசாமின் றசாக்கார் என்று பெயரிடப்பட்ட பாசிசப் படைகளைத் தோற்கடித்து ஐதரபாத் மானிலத்தை இந்தியக் குடியரசின் பகுதியாக்கும் முயற்சியில் இந்திய இராணுவம் பெரும் வெற்றி கண்டது. அடுத்ததாக தெலுங்கானாவையும் கைப்பற்றி அங்கு நிலவிய மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் பணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தமது நிலங்களை இழந்து நிலச்சுவந்தார்களும் கந்துவெட்டிக் காரர்களும் சென்னையிலும் புதுடில்லியிலும் குடியேறி இருந்தனர். இவர்களை மீண்டும் ஐதராபத்தின் தென்மாவட்டஙகளில் நிறுத்துவதில் புதுடில்லி முனைப்பாக இருந்தது. பிரதமர் நேரு இதில் தீவிர ஆர்வம் காட்டினார்.

கேரளா முன்னாள் முதலமைச்சர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் எழுதிய நூலில் பிரதமர் நேரு பற்றி இப்படிக் கூறுகிறார். அவர் சோசாலிசம் பேசிக் கொண்டே முதலாளித்துவத்தைச் சுமப்பதில் வல்லவர். நேருவின் அரசியலில் இந்த இரட்டை வேடம் துல்லியமாகத் தெரிகிறது.

அவர் சமாதானச் சகவாழ்வை வலியுறுத்தும் பஞ்ச சீலக் கொள்கையை வகுத்தார். முரண்பாடுகளை அமைதி வழியில் தீருங்கள் என்று உலக நாடுகளுக்கு உபதேசம் செய்தார். போத்துக்கல் ஆட்சி செய்த கோவாவைக் கைப்பற்றுவதற்கு 1961ல் இந்திய இராணுவத்தை அங்கு அனுப்பினார்.

படுதோல்வியில் முடிந்த இந்தியா சீனா எல்லைப்போரை அடுத்த வருடம் அவரே தொடக்கினார். இந்த உண்மையை நிரூபிக்கும் வரைபடங்கள், ஆய்வுகள் அடங்கிய நூல்கள் இன்றுவரை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவதில்லை. கோவா இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் கெனடி நேருவுக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொன்னார் தெரியுமா?

பலூன் ஓட்டையாகிப் புஸ் என்று காற்று வெளியேறும் ஒலி உலகெல்லாம் கேட்கிறது. அது உங்கள் கோவா நடவடிக்கையால் ஏற்பட்டது. கோவா உலக அமைதியைக் கெடுக்கும் மிக ஆபத்தான முன்னுதாரணம். சீனா தனது தீவுக்களைத் தாக்கிக் கைப்பற்றலாம் என்று அஞ்சும் யப்பான் அரசு 1961ல் கோவாவுக்கு நடந்ததை எண்ணிப் பதற்றமடைகிறது. (நியூஸ்வீக் சஞ்சிகை 2010 நவம்பர் 08)

தெலுங்கானா புரட்சித்தலைவர்கள் விட்ட தவறு பற்றிக் குறிப்பிடலாம், அவர்கள் மாவோவின் சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார்கள். மாவோ தெலுங்கான பற்றிப் பெரிதாக எண்ணினார். இந்தியா கொமியூனிச நாடாக மாறுவதற்கான அறிகுறி என்று அவர் தெலுங்கானாத் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

இது நேருவைக் கடுப்படையச் செய்தது. மிகக் கொடூரமான ராணுவ நடவடிக்கைக்கு அவர் உத்தர விட்டார். கொல்லப்பட்ட தெலுங்கான விவசாயிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தெலுங்கானாப் பெண்கள் பற்றிய விபரங்கள் பதிவில் உள்ளன. பல தெலுங்கானா விவசாயிகள் விவசாய நிலத்தில் வைத்து உயிருடன் எரியூட்டப்ட்டனர்.

கைது செய்யப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட தெலுங்கான வாசிகள் இந்திய அரசு நிறுவிய விசேட நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது படுகொலை, மண்கொள்ளை, திருட்டு,சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பலதரப்பட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டன. பல இளைஞர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. விசாரனைகள் அவர்ளுக்குத் தெரியாத மொழியில் மொழி பெயர்ப்பாளர் உதவியின்றி நடத்தப்பட்டன.

தெலுங்கானாக் கைதிகளைத் தூக்கிலிடலாம் அல்லது நெடுங்காலச் சிறையில் அடைக்கலாம் என்ற நேரு அரசின் திட்டத்திற்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. இப்போது மும்பாய் என்று அழைக்கப்படும் பம்பாயில் தெலுங்கானா கைதிகள் பாதுகாப்புக் குழு (TELENGANA DEFENCE COMMITTEE) என்ற அமைப்பை அந்த மானில வழக்கறிஞர்கள் உருவாக்கினர்.

கைதிகள் சார்பில் இலவசமாக முன்னணி வழக்கறிஞர்கள் நீதி மன்றங்களில் ஏற்பட்டனர். கைதிகளின் நிவாரணத்திற்காக நிதி திரட்டப்பட்டது. இதனால் பல கைதிகள் விடுதலை பெற்றனர். நீதி மன்ற ஊழல்கள் அம்பலமாகின. தெலுங்கு மொழியில் வழங்கப்ட்ட வாக்கு மூலங்கள் பதிவுசெய்யப்படவில்லை. கைதிகளுக்குச் சாதகமான தரவுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தன.

குற்றப்பத் திரிகைகளில் கொமியூனிஸ்ற் கட்சி உறுப்பினர் என்று குற்றஞ் சுமத்தப் பட்டிருந்தது. ஆனால் இந்திய அரசு கொமியூனிஸ்ற் கட்சியைத் தடை செய்யாத படியால் அது எடுபடவில்லை. கைதகள் விடுதலை பெற்றனர். தெலுங்கானா போராட்டம் நீதி மன்றத்தில் நடத்தும் கட்டத்;;தை எட்டியது.

கைதிகளைப் பார்க்கச் செல்லும் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். சிறைச் சாலைகளில் கொமினியூஸ்ற் கட்சி உறுப்பினராகளுக்கு, அல்லாதவர்களுக்கு எனறு இரு பகுதிகள் திறக்கப்பட்டன. கைதிகளின் வழக்கறிஞர்கள் அசுரசாதனை புரிந்தனர்.

பெரும் எண்ணிக்கையினர் விடுதலை ஆகினர். மரணதண்டனை விதிக்கப்பட்டோரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பல குற்றப் பத்திரிகைகள் அரசு தரப்பால் சோடிக்கப்பட்டதை கைதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தனர்.

இதற்கு உதாரணமாக ஐனாத்;தர்னன் ரெட்டிக்கு நடந்ததை இங்கு படித்துப் பார்க்கலாம். அவர் 17ம் வயதில் 1948ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மீது ஒரு குற்றமும் சுமத்தப்படவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு 1949 மார்ச்சு 5ம் நாள் அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது . ஆனால் 1948 செப்ரம்பர் 21ம் நாள் பொலிசார் தாக்கல் செயத முதலறிக்கையில் (F.I.R) கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.

முரண்பாடுகளை அவதானித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அவரை 1949 யூலை 27ல் சிறையில் இருந்து வெளியே இழுத்துச் சென்று விசேட தீர்ப்பாயம் (SPECIAL TRIBUNAL) என்ற மன்றத்தில் நிறுத்தினர். தனது வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளவோ சாட்சிகளை அழைக்கவோ அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அவருக்கு புரியாத ஆங்கில மொழியில் விசாரணை நடாத்தப்பட்டது. இவர் ஒரு ஆபத்தான கொமியூனிஸ்ற் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

அவர் ஐதரபாத் நீதி மன்றத்திற்கு மேன் முறையீடு செய்த போது நான் ஒரு கொமியூனிஸ் அல்ல வென்று வாக்குமூலம் அளித்தால் விடுதலை செய்யப்படலாம் என்று அந்த நீதி மன்றம் தீர்;;ப்பு வழங்கியது. அவர் இதை ஏற்க மறுத்துவிட்டார். அவருடைய வழக்கு சுப்பறீம் உயர் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மீண்டும் கொலைக் குற்றம் உட்படப் பல்வேறு குற்றங்கள் அவருக்கு எதிராகச் சோடிக்கப்பட்டன. அவருடைய தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களின் முயற்சியால் அவர் விடுதலை பெற்றார். 1954 ம் ஆண்டு வரை ஐனர்த்தனன் ரெட்டியின் உயிர் ஊசலாடியது. 1948 தொடக்கம் இந்த ஆறு வருடகாலம் அவர் உறுதி தளராது நின்றார்.

தெலுங்கானா வழக்குகள் முடிவில்லாமல் தொடர்ந்தன. ஐதரபாத் மாவட்ட நீதி மன்றஙகளில் 300 வழக்குகள் நிலுவையில் இருந்தன. குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் 375 பேர் தடுப்புக்காவலில் இருந்தனர். கைதிகள் மீதான கடும் சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்ந்தன. தடுப்புக்காவலில் இருந்தோர் பலர் காணமற் போய்விட்டனர்.

இன்னுமொரு வியப்பூட்டும் நிகழ்சி தெலுங்கானா வழக்குகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டன. கைதிகள் தரப்பில் ஏற்பட்ட வழக்கறிஞர்கள் மீதும் பலதரப்பட்ட குற்றங்களைச் சுமத்தி நீதி மன்றத்தில் அவர்களை அரசு தரப்பு நிறுத்தியது. வழக்கறிஞர்களை மிரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இந்திய அரசின் நீதித்துறை வரலற்றில் தெலுங்கானா ஒரு கறைபடிந்த அத்தியாயம். தெலுங்கானா இந்திய அரசியல்; வரைபடத்தில் இருந்து விலக மறுப்பதில் ஒன்றும் வியப்பில்லை. இன்றைய தெலுங்கானத் தலைவர்களின் தனிமாநிலக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுப்பதற்கு வரலாறு தான் காரணம்.

சென்று வருடத் தொடக்கத்தில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பின்பு கிறிஷ்ணா கொமிசனை நியமித்தார். இது அபட்டமான இழுத்தடிப்பு உபாயம். கிறிஷ்ணா கொமிசன் அறிக்கையில் தெலுங்கானாவுக்குச் சாதகமாக ஒன்றும் இல்லை.

புது டில்லியில் நேரு குடும்ப வாரிசுகளின் ஆட்சி நிலவுவதால் ராணுவத்தை அணுப்பி விடுவார்களோ என்ற நியாயமான அச்சம் தெலுங்கானா மக்களிடம் காணப்படுகிறது. 1948,1949ம் ஆண்டுத் தலைமுறையின் மனதில் நினைவுகளும் இழப்புக்கள் பற்றிய செய்திகளும் அப்படியே இருக்கின்றன.

சென்ற வருடம் சிதம்பரம் தெலுங்கானா பற்றிய நினைவு இல்லாமல் பின்வருமாறு கூறினார். நாம் நக்சலைற்றுக்களைக் கையாள்வதற்கு எமது ராணுவத்தைப் பயன்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது எமது தர்ம சாத்திரங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் ஏற்புடையதுதல்ல. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

தெலுங்கானாவின் விவசாயிகளுக்குரிய குடியிருப்பு நிலம், விவசாய நிலம் வழங்கப்படாமல் இருக்கும் வரை பிரச்சனை தொடரும். கந்துவட்டிக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கும் வரை தெலுங்கானா கொதிநிலையில் இருக்கும். இந்திய ஆளும் வர்க்கம் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. பிரச்சனை தொடரும்.

http://www.eelampress.com/2011/01/11053/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.