Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அமெரிக்க இராணுவ நெருங்கிய நண்பர்கள் குறித்து அமெரிக்க ஊடகவியலாளர் திடுக் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அமெரிக்க இராணுவ நெருங்கிய நண்பர்கள் குறித்து அமெரிக்க ஊடகவியலாளர் திடுக் தகவல்!

இலங்கைக்கு அமெரிக்காவில் குறிப்பாக அதன் இராணுவ வட்டாரத்தில் நெருங்கிய நண்பர்கள் உள்ளனர் என்று ஜோன் லீ என்டர்ஸன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் நியுயோர்கர்.கொம் என்ற இணையத்தளத்தில் கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

புஷ் நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த ஜேம்ஸ் கிளார்ட் என்பவர் இலங்கையின் மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.

இவர் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில் இலங்கை மற்றும் இந்திய விவகாரங்களைக் கையாளுவதற்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளராக இருந்தார்.

2009ல் ஒபாமா நிர்வாகத்தால் இவர் பதவி மாற்றம் செய்யப்படும் வரை இந்த நிலை நீடித்தது. பென்டகனின் தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஜேம்ஸ் கிளார்ட் இந்து சமுத்திர கரையோரப் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி ஆராயும் ஒரு மாநாட்டைக் கூட்டுமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்து சமுத்திர கரையோரப் பாதுகாப்பு பற்றிய விடயத்தை ஒரு நாட்டோடு சமபந்தப்பட்ட விடயமாக்காமல், அதிலிருந்து விடுபட்டு அதன் பாரம்பரிய நிலைக்கு கொண்டுவருமாறு அவர் கோத்தாபயவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிளார்ட், கோத்தாபயவுக்கு நீண்டகாலமாக அறிமுகமானவர். இந்த ஆலோசனைக்கு அமையவே 2010 ஆகஸ்ட்டில் காலியில் இரண்டு நாள் மாநாடு இடம்பெற்றது.12க்கும் மேற்பட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா சார்பில் இதில் கலந்து கொண்ட அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைப் பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் ஸ்டேன்லி ஒஸர்மன் கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு ஆகிய விடயங்களில் இலங்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்று கூறினார்.

புலிகளின் கப்பல்களை கண்டுபிடிக்க உதவியது அமெரிக்க அவதானிப்பாளர்கள் தான் என்று இங்கு பதிலுக்குப் பேசிய கோத்தாபய தெரிவித்திருந்தார். உத்தியோகப்பூர்வமற்ற விதத்தில் இலங்கைக்கு அமெரிக்கா சில விடயங்களில் உதவியுள்ளது.

2008ல் புலிகளின் ஏழு கப்பல்கள் இராணுவத் தளபாடங்களுடன் மூழ்கடிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவின் செய்மதிகளின் உதவியோடு பெற்றுக்கொள்ளப்பட்ட படங்கள் பெரும் உதவியாக இருந்துள்ளன,என்று ஜோன் லீ என்டர்ஸன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

“புலிகளின் மரணம்” (Death of the tiger) என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரிவினைவாதத்துக்கு எதிராக இலங்கை அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், நவீன யுத்தகலையின் வெற்றிக்கு இலங்கையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17462:2011-01-17-12-23-41&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.