Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தலை நிமிர்வதற்கு, மடிந்த எம் மக்களின் பேரால் கேட்கின்றோம்...

Featured Replies

மடிந்த எம் மக்களின் பேரால் கேட்கின்றோம்:

இனத்தைக் காப்பாற்ற இனியாவது ஒன்றுபடுங்கள்.............!

SriLanka_Civil_War.jpg

தமிழர்கள் தலை நிமிர்வதற்கு, மடிந்த எம் மக்களின் பேரால் கேட்கின்றோம்....

[அவசரமானது- முக்கிமானது]



  • தமிழரின் விடிவுக்காக அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதே ஒரே வழியாகியுள்ள நிலையில்- ஒரே இலட்சியத்துக்காக அரசியல் நடத்தவும் போராடவும் கிளம்பிய தமிழர் தரப்புகள் அனைத்தும் இப்போது ஒன்றிணைய வேண்டியது அவசியம். இதற்குக் குறுக்கே யாராவது வந்தால் அவர்களை முட்டி மோதுவதை விட்டு அவர்களையும் அரவணைத்துப் போகும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். எரியும் நெருப்பில் எண்ணெயை வார்க்கும் காரியத்தில் இறங்காமல்- பற்றிய தீழுயைப் பரவ விடாமல்- தடுப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். இன்றைய காலச்சூழலில் தமிழர்கள் தலை நிமிர்வதற்கு இந்தத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய சக்திகள் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இதை இப்போது செய்யத் தவறினால் அடுத்த நான்கு வருடங்கள் அதற்காகக் கவலைப்பட நேரிடும்.உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல ஆரம்பமாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரையே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்.அதற்குள் சரியானதொரு முடிவுக்கு வரமுடியாமல் தமிழ்க்கட்சிகள் திணறிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வடக்கு, கிழக்கில் ஈபிடிபியையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் அணி சேர்த்துக் கொண்டு அதிகார பலத்தோடு போட்டியிடுவதற்கு ஆளும்கட்சி தயாராகி வருகிறது.ஆனால் அதற்கு உரியவகையில் கடும் சவாலை விடுக்கின்ற அளவுக்கு தமிழ்க்கட்சிகள் தயாராகி விட்டனவா என்பது தான் கேள்வி.

    இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடுமா என்ற கேள்வியே நீடித்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்தின் கீழ் ஏழு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்பது போலவும் குழப்பங்கள் இருப்பதாகவும் இப்போது செய்திகள் வருகின்றன.

    இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது- அவர்கள் இன்னமும் சரியாதொரு முடிவுக்கு வரத் தயங்குகிறார்கள் என்பதே அது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை- தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தை ஏற்று ஒன்றிணைந்து போட்டியிட- வரதராஜப்பெருமாளின் ஈபிஆர்எல்எவ், ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, சிவாஜிலிங்கத்தின் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, சித்தார்த்தனின் புளொட் ஆகியன தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இங்கு வரதராஜப்பெருமாளையும் சிவாஜிலிங்கத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு இவர்களுக்கு சங்கடங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டணி அமைவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் எதிர்ப்பதாகவும் தெரிகிறது.



  • ஆனால் இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிதொன்று உள்ளது. அதுதான் எம்மத்தியில் இருக்க வேண்டிய ஒற்றுமை.
    அதை நாம் மறந்து போனதால் கடந்த காலங்களில் சந்தித்த அழிவுகள் போதும்.
    இதற்கு மேலும் பிரிந்து நின்று மோதிக் கொள்வதால் குரங்கு அப்பத்தை பகிர்ந்த கதையாகவே முடிந்து போகும்.
    மகிந்த ராஜபக்ஸவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வடக்கிலும், கிழக்கிலும் கொண்டு வந்து நிறுத்தியது எம்மத்தியில் உள்ள வேறுபாடுகள் தான் என்பதை யாரும் மறந்து போகக் கூடாது.
    கடந்த காலத் தவறுகளை மறந்து ஒன்றுபடுதலே இன்றுள்ள தேவை

அரசியலில் ஈடுபடும் யார் தான் கடந்த காலங்களில் தவறு செய்யவில்லை?



  • ஆனந்தசங்கரி புலிகளை விமர்சித்தது போல மாவை சேனாதிராசா செய்யவில்லையா?
  • பொதுத்தேர்தல் காலத்தில் சிறீதரன் அதைச் செய்யவில்லையா?
  • சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்னர் பிறேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் அரசுடன் இணைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்படவில்லையா?
  • செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ இராணுவத்தினருடன் இணைந்து செயற்படவில்லையா?
  • 1989 பொதுத்தேர்தலில் புலிகளின் எச்சரிக்கையையும் மீறி தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தவில்லையா?

இப்படிக் கடந்த காலத் தவறுகளைப் பட்டியல் போட முனைந்தால் அது இன்னும் இன்னும் ஒற்றுமையைக் குலைக்குமே தவிர- வளர்க்காது.

ஆனந்தசங்கரி ஆகட்டும், சித்தார்த்தன் ஆகட்டும், வரதராஜப்பெருமாள் ஆகட்டும் அனைவருமே கடந்த காலங்களில் பல தவறுகளை இழைத்துள்ளனர் என்பது ஏற்கக் கூடியதே. ஆனால் இப்போது அதற்காக அவர்களைத் தண்டிக்கிறோம் என்ற பெயரில் எமது இனத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட முடியாது.

உள்ளுராட்சித் தேர்தலும் அதில் தெரிவாகும் நிர்வாகமும் மிகமுக்கியமானவை.

உள்ளூர் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். 1998 உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியே பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றியது. அதன் பின்னரே ஈபிடிபி மக்களுடன் நெருங்கமானது- முக்கிய அரசியல் சக்தியானது. அதுபோலவே இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசுடன் இணைந்து செயற்பட முனைகின்ற நிலையில் அதிகளவு உள்ளூராட்சி சபைகளை வென்றால் நிறையவே செய்யலாம்.

இன்றைய முதல்தேவை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. அதற்கான ஒரு தளமாக உள்ளூராட்சித் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் பிரிந்து நின்று மோதிக் கொண்டால் நடக்கப் போவது என்னவென்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆளும்கட்சியும் ஈபிடிபியும் பல்வேறு தில்லுமுல்லுகளையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதையெல்லாம் செய்வதற்கு அவர்களிடம் அதிகார பலமும், பணபலமும் இருக்கின்றன. இதையெல்லாம் தாக்குப் பிடிக்கின்ற திறன் எந்தவொரு தமிழ்க்கட்சியிடமும் கிடையாது.

ஆனால் ஒன்றுபட்டு நிற்கும் போது அதை எதிர்கொள்கின்ற இமாலயப் பலம் வந்து விடும்.

இது வெறுமனே உள்ளூராட்சித் தேர்தலுக்கான கூட்டணியாக மட்டும் அமைய முடியாது.



  • அதற்கடுத்து வட மாகாணசபைத் தேர்தலும் வரப் போகிறது.

அதிலும் பலமான கூட்டணி அமைய வேண்டும்.

அதுவே சிங்கள அரசுக்குச் சவால் நிறைந்த ஒன்றாக அமைய முடியும்.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இப்போது மெல்ல மெல்ல ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

அவருக்கும் அவரது அரசுக்கும் இப்போது தான் அடிமேல் அடிகள் விழத் தொடங்கியுள்ளன.

பலமுனை நெருக்கடிகளில் சிக்கி ஆட்டம் காணும் அவருக்கு சரியான ஆப்பு ஒன்றை வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க்கட்சிகளுக்கே இருக்கிறது. அவை ஒன்றுபட்டு நின்றாலே மகிந்தவின் ஆட்சியையும் அதிகாரங்களையும் இழக்கச் செய்ய முடியும். தமிழர்களுக்கு அவர் இழைத்த அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டுமானால்- அவரிடம் உள்ள அதிகாரம் என்ற கவசத்தை உடைக்க வேண்டும். அந்தக் கவசத்தை உடைக்கின்ற முதலாவது பாணம் வடக்கு, கிழக்கில் இருந்தே வர வேண்டும்.

அதற்குத் தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.

அவர்களிடம் கேட்பது ஒன்று மட்டும் தான்,

இனியாவது ஒன்றுபடுங்கள்.

இதுவரை காலமும் ஆயுதப் போராட்டம் அரசியல் போராட்டம் என்று இரு வேறுபட்ட நிலைகளுக்குள் பிரிந்து நின்ற காலம் மாறி விட்டது.



  • தமிழரின் விடிவுக்காக அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதே ஒரே வழியாகியுள்ள நிலையில்- ஒரே இலட்சியத்துக்காக அரசியல் நடத்தவும் போராடவும் கிளம்பிய தமிழர் தரப்புகள் அனைத்தும் இப்போது ஒன்றிணைய வேண்டியது அவசியம். இதற்குக் குறுக்கே யாராவது வந்தால் அவர்களை முட்டி மோதுவதை விட்டு அவர்களையும் அரவணைத்துப் போகும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். எரியும் நெருப்பில் எண்ணெயை வார்க்கும் காரியத்தில் இறங்காமல்- பற்றிய தீழுயைப் பரவ விடாமல்- தடுப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். இன்றைய காலச்சூழலில் தமிழர்கள் தலை நிமிர்வதற்கு இந்தத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய சக்திகள் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இதை இப்போது செய்யத் தவறினால் அடுத்த நான்கு வருடங்கள் அதற்காகக் கவலைப்பட நேரிடும்.

- தொல்காப்பியன் -

ஊடகப் பணிமனை - <infotamil.ch@gmail.com>

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களிடம் கேட்பது ஒன்று மட்டும் தான்

இனியாவது ஒன்றுபடுங்கள்.

ஆம்

இதை நானும் ஆமோதிக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.