Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹசன் அலி கான். - பணக் கடவுள்

Featured Replies

‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள்.

இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கினாரே பால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நாட்டின் அடிமைத் தளை உடைக்க, இந்தியா திரும்பி விடுதலை போராட்டத்தை எழுத்தாலும், பேச்சாலும், இரகசிய இயக்கத்தாலும் நடத்தினாரே அரவிந்த கோஷ் - அவரைத் தெரிந்துகொள். ஐசிஎஸ் தேரினாலும், பதவி வேண்டாம், சுக வாழ்க்கை வேண்டாம் என்று கூறி, அரசியலிற்கு வந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பற்றி தெரிந்துகொள் என்றெல்லாம் கூறி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்றைக்கு இருக்கும் பல கோடிக்கணக்கான ‘பழைய’ இளைஞர்கள். அவர்கள் யாவரும் இந்த நாட்டின் நிலை பார்த்து நொந்து நூலாகிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப்போல் விவரமறியாமல் இன்றைய இளைஞர்களும் ஆகிவிட்டால் என்னாவது? இன்றைய இந்தியாவில் அவர்கள் யாரையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இன்று வெளிவந்த ஒரு செய்தி (வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு என்று நமது நாட்டின் அரசுத் துறை அதிகாரிகளுக்கு ரொம்ப நாளாகவே பிரபலமானவர்தான்) நம்மை உந்தித் தள்ளியது. அந்த செய்தி கூறும் மனிதர் பெயர்: ஹசன் அலி கான்.

யார் இந்த ஹசன் அலி? தொழிலதிபரா? இல்லை. விஞ்ஞானியா? இல்லை. குடியரசுத் தலைவரிடம் விருது பெரும் அளவிற்கு எதையாவது இந்த நாட்டிற்காக சாதித்தவரா? இல்லை. இன்னாள் அல்லது முன்னாள் எம்.பி.யா? இல்லை. பழைய மந்திரியா? அதுவும் இல்லை. பிறகு இவர் யார்? நீரா ராடியா போன்று இந்த தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு பெரு நிறுவனங்களுக்கு அதிகார புரோக்கராக செயல்ப்பட்டவரா? அதுவும் இல்லை. பிறகு யார்தான் இவர்?

இந்த நாட்டின் மிகப் பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்து, வரி கட்டாமல் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தை, ‘பல்வேறு வழி’களில் உழைத்து பல இலக்கங்களில் சுட்டு குவித்தவர்கள், எப்படி சம்பாத்தித்தோம் என்பது தெரிந்தால் சிக்கல் என்ற நிலையில் உள்ளவர்கள் என்றுள்ள பல்லாயிரக்கணக்கானோருக்கு பணக் கடவுள் இவர்!

இங்கே, இந்த பாரத திருநாட்டில் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளின் இரகசிய கணக்குகளுக்கு மாற்றி, அந்த கருப்புப் பணத்தை பூதம்போல் நின்று பாதுகாக்க பலருக்கும் உதவி புரிந்தவர். பல ஆண்டுகளாக இவர் இந்த நாட்டில் இருந்து பல்வேறு ‘ரூபங்களில்’ அயல் நாட்டிற்கு பணமாற்றம் (ஹவாலா) செய்து - அதில் ஒரு விகிதத்தை மட்டுமே கமிஷன் பெற்றுக்கொண்டு - சுவிஸ் வங்கிகளில் இரகசிய கணக்கையும் துவக்க உதவியவர். பணத்தை காப்பாற்றித் தருபவர் பணக் கடவுள் தானே? அவர்தான் ஹசன் அலி கான்.

புனே நகரில் ஒரு குதிரைப் பண்ணை வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்துவரும் இந்தத் ‘தெய்வம்’, சுவிஸ் வங்கியின் பல்வேறு (நபர்களின்) கணக்குகளில் கொண்டு சென்று குவித்த பணம் 8 பில்லியன் டாலர்கள்! ஆங்கில கணக்குப்படி ஒரு பில்லியன் என்றால் இந்திய கணக்கில் நூறு கோடி. ஒரு டாலருக்கு ரூ.45 என்று வைத்துக்கொ்ள்ளுங்கள். இவர் நாடு கடத்திய பணம் இந்திய ரூபாயில் 4,500 கோடி!

இவ்வளவு பணம் கடத்தி சுவிஸ் வங்கிக் கணக்கில் போட்ட இந்த மகான் அதற்காக பெற்ற கமிஷன் வருவாய் தொடர்பாக வருமான வரி எதுவும் செலுத்தவில்லை. செலுத்தவில்லை என்றால் எப்படி? வருமான வரி விவரமே தாக்கல் செய்யவில்லை!

இவரைப் பற்றி அறிந்ததும் வருமான வரித்துறையும், சட்ட அமலாக்கப் பிரிவும் (Enforcement Directorate), சுவிஸ் அரசிற்கு கடிதம் எழுதின. “இவர் இந்தியாவில் இருந்து எவ்வளவு பணத்தை அங்கு கொண்டு வந்த சேர்த்தார் என்ற விவரங்களைத் தாருங்கள், இவர் இந்தியாவில் வருமான வரி செலுத்தவில்லை, அதற்கான விவரம் கூட தாக்கல் செய்யவில்லை. அது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம்” என்று கூறி, விவரம் கேட்டன.

வந்தது பதில். “வருமான விவரம் தாக்கல் செய்யாமை உங்கள் நாட்டில் குற்றமாக இருக்கலாம், எங்கள் நாட்டில் (சுவிட்சர்லாந்தில்) குற்றமில்லை. எனவே அந்நாரை பற்றிய விவரம் எதுவும் தர முடியாது” என்று அந்த ஜனநாயக நாடு பதில் போட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் ஹசன் அலி கான் வீட்டில் சோதனை நடத்தியபோது சிக்கிய ஆவணங்களையும் அந்தக் கடிதத்தோடு சுவிஸ் அரசிற்கு அனுப்பி வைத்தார்கள். அதனை போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் (Forged documents) என்று சுவிஸ் அரசு கூறி நிராகரித்துவிட்டதாம். என்னே பரிதாபம் இந்திய நாட்டிற்கு! அதற்கு மேல் வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ‘அட போடா’ என்று விட்டுவிட்டார்கள்.

இவர் நாடு கடத்திய பணத்திற்கு வருமான வரி மட்டும் எவ்வளவு செலுத்தியிருக்க வேண்டும் தெரியுமா? கபாலி கான் ரேஞ்சுக்கு கதை விடலையப்பா, மத்திய அரசு பிரபல ராஜ்சபாவில் சொன்னது: ரூ.50,000 கோடி. வட்டியோடு, தாமத அபராதம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் ரூ.70,000 கோடி!

ஹசன் அலி கான் புனேயில் ஜாலியாக குதிரை பண்ணை நடத்திக் கொண்டு இருக்கிறார். இதிலிருந்து இந்திய நாட்டு இளைஞர்கள் கற்ற வேண்டிய பாடம் என்ன? இந்த நாட்டின் சட்ட, அரசியல் விவகாரங்களில் உள்ள ‘நெளிவு, சுளிவு’ ஆகியவற்றை கற்றால் நீங்களும் - ஹசன் அலி கான் போல - ‘இந்நாட்டு (வரி கட்டாத) மன்னரே’.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/22/1110122051_2.htm

தொடர்புபட்ட கருத்து :

கருப்பு பணம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=80672

Edited by akootha

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஹசன் அலி கான் வீட்டில் சோதனை, கைது

சுவிட்சர்லாந்த் தலைநகர் ஜூரிக் நகரிலுள்ள யு.பி.எஸ். வங்கியின் இரகசியக் கணக்கில் இந்தியாவில் இருந்து சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் 800 கோடி டாலர் போட்டிவைத்துள்ளதாகக் கூறப்படும் ஹசன் அலி கானின் புனே வீட்டில் பொருளாதார அமலாக்க இயக்கக அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்து மும்பைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

புனே நகரிலுள்ள கோரேகான் பூங்கா எனும் பணக்கார மக்கள் வாழும் பகுதியிலுள்ள ஹசன் அலி கான் வீட்டை மும்பையிலிருந்து சென்றுள்ள அமலாக்க இயக்ககத்தின் இரண்டு அதிகாரிகள் குழு இன்று காலை முதல் சோதனையிட்டது. அதன் பிறகு அவரை அமலாக்க இயக்கக அதிகாரிகள் மெர்சிடிஸ் கார் ஒன்றில் ஏற்றி மும்பைக்குக் கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தும் நோக்குடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனேயில் குதிரைப் பண்ணை வைத்து நடத்திவரும் ஹசன் அலி கான், வீட்டு மனை விற்பனை ஆலோசகராகவும் இருக்கிறார் என்றும், கருப்புப் பணத்தை ஹவாலா மூலம் கடத்திக் கொண்டு சென்று அயல் நாட்டு வங்கிகளின் இரகசியக் கணக்குகளில் சேர்ப்பதில் வல்லவர் என்றும் இவர் மீது வருமான வரித்துறை குற்றம் சாற்றுகிறது.

ஹவாலா வழியில் இவர் கொண்டு சென்று சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ். வங்கியில் போட்டு வைத்துள்ள பணம் மட்டும் 8 பில்லியன் டாலர்கள் என்றும், அதற்கு வருமான வரி விதித்தாலே ரூ.40 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்த காலங்களையும் கணக்கில் சேர்த்து அதற்கு தண்டம் விதித்தால் மேலும் பல ஆயிரம் கோடி வருவாய் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் கருப்புப் பணத்தை வெளிக்கொணருவது குறித்த பொது நல வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இவ்வளவு பெரிய அளவிற்கு கருப்புப் பணத்தை அயல் நாடுகளுக்குக் கொண்டு சென்று குவித்து வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த நாட்டின் அரசுத் துறைகள் என்ன செய்துக்கொண்டிருக்கின்றன என்று நீதிபதிகள் கடுமையாக வினா எழுப்பினர்.

ஹசன் அலி கான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை ஒரு அறிக்கையாக இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் காரணமாகவே, 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு இன்று ஹசன் அலி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவரிடம் நேரில் விசாரணை நடத்த இம்மாதம் 10ஆம் தேதி வருமாறு வருமான வரித்துறை அழைப்பாணை விடுத்திருந்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1103/07/1110307058_1.htm

  • தொடங்கியவர்

ஹசன் அலி கானை பிணையில் விட்டது நீதிமன்றம்!

இந்தியாவின் மிகப் பெரிய வரி ஏய்ப்பாளராக வருமான வரித்துறையாலும், அமலாக்க இயக்ககத்தாலும் குற்றம்சாற்றப்பட்ட ஹசன் அலி கானை ரூ.75,000 பிணையில் விடுதலை செய்துவிட்டது மும்பை பெரு நகர முதன்மை அமர்வு நீதிமன்றம்.

இந்தியாவில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அயல் நாட்டு வங்கிகளின் இரகசிய வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்திருப்பதாக குற்றம் சாற்றப்பட்டு அமலாக்க இயக்ககத்தால் கைது செய்யப்பட்ட ஹசன் அலிக்கு எதிராக கூறிய குற்றச்சாற்றுகளை உரிய ஆதாரம் காட்ட அமலாக்க இயக்ககம் தவறிவிட்டது என்று கூறி அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி எம்.எல்.தஹால்யானி கூறியுள்ளார்.

வருமான வரித்துறைக்கும், அமலாக்க இயக்ககத்திற்கும் இது பெரும் பின்னடைவாகும்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1103/11/1110311038_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியல் அழுத்தம் இல்லாமல் நடந்திருக்க முடியாது.

இதில் அலியை கண்டபடி கிண்ட வெளிக்கிட்டால் தாங்கள்.... பதுக்கின காசு விசயம் வெளியிலை வந்துடும் என்னும் பயம்.

நாளைக்கு அலி டுபாயிலை நின்று ஹாய்.. சொல்லுவான்... , அவனை தேடிப் பிடிக்க... புலனாய்வுத்துறை வேட்டியோடை டுபாய்க்கு போவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.