Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஒரே கடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கடல்.

சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா

நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள்

திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள்.

உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான்

இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது

நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும்

சொல்ல முடியாது.

நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன்.

இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள்

மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல்

நம்பிக்கை இல்லாதவன்.

http://umakathir.blogspot.com/2008/04/blog-post_11.html

ஜெயக்குமார் (நரேன்) கல்யாணமாகி குழந்தை பெற்ற ஒரு வேலையில்லா பட்டதாரி

தீப்தி (மீரா ஜாஸ்மின்) நரேனின் மனைவி. வேலையில்லாத கணவனுடன் குடும்பம்

நடத்தும் அதிகம் படித்திடாத பெண்.

இவர்கள் மூவரும் ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.

இவர்களுக்குள் நடப்பதுதான் கதை.

மீராவின் குழந்தைக்கு உதவுகிறார் மம்முட்டி நன்றி சொல்ல மம்முட்டியின் வீட்டுக்கு

வரும் மீரா அந்த வீட்டையும், தனியனான மம்முட்டியையும் கண்டு பிரமிக்கிறாள்.

இது அவளுக்கு முற்றிலும் புதியதான உலகம். தயங்கியவாறே நன்றி சொல்லிவிட்டு

செல்கிறாள். உதவிபெறல்களின் தொடர்ச்சியாக இருவருக்கும் உறவு ஏற்படுகிறது.

மம்முட்டியின் சிபாரிசில் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது.

மம்முட்டி மூலம் கர்ப்பமாகிறாள் மீரா. இதைச் சொல்ல வரும் மீராவினை தன்

அறிவுஜீவித்தனத்தால் காயப்படுத்தி அனுப்பும் மம்முட்டி. உடல்சுகத்தை தாண்டி

தன்னிடம் வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை என்ற உண்மை தெரியவரும்போது

மீராவுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தான் கொண்டிருக்கும் நேசத்தை

புறக்கணிக்கும் போது ஏற்படும் மன உளைச்சலில் மனநிலை பாதிக்கப்படுகிறாள்.

இயல்புக்கு மாறான தொடர்ந்த சில சம்பவங்களில் மருத்துவமனையில்

சேர்க்கப்படுகிறாள். சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்து கணவனுடன்

திரும்புகிறாள்.

இடைப்பட்ட காலத்தில் தனது வீடு மாறி, தான் தன்னை பறிகொடுத்த அதேவிதத்தில்

இன்னொரு வேலையில்லாதவனின் மனைவியுடன் தன் கணவனுக்கு தொடர்பு

இருப்பதை உணர்கிறாள். ஒரே கடல் என்ற தலைப்பிற்கு அர்த்தம் அந்நேரத்தில்

புரிய வரும். மிக வலிமையான தலைப்பு.

ஒரு அழகான பெண்ணின் காதலை, பரிசுத்தமான அன்பை, குடும்பத்தை கலைத்த

குற்ற உணர்ச்சியில் பெரும் குடிகாரராகிறார் மம்முட்டி. தன்னால்தான்

கர்ப்பமுற்றாள் என்பதை நம்ப மறுக்கிறார் அதன் விளைவாகவே மீரா மனநிலை பாதிக்கப்படுவதையும்நம்ப மறுக்கிறார். உண்மையை ரம்யா கிருஷ்ணன்

விளக்கும்போதும் நம்ப மறுக்கிறது. பேலா (ரம்யா கிருஷ்ணன்) உயர்தர பார்

நடத்தும் தனிமை பெண். திரைப்படத்தில் ஒரு பெண் பார் நடத்த வேண்டுமென்றால் இயக்குனர் அந்த பாத்திரத்திற்கு ப்ளாஷ்பேக் வைத்திருப்பார். அதற்கென்று சில

ரீல்கள் செலவில்லாமல் பாத்திரமே சொல்வது போல செய்து நம்மை

காப்பாற்றி விட்டார்.

உலக பந்தங்கள் அனைத்து சுயநலமானவை என்று நினைக்கும் அவனுக்கு

அடுத்தவனின் மனைவி மூலம் வாரிசு ஏற்படுவதை ஏற்க முடியவில்லை.

தொடர்ச்சியான சுயகேள்விகள் மூலம் பெரும் குடிகாரனாகிறார் மம்முட்டி. முடிவில்

தான் மீராவை காதலிப்பதை உணர்கிறார். இரு குழந்தைகளுக்கு தாய். கணவன்

என்ற பந்தங்களை விட்டு வேளிவர முடியாத ஒருத்தியின் மேல் காதல் என்பது

சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

நம் சமூகம் கட்டமைத்த உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாதது என்பது மேலை

நாட்டுக் கலாச்சாரம். நம் சமூகத்துக்கு முற்றிலும் பொருந்தி வராத கலாச்சாரம்.

புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் உறவுச்சிக்கல்களின் முடிவில் காதலின்

புனிதத்தை உணர்கிறான். இருவரின் காதலையும் இச்சூழல் ஏற்க மறுக்கிறது.

மிகவும் சிக்கலான இக்கதையில் மிகச்சிறந்த நடிப்பாக மம்முட்டியையும், மீரா

ஜாஸ்மினையும் சொல்லலாம்.

புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயாவின் ஹீரக் தீப்தி என்ற

நாவலின் தழுவலே ஒரே கடல். மிக அபூர்வமான படம். தனது வாழ்க்கையில் நடித்த

மிகச்சிறந்த படம் என்று மீரா ஜாஸ்மின் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மம்முட்டி

பற்றி சொல்லவேண்டியதில்லை. படத்தின் இருபெரும் தூண்கள் இவர்கள்தான்.

நரேனின் நடிப்பு சுமார். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திணிப்பாக மட்டும் உள்ளது.

நான்கே நான்கு பாத்திரங்கள் கொண்டு கலவையான உணர்ச்சிகளுடன் ஒரு மிகச்சிறந்த

படத்தை கொடுத்த இயக்குனர் ஷ்யாமப்ரசாத் அவர்களுக்கு பாராட்டுகள்.

http://www.youtube.com/watch?v=5L3kxC3bUZQ&feature=related

Edited by nunavilan

  • 2 weeks later...

இப்படம் மலையாளத்தில் வெளிவந்து சிலவருடங்கள் இருக்கும்.. இப்போ தான் தமிழில் வெளிவந்திருக்கு என்று நினைக்கிறேன்.!

oreKadal2.jpg

ஒரே கடல் - உள்ளிருக்கும் அலைகளின் இரைச்சல்

'ஒரு பெண் நாலஞ்சு குழந்தைகளைப் பெத்துக்கிட்டா அதுல ஒண்ணோ ரெண்டோ அவளது கண்வனோடதா இல்லாம இருக்கலாம். அதுல என்ன தப்பு?'

'எனக்கு பெண்கள் வேண்டும். அவர்களது உடலுக்காக. அதற்கு மேல் ஏதுமில்லை'

'எந்தப் பெண்ணிடமும் எந்த ஆணும் ஜெயித்து விட முடியாது'

'எனக்கு எந்தப் பெண் மீதும் காதலெல்லாம் இல்லை நான் யாரையும் காதலிக்கவில்லை. நிர்பந்திக்கவில்லை. வாக்களிக்கவில்லை. அவர்களாக இஷ்டப்பட்டு வந்தால் நான் மறுப்பதுமில்லை

'Poverty is an expensive thing to maintain' என்று வகுப்பெடுக்கும் பொருளாதார மேதை நாதனின் இன்னொரு பக்கம்தான் மேலே சொன்ன வசனங்கள். தனது சித்தியின் மரணத்திற்குக் கூட செல்ல மறுக்கும், வாழ்க்கையை எவ்விதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்பட மறுத்து அதன் கொண்டாட்டங்களுக்காக மட்டுமே எதிர்கொள்ளும் மனிதன் நாதன்.

அதிகம் படிப்பறிவில்லாத, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, வேலையில்லாத கண்வனோடும் ஒரு குழந்தையோடும் நாதன் வசிக்கும் அதே கட்டடத்தின் நான்காம் தளத்தில் வசிக்கும் ஒரு சராசரிப் பெண்மணி தீப்தி.

நாதன் மீது தீப்திக்கு ஏற்படும் காதலும் அதன் மூலம் ஏற்படும் உளவியல் ரீதியான் பிரச்னைகளும் வாழ்வில் எதிர்கொள்ள முடியாத பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும்போது அதனாலுண்டாகும் அகச்சிக்கல்களும்தான் ஷ்யாம பிரசாத்தின் ஒரே கடல் திரைப்படம்

கண்வன் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு உதவி செய்ய முன்வரும் நாதனுக்கு நன்றி செல்ல முனையும் தீப்திக்கு புத்தகம் மற்றும் மதுக்குப்பிகள் நிரம்பிய அறை மற்றும் நாதன் வாங்கிக் குவித்த பட்டங்கள் என்று குவிந்திருக்கும் நாதனின் உலகம் தரும் பிரமிப்பு, அல்லது நாதனின் கருணை அல்லது என்னவென்று சொல்ல முடியாத ஈர்ப்பு நாதனோடு கலவிக்குக் கொண்டு செல்கிறது

நாதனுக்கு இதுகுறித்த பெரிய கவலையேதுமில்லையெனினும் சராசரிப் பெண்ணுக்கான ஈர்ப்பும் காதலும் நாதன் மீது தீப்திக்கு ஏற்படுவதும், நாதனுக்குத் தன்மேல் இருப்பது உடல் சார்ந்த ஈர்ப்பென்று அறிந்து நாதனை வெறுப்பதும், இருந்தும் நாதனை இழக்க முடியாத மனதை அடக்க முடியாமல் அலைபாய்வதும், தன் மேலான அங்கலாய்ப்பினால் மனப்பிழவேற்படுவதும், மீண்டும் மனநிலை சரியாகி குழந்தைளோடு வாழத் துவங்கும்போதும் தன்க்குள் மீண்டுமேற்படும் பிரளயம் தாங்க முடியாமல் நாதனைக் கொல்ல முயன்று நாதனுக்கு அதற்குள் தன் மேல் காதலேற்பட்டதறிந்து அவனோடு வாழத் தலைப்படுவதுமாக எது நன்று எது தீதென்று தீர்மானிக்க இயலாத சபலமா, காதலா வெறுப்பா ஈர்ப்பா முடிவெடுக்க முடியாத தீப்தியின் கதாபாத்திரம் மிகச் செறிவாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக மீரா ஜாஸ்மின் தவிர்த்து வேறு யாரும் செய்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மிகக் கனமான பாத்திரத்தை தனது விழிகளாலும் உடலசைவுகளிலும் உன்னதமான, தேர்ந்த மிகைப்படுத்தாத முகபாவங்களிலும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.

மம்மூட்டி - சொல்ல வேண்டிய அவசியமில்லை. புத்திஜீவியாக, பெண்களை போகத்திற்காக மட்டும் உபயோகிக்கும் கொண்டாட்ட மனநிலை கொண்ட அறிவுஜீவி மனிதனாக கம்பீரமும், கர்வமும், தன்முனைப்பும், கழிவிரக்கமும், கடைசியில் காதலும் கொண்டு வாழ்ந்திருக்கிறார். மம்மூக்கா அப்படி செய்யாமல் போனால்தான் செய்தி.

கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு நேரும் திருமணம் தாண்டிய உறவும் அதனால் அவளுக்கு ஏற்படும் உளச்சிக்கல்களுமே படம். இறுதியில் தீப்தி தனது சிக்கல்களுக்குத் தீர்வாக நாதனோடு சேர்ந்து வாழ்த் தலைப்படுகிறாள். அவர்களைத் தேடி நாதனின் உறவால் பிறந்த தீப்தியின் குழந்தை படியேறி வருவதோடு படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்

ஆணாதிக்கம் ஓங்கிய சமூகத்தில் பெண்ணின் மனஓட்டத்தின் நுண்ணுணர்வுகள் குறித்த பார்வைகள் பெரும்பாலும் மறக்கடிக்கப்பட்டே வருகின்றன - காலம் காலமாக. மனதின் ஏதோவோர் மூலையில் எப்படியோ எத்றகாகவோ நுழைந்து விட்ட ஆண்மகனை மறக்கவியலாமல், தனது சமூகம் அனுமதித்திருக்கும் கட்டுகளுக்குள் நின்று கொண்டு விலகவும் முடியாமல் தனது உணர்வுகளை நியாய்ப்படுத்தவும் தெளிவில்லாமல், பயந்து, மனம் புழுங்கி அதன் வெம்மை தாங்காமல் மனப்பிறழ்ச்சிக்குத் தள்ளப்படும் ஒரு கதாபாத்திரம் சாதாரண சமூகநீதிக்கு முன்னால் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுவது இயற்கையானதுதான்

ஆனால்...

'வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம் கையை மீறி நிகழ்பவை.எல்லாவற்றிற்கும் காரணம் சொல்லிக் கொன்டிருக்க முடியாது. சமூகம் சார்ந்து மட்டுமே வாழ்வதால் சில விசயங்கள் தவிர்க்கப்படலாம் ஆனால் தனிமனிதர்களுக்கு இடையிலான உறவுகள் சமூகம் தவிர்த்தும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அன்பை என்ன சொல்லி தடுப்பீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார் படத்தின் இயக்குனர் ஷ்யாமபிரசாத் - படம் முடிந்ததும் இயக்குனரோடு பார்வையாளர்கள் பேசும் நிகழ்ச்சியின்போது

'திருமணம் என்ற இந்த அமைப்பையே இந்தப் படம் கேள்விக்குரியதாக்கி விடாதா?' என்ற கேள்வி எழுப்ப்பப்பட்டது.

'ஒட்டு மொத்த சமூகத்தில் இரண்டு பாத்திரங்களின் நிகழ்வே காலம்காலமாக இருக்கும் அமைப்பை தகர்த்து விடுமா?' இது இரண்டு மனங்கள் குறித்த கதை. அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களிநால் நிகழும் சம்பவங்கள் பற்றிய சிந்தனை. ஆனால், இதைக் குறித்த எண்ணங்களோடு மட்டும் வெளியில் செல்லாமல் படியிலேறி தனது தாயைத் தேடி வரும் குழந்தையின் நிலை என்னவென்றும் பார்வையாளன் சிந்திக்க வேண்டுமென்பதுதான் என் எண்ணம். நான் தீர்வைச் சொல்லவில்லை. நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்' என்றார் அவர்.

'இந்தப் படத்தின் மூலம் நீங்கள் சொல்லவரும் கருத்து?' - ஏதோ ஒரு பொதுபுத்தி கேட்டு வைத்தது. படமென்ற ஒரு வஸ்துவில் கருத்தை எதிர்பார்த்த அந்த அறிவுஜீவிப் பெண்மணியைக் கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்தேன்.

' படத்தில் கருத்துச் சொல்ல வேண்டுமென ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? நான் நான்கு மனிதர்களை அவர்களது வாழ்க்கையை அதில் ஏற்படும் சிக்கல்களைச் சொல்லியிருக்கிறேன். இது நடக்காது என்று சொல்ல முடியாது ஏன் நடக்க வேண்டுமென்று கேட்கவும் முடியாது.ஒரு கதையை அதன் சுவை கெடாமல் முயற்சித்திருக்கிறேன். அதைத் தவிர படத்தில் நீதி சொல்ல நான் ஆளில்லை'

இயக்குனர் சொல்லியிருப்பது உண்மைதான். ஷ்யாமபிரசாத்தின் மிகப்பெரும் பலம் அவரது வாசிப்பனுபவம் அவரது படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு புதினம் தழுவியதாக் அல்லது எழுத்தாளரின் ப்டைப்போடு தொடர்புடையதாகவே இருக்கின்றன.

'ஒரே கடலும்' சுனில் கங்கோபாத்யாவின் வங்காள நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான். ' சில இடங்களைக் கொஞ்சம் மாற்றி திரைப்படமாக்கியிருக்கிறேனே தவிர மற்றபடி கதையைச் சிதைக்கவில்லை' என்றார் ஷயாம். 'இது ஒரு இந்தியத் திரைப்படம் மலையாளத்தில் வந்திருக்கிறது.அவ்வளவுதான்'

இதற்கு முன்பு எடுத்த படமான 'அகலே' Tennessee Williams எழுதிய The Glass Menagerie ஏற்படுத்திய பாதிப்பு. லலிதா அம்பிகார்ஜுனத்தின் புதினத்தை 'அகனி சாட்சி' யாக எடுத்திருக்கிறார். மலையாள நாடகாசிரியர்களில் முக்கியமானவரான எஸ் எல் புரத்தின் 'கல்லு கொண்டொரு பெண்ணு' நாடகத்தையும் திரைக்கு மாற்றியவர் ஷ்யாமபிரசாத். அவரது இந்த அனுபவங்களின் நீட்சியாக 'ஒரே க்டலை'ப் பார்க்க முடியும்.

நான்கு பேர் மட்டுமே கொண்ட ஒரு கதை. அநேகமாக வீட்டிற்குள்ளேயே நிகழும் கதை - இருந்தும் அதிகமில்லாத வாய்ப்பையும் உள்ளரங்குகளில் சரியான வெளிச்சத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் ஒளிப்பதிவைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் அழகப்பன். கலை இயக்குனருக்கு வேலையே இல்லையோ எனுமளவுக்குத்தான் நிகழ்வுகள் என்றாலும் மம்மூட்டியின் அறைக்குள் இறைந்திருக்கும் புத்தகங்கள், சிதறிக்கிடக்கும் துணிகள் என்று அந்தக் கதாபாத்திரத்தின் ஆளுமையையும் அலட்சிய மனோபாவத்தையும் தனது தேர்ந்த அணுகுமுறையால் வெளிப்படுத்தியிருக்கிறார் கலை இயக்குனர். அதே போன்றே 'ஔசேப்பச்சனின் நேர்த்தியான இசையும் இயக்குனருக்குப் பெரும் உதவி செய்திருக்கிறது.

ஒரே கடல் என்பதனை 'The sea within' என்று மொழிபெயர்த்திருந்தார்கள்

ஒவ்வொரு மனித மனதும் கரை காண இயலாத சமுத்திரம்தான் என்பதால் மிகப் பொருத்தமான பெயர்தான்.

நன்றி

http://www.youtube.com/watch?v=4T0tDsNoVsA

Edited by r.raja

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.