Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு!

Featured Replies

தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு!

வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல் கொஞ்சமாவது

மிஞ்சியிருக்கிறது!

நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும்.

தமிழினப் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் திமுக அல்ல. அம்மாவை விட அய்யா நல்லவர். அதன் அடிப்படையில் காங்கிரசை எதிர்ப்போம் திமுக வை (மறைமுகமாக) ஆதரிப்போம் என்கிறீர்கள். இதைத்தான் சுபவீ காரணம் காட்டுகிறார். அய்யாவை விட அந்த அம்மா மோசமானவர் என்கிறார். அதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்கள்.

இது எப்படி இருக்கிறதென்றால் தாடிக்கொரு சீயாக்காய் தலைக்கு ஒரு சீயாக்காய் வைத்துக் கொள்ளலாம் என்பது போல இருக்கிறது!

காங்கிரஸ் இந்திய தேசியம் பேசும் கட்சி. அந்தக் கட்சி அப்படித்தான் நடந்து கொள்ளும். ஆனால் திமுக அப்படியல்லவே?

எங்களுக்கு அயலார் உதவி செய்யவில்லை என்றால் கோபித்துப் பயனில்லை. ஆனால் உற்றார் உறவினர் உதவிசெய்யவில்லை

என்றால் அவர்கள் மீது கோபம் வரத்தானே செய்யும்?

திராவிட தேசியம் பேசிய திமுக உதவி செய்யும் நிலையில் இருந்தும் உதவி செய்யாது விட்டதுதான் பெரிய இரண்டகம். வரலாற்றுத் தவறு. அதற்கு மன்னிப்பே கிடையாது.

முள்ளிவாய்க்காலில் குருதி வாடை வீசிக் கொண்டிருக்கும் போது தில்லி சென்று கூடாரம் அடித்து தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகள் பெறுவதற்கு காங்கிரசிடம் கருணாநிதியிடம் வரம் கிடந்தாரே இதைவிடவா செல்வி ஜெயலலிதா மோசமாக நடந்து கொள்வார்? அமைச்சர் பதவிகள் இல்லை என்றால் கருணாநிதி சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார். மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தன. ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கருணாநிதி கோபம் காட்டவில்லை. "மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகிறது" என்றுதானே முகாரி பாடினார்? தமிழகத்தில் முத்துக்குமாரன் தீக்குளித்த போது அவருக்கு வீட்டுச் சிக்கல். அதனால்தான் தீமூட்டி இறந்தார்" என்று கருணாநிதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்!

இறுதி வாய் சொட்டு நீருக்கும் வழியின்றித் தமிழகம் நோக்கி அவலக் குரல் எழுப்பியவாறு அந்த கடற்கரை மண்ணில் வீழ்ந்து மடிந்த போதும் கலைஞர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். தமிழின அழிப்பின் இறுதி நாட்களில் சிங்கள தேசத்தின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் குருதி சிந்திச் சாய்ந்த வேளையிலும், நெருப்பில் கருகி வீழ்ந்த வேளையிலும் கலைஞர் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருந்தார். சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன? அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி,

கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைத்தாலும் வியப்பில்லை!

ஈழத் தமிழர்களின் சாபக்கேடு, தமிழகத்தில் ஈரமுள்ள ஒரு தலைவன் அப்போது இருக்கவில்லை. தமிழகத்து முதல்வர் நாற்காலியில் கருணாநிதியைத் தவிர யார் இருந்திருந்தாலும் பாதித் தமிழர்களாவது காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

சென்னை மரீனா கடற்கரையில் காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே உண்ணா நோன்பு இருந்து பின் மதிய உணவுக்கு நோன்பை முடித்துக் கொண்ட நடிப்பை அல்லது கோமாளித்தனத்தை வேறுயாராவது மிஞ்ச முடியுமா? இதை வைத்துத்தான் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் அமைச்சர் கோத்தபாயா "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்ல கோமாளிகள்" என்று சொன்னான். அதையிட்டு கருணாநிதி வாய் திறக்கவில்லை. அதன் பொருள் "ஆமாம் நாங்கள் அரசியல் கோமாளிகள்தான்" என்று மறைமுகமாகச் சொன்ன மாதிரி இருந்தது.

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். அப்போதும் கருணாநிதி என்ன சொன்னார்? அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுகிறது என்று சொன்னார்!

'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்' ' 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' என்ற பல்லக்குப் பேச்சிற்கு மட்டும் குறைவில்லை. ஆனால் சிங்கள இராணுவம் தமிழீழ மக்கள்மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் 'மானாட மயிலாட' வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றிய ஒரே மனிதர் கருணாநிதிதான்.

தொடக்கத்தில் ஜெயலலிதா பிரபாகரனுக்கு ஒன்று நடந்தால் தமிழகம் கிளம்பி எழும் என்று பேசினார். பின் அவரது பாப்பாத்தி உணர்வு திராவிட பேசிய

உணர்வை மழுங்கடித்து விட்டது. "அப்போது நான் கட்சிக்குப் புதிது. கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைப் படி அப்படிப் பேசினேன். இப்போது

நிலைமை அப்படியில்லை" என்று தனது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பித்தார். அதாவது சோ இராமசாமி, இந்து இராம், அரசியல் கோமாளி சுப்பிரமணியன்

சுவாமி ஆகியோரது வழிகாட்டல் படி புலி எதிர்ப்பாளனாக மாறினார்.

ஜெயலலிதா தமிழீழம் பற்றி சொல்லியதை பட்டியல் இட்டுள்ளீர்கள். மெத்த நல்லது. அம்மா சொன்னதை பட்டியல் போட்ட நீங்கள் அய்யா சொல்லியதை ஏன்

பட்டியல் போடவில்லை? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் தங்கம் என்பதா?

கருணாநிதி தொடக்க முதல் தலைவர் பிரபாகரனை தனது "தமிழினத் தலைவர்" பட்டத்துக்கு ஆபத்தான மனிதர் என்றே பார்த்தார். அதுதான் "அந்தப் பயல் (சொல்லாட்சியைக் கவனியுங்கள்) தன்னை என்ன தமிழினத் தலைவன் என்றா நினைக்கிறான்" என்று கேட்டிருக்கிறார்.

தமிழீழ கோரிக்கை பற்றி கருணாநிதி எத்தனை குத்துக்கரணங்கள் அடித்தார் என்பதற்கு பட்டியல் போட்டால் அது எத்தனை பக்கம் நீளும்?

1. நான் வன்முறையை ஆதரிக்கமாட்டேன். அதாவது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க மாட்டேன்.

2. இது சகோதர யுத்தம். புலிகள் அதைத்தான் செய்கிறார்கள். அதாவது எனது அன்புக்குரிய ரெலோ தலைவர் சபாரத்தினத்தை கொன்றவர்கள் புலிகள்.

ரெலோ தலைவர் றோவின் ஆணைப்படி புலிகளைக் கொல்ல அணியமாகிக் கொண்டிருந்தார்கள். அதனை அறிந்த புலிகள் முந்திக் கொண்டார்கள். அதுதான் நடந்தது.

3. ஈழம் விடுதலை அடைந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான். அதாவது பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன். ஆனால் பேரன் பிறந்தால் உச்சி மோந்து கொஞ்சி மகிழ்வேன்!

4. ஸ்ரீலங்கா அரசு இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கு கூடிய உரிமைகள் வழங்க வேண்டும் இல்லையேல் செக்சிலோவக்கிய குடியரசுகள் அமைதியாகப் பிரிந்து தனிவழி போனதுபோல சிங்களவரும் தமிழரும் பிரிந்து தனிநாடு காண்பதே சரியான வழி என்று சொன்னவரும் கருணாநிதிதான். இதைத்தான் இரட்டை நாக்குடையாய் போற்றி என்று பேரறிஞர் அண்ணர் வருணித்தார்!

ஜெயலலிதா தடா சட்டத்தின் கீழ் வைகோ, நெடுமாறன், சுப.வீ போன்றோரை அடைத்தவர் என நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். உண்மை. அதை யாரும் மறைக்கவில்லை. எட்டிப் பழம் இனிக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் கருணாநிதியின் யோக்கியதை என்ன? எழுபது போராளிகளை ஆண்டுக்கணக்காக சிறப்பு முகாம் என்ற அலங்காரச் சிறைகளில் வைத்து உள்ளாரே? எவர் மீதும் இதுவரை குற்றச்சாட்டும் இல்லை வழக்கும் இல்லை? இதுதான் தமிழினத்தலைவரின் இலக்கணமா?

எங்களை விடுங்கள். தமிழக மீனவர்கள் 550 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்களே? என்ன செய்தார் கருணாநிதி? பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று முழங்கிக் கொண்டு தில்லியோடு சண்டைக்குப் போனாரா? இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த இனத்தவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா?

மகாராஷ்ட்ராவில் கார் ஓட்டிப் பிழைக்க வேண்டுமானால் மராத்தியனாகத் தான் இருக்கவேண்டும். மராத்தி மொழியில் எழுத படிக்கத் தெரிந்தால் தான் வண்டி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று இந்தியாவின் தேசிய பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் ஆட்சியாளர் போட்ட சட்டம் இயற்றியது. மும்பையில், பல்வேறு மையங்களில் புகைவண்டி வேலைக்கான தேர்வு நடைபெற்ற போது ஏராளமான பீகார் மாநில இளைஞர்கள் கலந்துகொண்டனர். தேர்வு மையங்களுக்குள் அதிரடியாக நுழைந்த மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொண்டர்கள் வடஇந்திய இளைஞர்களின் விடைத்தாள்களை கிழித்தெறிந்தனர். அவர்கள் தேர்வு மையத்தை விட்டு ஓட ஓட விரட்டப்பட்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அதை எதிர்த்து நிதிஷ்குமாரும் லாலு பிரசாத்தும் எப்படிக் கொதித்து எழுந்தார்கள்? மும்பை போவதற்கு விசா வாங்க வேண்டுமா என்று கேட்டார்கள். அவர்களோடு கருணாநிதியை ஒப்பிட முடியுமா? கருணாநிதிக்கு சூடு, சொரணை, மானம், மரியாதை கொஞ்சமும் இல்லாது இருக்கிறதே? பதவி தோளில் போடும் துண்டு கொள்கை கட்டிக் கொள்ளும் வேட்டி என்றெல்லாம் பேசிய வாயல்லவா கருணாநிதியின் வாய்? இன்று ஏன் அது அடைபட்டுப் போயிற்று?

இந்திரா காந்தியைக் கொன்றவர்களை மாவீரர்களாக்கி சீக்கிய பொற்கோவிலில் படமாகத் தொங்கவிட்டுள்ளார்கள் சீக்கியர்கள். சீக்கிய பொற் கோயிலுக்குப் போகிறவர்கள் அவர்களையும் வணங்கி விட்டுத்தான் போகிறார்கள். அந்தத் துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா? அவர் உடலில் ஓடுவது குருதியா? சாக்கடை நீரா?

கவிஞர் தாமரை அவர்களே! பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருப்பீர்களே? அதில் ஒரு காட்சி.

சகுனியின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு சூதாட்டத்தில் தோற்ற தருமன் தம்பியரைப் பணயம் வைத்து, அவர்களையும் இழந்த பின் தன்னையே பணயமென வைத்து அதிலும் தோற்றுப் போனான்.

“மன்னவர், தம்மை மறந்து போய் - வெறி

வாய்ந்த திருடரை யத்தனர் - அங்கு

சின்னச் சகுனி சிரிப்புடன் - இன்னும்

“செப்புக பந்தயம் வேறொன்றான் - இவன்

தன்னை மறந்தவ னாதலால் - தன்னைத்

தான் பணயமென வைத்தனன் - பின்பு

முன்னைக் கதையன்றி வேறுண்டோ? அந்த

மோசச் சகுனி கெலித்தனன்”

அடுத்து பணயமாகத் தருமன் தன் மனைவி பாஞ்சாலியையே வைக்கத் துணிந்தபோது அவள் அழகையும் சிறப்பையும் பாரதியார் வர்ணிக்கும் பாங்கே பரவசமூட்டக் கூடியது எனினும் பரிதாபத்திற்குரியதுமாகும்.

“பாவியர் சபைதனிலே - புகழ்ப்

பாஞ்சால நாட்டினர் - தவப்பயனை,

ஆவியி லினியவளை - உயிர்த்

தணிசுமந் துலவிடு செய்யமுதை,

ஓவிய நிகர்த்தவளை - அரு

ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்

தேவியை, நிலத் திருவை - எங்குந்

தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை,

படிமிசை யிசையுறவே - நடை

பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்

கடிகமழ் மின்னுருவை - ஒரு

கமனியக் கனவினைக் காதலினை,

வடிவுறு பேரழகை - இன்ப

வளத்தினைச் சூதினிற் பணயமென்றே

கொடியவ ரவைக்களத்தில் - அறக்

கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்”

என் செய்வது? தருமன் தான் முன்பே தடம் மாறி, தன் மனைவியாம் பாஞ்சாலியையும் பணயம் வைத்துப் பகடை உருட்டச் சம்மதித்துவிட்டானே!

இந்தச் செய்தி, பாஞ்சாலிக்குக் கிடைத்தவுடன் அவள் எப்படிச் சினந்தாள்; சீறினாள் என்பதை பாரதியார் பாடுகிற பாங்கு அந்தப் பெண்ணின் உள்ளத்தில் எத்தகைய பெருந்தீ எழுந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ பாஞ்சாலி பேசியதாகப் பாரதி பேசுகிறார் கேளுங்கள்!

“நாயகர் தாந்தம்மைத் தோற்றபின்-என்னை

நல்கு முரிமை அவர்க்கில்லை - புலைத்

தாயத்தி லேவிலைப் பட்டபின் - என்ன

சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்

தாயத்தி லேவிலைப் பட்டவர் - புவி

தாங்குந் துருபதன் கன்னிநான் - நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு

தார முடைமை யவர்க்குண்டோ!”

கணவன் விலை போய் விட்டான். அவனே விலை போன பிறகு; என்னைப் பந்தயத்தில் பணயம் வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்கிறாள் பாஞ்சாலி!

பரிதாபத்திற்குரிய பாஞ்சாலி போன்ற ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாலும் தனக்காகப் போராடக் கூடிய தகுதியுடைவன் தனக்கு முன்பே விலை போய் விட்டானே என்று பாஞ்சாலி குமுறித் துடிப்பதுதான் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதப் பாடல் வரிகளிலேயே சூடு பறக்கும் சுவையான வரிகளாகும். சுயமரியாதை உணர்வு கொண்ட ஒரு பெண்ணின் உரிமை முழக்கமும் ஆகும். பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது தருமன், வீமன், அருச்சுனன் என்ன செய்தார்கள்?

நெட்மை மரங்களென நின்று புலம்பினார்

பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

பாஞ்சாலியின் சபதம் இது:

தேவி திரெளபதி சொல்வாள்-ஓ

தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்

பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்

பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,

மேவி இரண்டும் கலந்து-குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன் யான் –இது

செய்யுமுன்னே முடியேன் என்று உரைத்தாள்!

நாமும் ஒரு சூளுரை எடுத்துக் கொள்வோம். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அந்த இனத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்ற கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில்

இருந்து அகற்றுவோம். அதுவரை விழி மூடோம்! கண் துஞ்சோம் கருமமே கண்ணாய் இருப்போம். வருகிற தேர்தல் நல்ல வாய்ப்பு. அதனை நழுவ விடுவோமா?

நான்கு எதிரிகள் இருக்கும் போது மூன்று எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்து முதலாவது எதிரியை முறியடிப்பதுதான் இராசதந்திரம். மூன்று எதிரிகளோடு சேர்ந்து இரண்டாவது எதிரியை

வீழ்த்துவோம். இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை தோற்கடிப்போம். நான்காவது எதிரியை நாமே தோற்கடிப்போம். தோற்கடிக்க முடியாவிட்டால் நாம் எதற்கும்

தகுதியில்லாதவர்கள்! இது லெனின் சொன்னது. இதைத்தான் நம்ம பெரியார் சொன்னார். "பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி! அப்புறம் பாம்மை அடி என்று சொன்னார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். (குறள் 471)

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் இந்தக் குறள்

சீமானுக்குத் தெரியும். அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கைகொடுப்போம். அவரோடு கை சேர்ப்போம். இடித்துரைக்கும் அமைச்சர் போல் செயல்படுவோம்.

தோழமையுடன்

நக்கீரன்

பரவாயில்லை நாங்கள் முழுப்பேரும் அழிந்து போகின்றோம். உங்களுக்கு ஒரு விடிவைத்தேடிக்கொள்ளுங்கள்.

எருமைப்பால் குடித்து வளர்ந்த இனத்தால் எதுவும் முடியாது.

இந்தியா அழிந்து போகும் வரை அவர்கள் ஒரு விடிவை தேடி கொள்ளமுடியாது.

இதுதான் உண்மை.

காஸ்மீர் தேசம் இன்று சுதந்திரம் பெறுகிறதோ அன்றுதான் அனைத்து இந்தியாவில் உள்ள இனத்திற்கும் விடுதலை நாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.