Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம்

* Sunday, January 30, 2011, 2:55

சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் மேற்கொள்ளப்படள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்.

இன்று இருபது மாதங்கள் கடந்தும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்ட பிரதேசத்தில், புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைள் அனைத்தும் மறுக்கப்பட்டு தமிழ் மக்கள் அரசியல்ரீதியாக முடக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் சிறைபிடிக்கப்பட்டு, நாளாந்தம் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டு தமிழர் பிரதேசத்தில் ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல், கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் மனித மாண்புகள் மறுக்கப்பட்டு.தமிழ் மக்கள் ஒரு திறந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு திரும்பும் இடமெல்லாம் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டு வாழ்கிறார்கள்.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்ட வெகுஜனப் போராட்டங்கலாலும், சர்வதேச சமூகத்திற்கு நாம் கொடுத்த அழுத்தத்தினாலும், பல திருப்பங்களைக் கொண்டுவரமுடிந்தது. குறிப்பாக முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விடுவிப்பதற்கான திறப்பு போராட்டம் (ருNடுழுஊமு வுர்நு ஊழுNஊநுNவுசுயுவுஐழுN ஊயுஆP) போன்ற நடவடிக்கைகளை உலகம் முழுவதும் மேற்கொண்டமையினால் தமிழ் மக்களை அரசு வெளியில் விடுவதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தோம்.

ஆயினும் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்திருப்பதுடன் போர்முடிவடைந்து 20 மதாங்களாகியும் அவர்களது பெயர் விபரங்களை வெளியிட மறுக்கிறது. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களையும், தொடர்ச்சியாக நாளாந்தம் கொல்லப்பட்டு வருபவர்களையும் அரசு கணக்கு காட்டாது தவிர்த்து வருகின்றது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக செயல்ப்பட்டு எமது உறவுகளின் உயிர்களைக் காப்பாற்றுவதோடு இலங்கை தமிழ்மக்களுக்கு மேற்கொள்ளும் வன்கொடுமைகளை உலக அரங்க்கிட்கு நாம் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பெப்பிரவரி 04 அன்று மாலை 15 .00 தொடக்கம் 19.00 மணிவரை லண்டன் நகரின் மையப்பதியில் ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது மூன்று தளங்களில் தொடர்ச்சியாக நகர்த்தப்பட உள்ளது.

1. சர்வதேச மக்களுக்கான வெகுசன கவனயீர்ப்புப் போராட்டங்கள்,

2. அரசியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்களுக்குரிய பரப்புரைப் போராட்டங்கள்

3. மனித உரிமை அமைப்புக்கள், நீதி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவது

போன்ற நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொள்ள பிரித்தானியா தமிழர் பேரவை நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு இனங்களாக தனித்தனியே தம்மைத்தாமே

ஆண்டுகொண்டிருந்த தமிழ் மக்களை சிங்கள பேரினவாதிகளுடன் இணைத்து விட்டு சிங்களவர்களுக்கு சுதந்திரத்தையும், தமிழ் மக்களுக்கு அடிமை வாழ்க்கையையும் ஏற்படுத்திய இந்த நாளில் ( பெப்பிரவரி 04 ) உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாயகத்தில் இன்னமும் தொடர்ச்சியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், சரணடைந்த இளைஞர், யுவதிகளையும் விடுவிக்க கோரி அனைவரும் தெருவில் இறங்கி சர்வதேச மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், கொள்கைவகுப்பாளர்களிடமும் கையெழுத்து பெறும் போராட்டத்தை பெப்பிரவரி 04 அன்று மாலை 15.00 – 19.00 வரை ஆரம்பிக்கவுள்ளோம்.

இப்போராட்டத்தை தொடர்ச்சியாக உக்கிரப்படுத்தி மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அவலப்படும் தாயக மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்த சகலரும் இணைவோம்.

அனைத்து தமிழ் மக்கள் அமைப்புக்கள், தொண்டுநிறுவனங்கள், தமிழ் பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், கோயில்கள் என அனைத்து மக்கள் கட்டமைப்புக்களும் இந்நிகழ்வில் தொடர்ச்சியாக பங்களிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இந்நிகழ்விற்கு அதிகமான தொண்டர்கள், தேவைப்படுவதால் எமது பிராந்திய இணைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

அலுவலகம்: 020 8808 0465

079 5850 7009

074 0475 9029

வடகிழக்கு லண்டன்: 078 3295 4281

வடமேற்கு லண்டன்: 075 3950 1142

தென்மேற்கு லண்டன்: 079 0357 0245

தென்கிழக்கு லண்டன்: 074 0475 9029

லண்டனக்கு வெளியே: 079 2702 3912

மின்னஞ்சல்: admin@tamilsforum.com

tamilthai.com

நாம் செய்யும் ஒவ்வொரு போராட்டமும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் இடம் பிடிக்குமானால்....

போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்....இல்லையேல் சிரத்தையுடன் நடாத்தப்படும் எந்தவொரு போராட்டமும் அரசாங்கத்துக்கு கொடுக்கும் சிறிய அளவிலான நெருக்கடிகளுடனேயே முடிந்து போகும்....

நாம் செய்யும் ஒவ்வொரு போராட்டமும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் இடம் பிடிக்குமானால்....

போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்....இல்லையேல் சிரத்தையுடன் நடாத்தப்படும் எந்தவொரு போராட்டமும் அரசாங்கத்துக்கு கொடுக்கும் சிறிய அளவிலான நெருக்கடிகளுடனேயே முடிந்து போகும்....

-- இன்று உலகம் முழுக்க புலம் பெயர் எகிப்தியர்கள் நூறு பேர் கூடி ஒரு ஆர்ப்பாட்டம் செய்தாலும் மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் முக்கியம் கொடுத்து வருகின்றன. முப்பது வருடங்களாக இல்லாத "கரிசனை" திடீர் என வர என்ன காரணம்?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80894

-- இரண்டு மில்லியன் மக்களை முப்பது வருட போராட்டத்தில் இழந்த தென் சூடான் இன்று ஒரு சுதந்திர நாடாக மலர உள்ளது.

தமிழர்களும் தம்மாலான முயற்சிகளை தொடர்ச்சியாக சளைக்காமல் எடுத்து எமது விடுதலை உணர்வை தக்க வைத்தல் வேண்டும். உலகத்தமிழர் பேரவை (பிரித்தானிய பேரவை), நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புக்களுக்கு உதவியும் ஒத்தாசையும் தர வேண்டியது எமது தார்மீக கடமையாகின்றது.

காலம் கனியும் பொழுது, சர்வதேசம் எமது பக்கம் சாய எண்ணும்பொழுது எமது இலட்சி வேட்கை இலக்கை அடையும்! அதுவரை மனம் தளராமல் ஒற்றுமையாக, விவேகத்துடன் செயல்படல் வேண்டும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.